Saturday, March 04, 2006

34.பிரபந்த இலக்கணம்

பிரபந்த இலக்கணம் தொகுத்தளித்தது எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்


பிரபந்த இலக்கணம்
பொருத்தங்கள் அல்லாத மற்றொரு வகைப்பிரிவு, பிரபந்தங்களின் அமைப்பினைப் பற்றிக் கூறுவதாகும். தொல்காப்பியர், ஓரளவு குறிப்பாகச் சுட்டிச் சென்ற இலக்கியப் பாகுபாடுகளைக் கால வளர்ச்சியில் விரித்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பணியில் பாட்டியல் நூல்கள் தொல்காப்பியர் காலத்தில், 42, செய்யுள் வகைகள் இருந்தன. அவர் காலத்தில் பரந்துபட்ட அளவில் பல்வேறு வகைத் தனி இலக்கியங்கள் இல்லை. ஆயினும், அத்தகைய இலக்கியங்கள் காலப்போக்கில் தோன்றுதல் கூடும் என்பதனை அறிந்தே விருந்து என்னும் வனப்பினை அமைத்துள்ளார். பிற்காலத்தில் பல புதிய இலக்கிய வகைகள் பழமையின் அடிப்படையில் தோன்றின. இதற்கு ஏற்பப் பாட்டியல் நூல்கள், அதன் அமைப்பையும் ஒழுங்கையும் ஆராய முற்பட்டன.


பாட்டியல் நூல்கள்
இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாட்டியல் நூல்கள் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், இலக்கண விளக்கத்துள் அமைந்த இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன. மேலும் முத்துவீரியத்துள்ளும், தொன்னூல் விளக்கத்திலும் பாட்டியலைக் காண்கிறோம். பிரபந்ததீபிகை என்னும் நூலும் பாட்டியலே ஆகும். இவையன்றி வாருணப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், அகத்தியர் பாட்டியல், மாமூலர் பாட்டியல், பாட்டியல் மரபு, பிரபந்ததீபம், பிரபந்தத்திரட்டு முதலிய நூல்கள் பற்றியும் சில சில குறிப்புக்கள் கிடைத்துள்ளன. பன்னிருபாட்டியல் முதலிய நூல்கள் பற்றிய செய்திகளை, அவ்வந்நூல் பற்றிய தலைப்பில் காண்க. அங்கு ஒவ்வொரு நூலின் சிறப்பியல்புகளையும், அமையும் முறைகளையும் குறித்துள்ளேன்.


பாட்டியல் கூறும் பிரபந்தங்கள்
பன்னிரு பாட்டியலில் 65 இலக்கியங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த வெண்பாப் பாட்டியலில் 56 இலக்கியங்களைப் பற்றிய இலக்கணம் உள்ளது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நவநீதப் பாட்டியலில் ஏறத்தாழ 97 இலக்கிய வகை பற்றிய விளக்கம் அமைந்துள்ளது. இவற்றை நோக்கும் போது கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை இலக்கிய வகையில் வரையறை எதுவும் ஏற்படவில்லை என்பது புலனாகின்றது. இலக்கிய உலகில் காணப்பட்ட இலக்கியங்களுக்கு எல்லாம் பாட்டியல் ஆசிரியர்கள் இலக்கணம் அமைத்தனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஒருவாறு இவ் இலக்கியங்களுக்கு வரையறை ஏற்பட்டது என்று நினைக்க இடமுண்டு. கி.பி. 1635-இல் வாழ்ந்தவனாகக் கருதப்படும் சிவந்தெழுந்த பல்லவராயன் மீது பாடப்பெற்ற உலாவில்,

`தொண்ணூற்றாறு
கோலப்ர பந்தங்கள் கொண்டபிரான்'

என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரித்துக் காணும் மரபு ஏற்பட்டது என அறியலாம். கி.பி. 1732-இல் வீரமாமுனிவரால் இயற்றப் பெற்ற தொன்னூல் விளக்கத்திலும் சதுரகராதியிலும் 96 பிரபந்த வகைகள் காணப்படுகின்றன.. இவ்வகராதிக்கு முற்பட்டது எனக் கூறும் பிரபந்த மரபியல் என்னும் நூலில்,

`பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத்
தொண்ணூற் றாறுஎனும் தொகையதாம்'

என்று 96 வகைப் பிரபந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன, ஆனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கண விளக்கப் பாட்டியலிலும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த சிதம்பரப் பாட்டியலிலும் 96 என்ற வரையறை காணப்படவில்லை. இலக்கண விளக்கப் பாட்டியல் 68 இலக்கியப் பிரிவுகளையும், சிதம்பரப் பாட்டியல் 62 இலக்கியப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன. பிரபந்த தீபிகையில் 97 பிரபந்தங்கள் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நோக்கும்போது, கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை 96 இலக்கியம் என்ற வரையறை ஏற்படவில்லை என்பதும், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிவந்தெழுந்த பல்லவராயன் காலத்தில் 96 என்ற பகுப்பு ஏற்பட்டது என்பதும் இவ்வரையறையைச் சிலர் தழுவினர், சிலர் தழுவ வில்லை என்பதும் புலனாம். மேலும் 96 வகைப் பிரபந்தங்களுக்கும் அடங்காமல் அம்மானை, அலங்காரம், வண்ணம், வில்பாட்டு, புலம்பல், தென்பாங்கு, சிந்து, சீட்டுக் கவி என்பன ஆதியாக எண்பதுக்கு மேற்பட்ட புதிய இலக்கியங்கள் உள்ளன. இதனை நோக்கும்போது வளர்ந்து வரும் சமுதாயத்தில் இலக்கிய ஆக்கம் இவ்வளவுதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது என்பது விளங்கும்.


||||||| தி.மு.க வலை தளத்திலிருந்து எடுக்கப்பட்டது |||||||

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.

இலக்கியமும் இலக்கணமும்
இலக்கியம் தாய்; இலக்கணம் சேய். இலக்கியம் தேமாங்கனி; இலக்கணம் தீஞ்சுவைச்சாறு. இலக்கியம் பெருவிளக்கு; இலக்கணம் அதன் ஒளி. இலக்கியம் எள்; இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை-பிணைப்பு முறையை நம் முன்னோர் நன்கு அறிந்து தெளிந்திருந்தனர்.
இதனாலேயே,

`இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.'

எனக் கூறிப் போந்தனர். எனவே, இலக்கியப் பெருந் தருவின் நிழலில் எழுந்து நிற்பதே இலக்கணம் என்பது பெறப்படும். இலக்கியமும் இலக்கணமும் வேறுபட்ட நிலையுடையன அல்ல; ஒருவழிப்பட்ட ஒற்றுமையுடையனவே ஆகும்.


இலக்கணத் தோற்றம்:
இலக்கியம் பலவாய்ப் பல்கிப் பெருகி வளரத் தலைப்படும் காலத்தில் மொழியினை ஒழுங்கு படுத்த எண்ணும் மூதறிவாளர் கண்ட முறையே இலக்கணமாகும். இவர்கள், தாம் வாழும் காலத்திற்கும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து வகைப்படுத்திக் கூற முயல்வார்கள். இம்முயற்சியின் விளைவே இலக்கணத் தோற்றம் எனலாம். தொல்காப்பியர் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி இலக்கணம் வகுத்தார் எனச் சிறப்புப் பாயிரம் செப்புகின்றது. பாணினிமுனிவர், வேதம் முதலிய வடமொழி நூல்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றின் சாரத்தைப் பிழிந்து பாணினியமாக வடித்துக் கொடுத்தார் என்று கூறுவர். எனவே நூல்கள் பல எழுந்த பின்பே நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றைக்கொண்டு இலக்கியங்களின் மொழியமைப்பைக் கொண்டு மட்டும் இலக்கணம் தோன்றியது என முடிவு கட்டி விடுதல் கூடாது. இலக்கணத் தோற்றும், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. வழக்கு மொழியின் வாழ்வையும் வளத்தையும் மதித்து அதனையும் தழுவி ஒழுகும் உயர்வுடையது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், `வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித்' தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது என அந்நூலின் இயல்பினை எடுத்துரைக்கின்றது. இலக்கணப் புலவர்கள் இலக்கிய அமைப்பினை மட்டும் தழுவி, உலக வழக்கினை உதறித் தள்ளிவிட வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்கள் அல்லர். அவர்களது பரந்த நோக்கமெல்லாம் மொழி ஒரு திறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதே. இதனால், அவர்கள், தம் காலங் கடந்த புலமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வாழாமல், இரு வேறு வழக்கின் இயல்பினையும் அறிந்து ஏற்பன ஏற்றுத் தள்ளுவன தள்ளி இலக்கணப் படைப்புக்களை ஈந்துள்ளார்கள்.


இலக்கணம் - சொல்லாராய்ச்சி
இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்னும் வடமொழிச் சொல்லின் சிதைவு என்பர். ஆனால் வடமொழியில் நாம் கருதும் இலக்கணத்தை லக்ஷணம் என்று சொல்வதில்லை. வியாகரணம், சப்த சாஸ்திரம் என்று கூறுவார்கள். இதனால் இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்பதன் சிதைவு என்பது பொருந்தாது. இலக்கு என்னும் தமிழ்ச்சொல், அணம் என்னும் விகுதிபெற்று இலக்கணம் என ஆயிற்று என்று கோடலே பொருந்தும். இச்சொல் சிறந்த தமிழ்ச்சொல்லே; இலக்கணம் என்ற சொல்லினை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரே ஆவர். இவர், இச்சொல்லினை, `பல பொருளை உய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை' என்ற பொருளிலேயே ஆட்சி செய்துள்ளார். சிலர், புலம் என்னும் சொல், தமிழ் இலக்கணத்தைக் குறிக்கும் என்பர். இதற்குச்சான்றாகப் `புலம் தொகுத்தோனே போக்கறுபனுவல்' என்னும் பனம்பாரனார் கூற்றைக் காட்டுவர். வேறு சிலர், இயல் என்பது இலக்கணத்தினைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பர்.


இலக்கணத்தால் ஏற்படும் நன்மை
இலக்கணத்தை ஏன் படிக்க வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்று இன்று சிலர் கேட்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்ற விடையினை அளிக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.


இலக்கணத்தால் என்ன நன்மை என்பதற்கு ஆறுமுக நாவலர் அவர்கள், பிழையறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம் என அழகாக விடை கூறியுள்ளார்கள். மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படும் கருவிகளுள் எழுத்தும் பேச்சும் தலைசிறந்தன. இவ்விரண்டுமின்றேல் வாழ்வேது? வளர்ச்சியேது? இத்தகைய வாழ்வோடு இணைந்த பேச்சினையும் எழுத்தினையும் ஒழுங்குபடுத்தித் தரும் சாதனமாக இலக்கணம் இலங்குகின்றது.

எழுத உதவுவதோடு படிக்கவும், உதவுவது இலக்கணமாகும். இலக்கண அறிவு இன்றேல் ஒரு நூலையும் நாம் படித்தல் இயலாது. இந்த முடிபு, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அவ்வளவு எளிதில் புலப்படாது. ஏனெனில், தமிழ், வழக்கில் இருக்கும் வளமான மொழி. ஆனால் வடமொழி, இலத்தீன், கீரீக் முதலியவற்றில் உள்ள நூல்களை உணர வேண்டுமாயின், இலக்கண அறிவு மிகமிக இன்றியமையாததாகும். அப்பொழுதுதான், அம்மொழிகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பொருளினைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதும் இலக்கணம் ஆகும். இம்முறையில் இலக்கணம் செய்யுள் வழக்குக்கு மட்டுமன்று; பேச்சு வழக்குக்கும் இன்றியமையாதது என்பதனை அறிதல் வேண்டும். உதாரணமாக ஒன்றனைக் காண்போம். வாழைபழம் என்பதற்கும் வாழைப் பழம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. வாழைபழம் என்பது, வாழையும் பழமும் என உம்மைத் தொகையாகப் பொருள்படும். வாழைப்பழம் என்பது வாழையினது பழம் என வேற்றுமைத் தொகையாகப் பொருள்படும். இந்த வேறுபாட்டுணர்ச்சியை அறிந்து கொள்ள இலக்கணம் உதவுகின்றது; நன்மை செய்கின்றது.

மொழியினைக் கட்டிக்காத்துச் செம்மொழியாக்கும் பேராற்றலும் இலக்கணத்திற்கு உண்டு. ஒரு மொழி, பல்வேறு கிளை மொழிகளாகப் பிரிந்து போய்விடாமல், ஒருமொழி என்ற கூட்டுக்குள் நிறுத்திவைக்க இலக்கணம் முயல்கிறது. இப்பணியில் இலக்கணம் மன்னவனைப் போல ஆட்சி செய்கிறது. தமிழைப் பேசுவோர் எங்கிருந்தாலும், எவ்வாறு பேசினாலும் எழுத்துலகில் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறோம். பேச்சு மொழி புரியாவிடினும் எழுத்து மொழி இனிமை தரப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், எழுத்து மொழியில் ஏற்பட்ட ஒற்றுமையேயாகும். இவ்வொற்றுமை இலக்கணத்தால் விளைந்தது எனலாம். இலக்கணம் மட்டும் இல்லாதிருக்குமானால், இன்றிருக்கும் பேச்சுத்தமிழ், எத்துணையோ கிளைமொழிகளாகத் தனித்தனி புரிந்து விடும். இந்தப் பிரிவைத் தடுத்து, ஒற்றுமையை நிலை நிறுத்துவது இலக்கணமாகும். இக்கொள்கையினைச் சில மொழி நூலார்கள் ஒப்பமாட்டார்கள். பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் கண்டு அதனையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் `பேச்சுத் தமிழ்க் காதல்' எத்தகையது என்பது புரியவில்லை. தமிழில், எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் இடைவெளி கொண்டவனாய், இருவேறு மொழிகள் போன்றனவாய்ச் செல்லவில்லை. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்டே செல்கின்றன. மேலும் பேச்சுத் தமிழ், சார்ந்திருக்கும் இடத்தால் வேறுபாடு சிறிது அடைந்துள்ளது. இப்பேச்சுத் தமிழினை அப்படியே எழுதுதல் வேண்டும் என எண்ணி எழுதியவர்கள் ஏற்றம் பெறவில்லை; வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பேச்சுத் தமிழை வளர்த்து அதனால் பல கிளை மொழிகள் உருவாக மொழியியலார்கள் வழி வகுத்துக் கொடுத்து விடுதல் கூடாது.

இலக்கணம் சட்டமா?
இலக்கணம் மொழியின் சட்டம்; அதன்படி நடக்க இயலாது எனக் கருதிச் சிலர் அஞ்சுகின்றனர். மற்றும் சிலர், இலக்கணம் சட்டமே; அது வாழ்வின் உயிர்நாடி எனக்கருதி அடிமையாகின்றனர். முன்னவர் மொழியறியாதவர்; பின்னவர் வாழ்வறியாதவர். இலக்கணத்தினைக் கண்டு அஞ்ச வேண்டியதும் இல்லை. இலக்கணத்திற்கு அடிமையாக வேண்டியதும் இல்லை. இலக்கணம் மொழியின் பிரிவு; கலங்கரை விளக்கம்; சட்டமன்று. சட்டம் இவ்வாறு நட, இன்றேல் குற்றம் என ஆணையிடும். இலக்கணம் ஆணையிடாது. இவ்வாறு செல்லுதல் மரபு; இதனை விலகியும் தேவை வரும்போதும் செல்லலாம் எனத் துணை நிற்கும்.

இலக்கணத்தை அரசியல் சட்டம் போல ஆக்குவோர் மொழியின் நிலையறியாதவரே ஆவர். இவர்களால் ஏதும் செய்ய இயலாது; எழுதவும் இயலாது. சிறந்த இலக்கணப் புலவன் எழுத்தாளனாக முடியாது என்று இயம்புவார்கள். இது முற்றிலும் உண்மை. இலக்கணத்தை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு சட்டம் என எண்ணிக் கொண்டு பேசவும் எழுதவும் முற்படுவோர், பேசவும் முடியாது; எழுதவும் முடியாது. அவ்வாறு இலக்கண அளவுகோலைக் கொண்டு எழுதவும் பேசவும் துணிந்து விடுவார்களேயானால், அவர்கள் பேசும் பேச்சில், எழுதும் எழுத்தில் உயிர் இருக்காது; அமைப்பு இருக்கும்; அழகு இருக்காது. இதனால்தான், `காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று' எனச் சொல்லி வைத்தார்கள். யாப்பிலக்கணத்தை வைத்துக் கொண்டு, ஒருவன் கவிதையாக்கத் தொடங்கினால் அக்கவிதை, கவிதையாகாது. எலும்புச் சட்டகமாய் விடும்.

இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லுவோர் எழுத்திலும், பேச்சிலும் அவர்களையறியாமலே இலக்கணம் அமைந்துள்ளது. எழுத்திற்கும் பேச்சிற்கும் ஏற்ற அமைப்பு முறை இன்றேல், வனப்பிருக்காது. ஆற்று வெள்ளம், கரைக்கு உட்பட்டுச் செல்லுமானால் கவின்பெறும்; இன்றேல் தாறுமாறாக ஓடிச் சென்று வறண்டொழியும். இலக்கணம் வெள்ளத்திற்கு இடும் கரை; கரை வேண்டாம் எனச் சொல்வோர் வளம் வேண்டாம் எனச் சொல்லுபவர் ஆவார். இவர்களே இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லி உள்ளம் சாம்புபவர்கள். இவர்கள் இலக்கணம் சட்டமன்று; அமைதி நெறி என உணர்ந்தால் இவ்வாறு கூற மாட்டார்கள்.

இலக்கணம் என்றும் ஒரே இயல்பினதாய் இருக்க வேண்டும் என எண்ணி இறுமாந்தவர்கள் அல்லர் நம் முன்னோர். மொழியின் வாழ்வும் கால வெள்ளத்தின் போக்கும் அறிந்தவர்கள்; மொழி உயிருள்ளது; வளரும்; மாறும் எனக் கண்டவர்கள். இதனால் இலக்கணம் செய்யும்போது, புறனடை அமைத்துப் போந்தார்கள். நன்னூலார், `பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனக் கூறுவார். இத்தகைய இலக்கணம் நம்முன்னோர் அறிந்து தெளிந்து அமைத்த மொழியமைப்பு என்றும் யாவரும் ஏற்றிப் போற்றும் இயல்பில் அமைந்தது ஆகும்.


தமிழ் இலக்கணம்
தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடு களையுடையது. முத்தமிழ், எனப் போற்றும் பெருமையுடையது. `முத்தும் முத்தமிழும் தந்து முந்துமோ வானுலகம்?' என இறுமாப்போடு கேட்பார் கம்பர். இம்முத்தமிழுக்கும் இலக்கணம் கண்டனர் நம்முன்னோர். கிடைக்காத அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணமும் அமைத்தனர். ஆயினும் இயற்றமிழ் இலக்கணமே, இலக்கணம் என்னும் பெயருக்குத் தனியுரிமை பூண்டதாய் விளங்குகின்றது.


இயற்றமிழ் இலக்கணம்
செய்யுளும் உரைநடையும் ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். இப்பிரிவில் இலக்கியமும் அடங்கும். இலக்கணமும் அடங்கும். செந்தமிழால் இயன்ற செய்யுள்களும் உரைநடையும், கொடுந்தமிழால் அமைந்த செய்யுள்களும் உரைநடையும் இயற்றமிழே ஆகும். இத்தமிழின் இலக்கணத்தையே தமிழ் மக்கள் பெரிதும் வளர்த்துள்ளனர். தமிழின் உயிர்க் கிழவன் தொல்காப்பியன் இத்தமிழுக்கே இலக்கணம் கண்டான்.


இலக்கணப் பிரிவு
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று பிரிவில் இலக்கணங்களைக் கூறியுள்ளார். இம்மூன்றினையும் மூன்று இலக்கணம் எனக் கொள்வோம். தொல்காப்பியப் பொருளதிகாரம் மிக விரிவுடையது. இப்பகுதியில், பொருள், உவமை, யாப்பு என்பன பற்றியும் கூறுகின்றார். இம்மூன்றினையும் பொருளிலக்கணம், அணியிலக்கணம், யாப்பிலக்கணம் என மூன்று தனி இலக்கணங்களாகக் கொண்டால் எழுத்தும், சொல்லும் இயையத் தொல்காப்பியம் ஐந்திலக்கண நூல் ஆகும். ஐந்திலக்கணமாவன: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன. தொல்காப்பியம் ஐந்திலக்கணமாகக் கருதப்படுவதும் உண்டு என்பது, பேராசிரியர், `யாப்பதிகாரம் எனச் செய்யுளியலைப் பிறர் கூறுவர்' என்ற காட்டுதலாலும், சேனாவரையர் `உவமையியலை அணியியல்' எனச் சுட்டுதலாலும் பெறப்படும். இவ் ஐந்திலக்கணத்துள் ஒரு பகுதியான பொருளை அகப் பொருள், புறப்பொருள் என இரண்டாகக் கொண்டால் ஆறு இலக்கணம் என்று கூடக் கூறலாம். பிற்காலத்தில் வளர்ந்த பாட்டியலைச் செய்யுளின் ஒழிபு எனக் கொண்டு, செய்யுளிலக்கணம், பாட்டியலிலக்கணம் என இரண்டாகப் பிரித்து, ஏழு இலக்கணம் என்று கொள்வது, பெரிதும் தவறாகிவிடாது. இன்று தமிழில் ஏழு இலக்கணங்களும் காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் காண்போம். தொல்காப்பியருக்கு மூன்று இலக்கணமாகக் கொள்வதே உடன்பாடு என்றும் ஐந்திலக்கணமும் உடன்பாடு அன்று என்றும் கூறுவர்.


ஐந்திலக்கண நூல்கள்
தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூறுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம்.


எழுத்தும் சொல்லும்
தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல்லுமே சிறப்பாகக் கருதத் தக்கன என எண்ணினர். இந்நிலையில் எழுத்தும் சொல்லும் பற்றி மட்டும் இலக்கணங்கள் தோன்றின. கி.பி. 12-ம் நூற்றாண்டளவில் எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நேமிநாதம் தோன்றியது. நன்னூல் கி.பி. 13-ம் நூற்றாண்டில் எழுந்தது. இந்நன்னூல் ஐந்திலக்கணமும் உணர்த்துவது எனக் கொண்டாலும், எழுத்தும் சொல்லுமே நிலைத்தன.

எழுத்தும் சொல்லும் இலக்கணமேயாயினும் சொல்லிலக்கணமே இலக்கணம் எனக் கருதினர். வடமொழி வாணர்கள் சொல்லிலக்கணத்தையே வியாகரணம் எனக் கொண்டனர். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் சொல்லக்கணத்தையே பெரிதும் ஆராய்ந்தன. கி.பி. 17-ம் நூற்றாண்டில் எழுந்த பிரயோக விவேகமும், இலக்கணக் கொத்தும் சொல்லிலக்கணம் பற்றியே விரிவாக விளக்கின.

எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன.

அகப்பொருள் இலக்கணம்
பொருளதிகாரம் கிடைக்காததால் எழுந்த இலக்கண நூலே இறையனார் களவியல் என அந்நூல் உரை கூறுகின்றது. இறையனார் களவியல் தோன்றிய காலத்தில் எழுத்தும் சொல்லும், யாப்பும் கிடைத்தன. பொருள் கிடைக்கவில்லை; ஆதலால் இறையனார் களவியல் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அறிகிறோம். இக்காலத்தில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்கு வகையாக ஆராயப்பட்டது என்று தோன்றுகிறது. மேலும் பொருள் என்பது அகப்பொருளே என்பதும் நாம் அறியவேண்டும். பொருளதிகாரம் வல்லாரைக் காணோம் என்று வருந்தியவர்கள் இறையனார் களவியல் கண்டனம் என அகப்பொருள் இலக்கணத்தையே பொருளாகக் கருதினர். இறையனார் களவியல் தோன்றிய காலமுதலே அகப்பொருள் தனியாக வளரத் தொடங்கியது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் நம்பியகப் பொருள் தோன்றியது. இந்நூலுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் திருக்கோவையாரில் அகப்பொருள் துறைகள் அமைந்த சூத்திரங்களும், துறைகளை விளக்கும் கொளுக்களும் காணப்படுகின்றன. இவை, யாரால் இயற்றப்பட்டன என்று புலனாகவில்லை. பின்வந்த பழனிக்கோவையிலும் இவ்வமைப்பு காணப்படுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மாறனகப்பொருள் தோன்றியது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இலக்கண விளக்கம், தொல்காப்பியத்தினையும் நம்பியகப் பொருளையும் பின்பற்றி அகப்பொருள் இலக்கணம் வகுக்கின்றது. முத்துவீரியம், தொன்னூல் விளக்கம் என்பனவும் அகப்பொருள் இலக்கணத்தினைக் கூறின. இறையனார் களவியலை ஒட்டிக் களவியற்காரிகை என்னும் நூலும் இயற்றப் பெற்றது. பரிமேலழகர் முதலியோருக்கு முற்பட்ட இந்நூல், அகப்பொருள் இலக்கணம் உணர்த்துகின்றது.

தொல்காப்பியர், அகப்பொருள் இலக்கணத்தினை வகுக்கும்போது, ஒவ்வொரு பாடலும் ஒன்றற்கொன்று தொடர்பின்றித் தனித்தனி நாடக பாத்திரங்களின் கூற்றாக அமைந்த நிலைக்கே இலக்கணம் கூறுகின்றார். இதனால் தொல்காப்பியத்தில் கூற்று உண்டேயன்றித் துறையில்லை என அறியலாம். பின் வந்தோர் நாடக பாத்திரம் பேசுதல்போல அமைந்த நிலையினின்றும் வேறுபட்டுத், துறைகளாகப் பகுத்து, ஒரு தொடர்கதை போல இலக்கணம் கண்டார்கள். இதனால் பல கோவை இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்தன.

அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்கள்: தொல்காப்பியம், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், வீரசோழியம், நம்பியகப்பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன. இவையன்றித் திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் உள்ள நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுகின்றன.


புறப்பொருள் இலக்கணம்
தொல்காப்பியம் புறத்திணையியல், புறப்பொருள் இலக்கணம் பற்றிப் பேசுகின்றது. இதன்பின் பன்னிருபடலம் எழுந்தது. பன்னிரு படலத்தின் வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் பின் தனியாகப் புறப்பொருள் நூல்கள் தோன்றவில்லை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பன ஓரளவு புறப்பொருளைப் பற்றிய இலக்கணம் கூறுகின்றன. வீரசோழிய உரைகாரர் மேற்கோளாகக் காட்டும் புறப்பொருள் பற்றிய நூற்பாக்கள் தனி நூலைச் சார்ந்தனவா? அவர் பாடியனவா? என்பது தெரியவில்லை.

புறப்பொருள் இலக்கணத்தைப் பொறுத்தமட்டில் புறப்பொருள் வெண்பாமாலையே சிறப்புற்று விளங்குகின்றது. வேறு புறப்பொருள் இலக்கண நூல்கள் தோன்றாமைக்கு உரிய காரணம் விளங்கவில்லை. ஒரு வேளை, காதல் பாடல்களும் - ஆன்மீக இலக்கியங்களும் போதும் என நினைத்தார்களோ, என்னவோ? அறியோம். புறப்பொருள் இலக்கியங்களும் மிகுதியாகத் தோன்றவில்லை என்பதனை இங்கு நாம் சிந்தித்தல் வேண்டும். பொதுவாக மனிதனை விலங்காகவும் மனித இதயத்தைக் கல்லாகவும் ஆக்கக்கூடிய போர் முறைகளில் கவிஞர்களுடைய உள்ளம் யாப்பிலக்கணம்

தொல்காப்பியம் செய்யுளியல் மிக விரிவுடையது. இவர் காலத்திலேயே பலர் யாப்புப் பற்றித் தனியாக ஆராய்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் பல இடங்களில் `யாப்பறி புலவர்' எனச் சுட்டுதல் இதற்குச் சான்றாகும். தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் எனக் கூறும் காக்கைப்பாடினியார் யாப்பிலக்கணம் செய்ததாக அறிகிறோம். காக்கைப்பாடினியார் என்னும் பெயருடையார் இருவர், சிறுகாக்கைப்பாடினியம், பொருங்காக்கைப்பாடினியம் என்னும் இரண்டு நூல்கள் இயற்றினர். இவர்கள் பல்லவர் காலத்தினர் என்பர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கலமும். யாப்பருங்கலக் காரிகையும் தோன்றின. இந்நூலுரைகளால் பல யாப்பிலக்கண நூல்களை அறிகிறோம். அவற்றை நூலின் இறுதியில் உள்ள பட்டியலில் காண்க.

பாவிற்கு இலக்கணம் கூறுதற்குப் பதிலாக அப்பாவின் வகைகளுக்கு எடுத்துக் காட்டும் விளக்கமும் அளிக்கச் சில நூல்கள் தோன்றின. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு என்பன இத்தகைய நூல்கள். விருத்தப்பாவியல் என்ற நூல், சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. இது, வசனத்தில், விருத்தத்தை வடமொழி மரபு பற்றி ஆராயத் தொடங்கியது. வண்ணங்களின் இலக்கணம் கூறும் நூலினைத் தண்டபாணி சுவாமிகள் `வண்ணத்தியல்பு' என்னும் பெயருடன் செய்தார். இந்நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

செய்யுள் இலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், யாப்பருங்கலம், காரிகை, வீரசோழியம், பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், திருவலங்கற்றிரட்டு, பல்சந்தப் பரிமளம், விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு முதலியன.


அணியிலக்கணம்
தொல்காப்பியர் உவம இயலில் உவமைக்கே முதலிடம் கொடுத்தார். இவ்வுவமையின் வேறுபாடுகளே ஏனைய அணிகள் என்பது அவர் கருத்து. பிற்காலத்தில் அணியிலக்கண ஆராய்ச்சி விரிந்தது. வடமொழியின் பயனால், இவ்வாராய்ச்சி பரந்துபட்டது. வடமொழிக்காவ்யாதர்சத்தை அடியொற்றித் தமிழில் தண்டியாசிரியர் அணிநூல் செய்தார். அவருக்கு முன் அணியியல் என்னும் பெயரால் நூல் ஒன்றும் இருந்தது. வீரசோழிய ஆசிரியர் 35 அணிகள் பற்றி விளக்குகின்றார். தண்டியலங்காரமும் 35 அணிகள் பற்றிக் கூறுகின்றது. ஆனால் வீரசோழியமும் தண்டியலங்காரமும் கூறும் அணிகளில், சில வேறுபாடுகள் உள்ளன. இலக்கண விளக்க நூலாசிரியர், தண்டியாசிரியரைப் பின்பற்றி 35 அணிகளே கொண்டார். மாறனலங்காரம் 64 அணிகளைப் பற்றிக் கூறுகின்றது. வடமொழிச் சந்திராலோகத்தையும் அதன் உரையான குவலயானந்தத்தையும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்த்தனர். இவை 100 அணிகள் பற்றிப் பேசுகின்றன. முத்துவீரியம் 58 அணிகள் பற்றிக் கூறுகின்றது.

அணியிலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்�

கடவுளும் காதலியும் ஒண்ணு

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் கவிஞர்கள் காழியூரான்,அரவிந்த லோசனன்,அரங்கர் எழுதிய கலக்கல் கவிதைகள்

நீ எல்லாமாய் இருந்தும்
இல்லாமலிருக்கிறாய்
கண்ணில் பட்டும்
காணாமல் இருக்கிறாய்
எட்ட இருந்தும்
கிட்டத்து உறவு என்கிறாய்
தெரிந்தும்
தெரியாமலிருக்கிறாய்
அறிந்தேன் என்று சொல்லுமுன்
அரிதாய் சிரிக்கிறாய்
அதனால் சொல்வேன்
கடவுளும்
காதலியும்
ஒண்ணு.

முற்றத்துக் கவிராயர் (அரவிந்த லோசனன்)

தேடுவது எதுவென்று
அறியாமல்
தேடிக்கொண்டு
இருக்கின்றேன்
கிடைப்பது கிடைத்தாலும்
தேடியது நிற்குமா?
தேடுவது பழகிப்போய்
தேடுவது தொடருமோ?
தேட வேண்டியதை விட்டு
தேடலை தேடுகிறேன்.
தேடலே தேவையானால்
தேடல் அவசியம்தானா?

காழியூரன்

காழியூரானின் இக்கவிதைக்கு அரங்கர் எழுதிய பதிலுரை

தேடுக தேட்டை ஒழிக்கும் தேட்டையை
தேட்டை கிட்டிடின் வாழ்நாள் முற்றும்
வேட்டை! வேட்டை! வேட்டை!

தேடிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் நிலைசொல்வ தெவ்வாறே.

அஹம் போதகம் நைவ ப்ஹோக்தம் ந ப்ஹோக்தா
சித்தானந்த ரூபஸ் சிவோஹம்! சிவோஹம்!
---------- நிர்வாண ஷட்கம்.

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.
------- வள்ளலார்.

-----------
அரங்கன்.

32.நடிகன் இன்று மாறியாச்சு

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் எங்கள் கண்மணி அரங்கர் எழுதிய கவிதை

நடிகன் என்று மாறியாச்சு
பவுடர் பூசிப் பூசிக் கூச்சம்போச்சி"

ன்னு நம்ம கொங்கு நாட்டு அண்த்தே சொல்வாரு.

ஆனா இது நம்ம பெர்யா அண்த்தே செவாலியே சிவாஜி கணேசனை மன்சுல நென்ச்சிக்கின்று அவர் எற்ந்த கால்த்துக்குப் பக்த்தால எய்துனது.

நேபகப் பட்த்தும்படிப் படுத்துகிறேன்..:)

================================================


நடிகன்
----------

சிலைகள் அரிதாரம் பூசி,
சித்திரங்கள் நடந்தாற் போல்,

மெல்லச் சிரித்து, மெதுவே மூச்சுவிட்டு,
ஓங்கிக் குரலெடுத்து, ஒய்யாரமாய் நடந்து,
வீங்கிய சொற்களோடு, விண்ணதிர நடந்து,

அழுது புலம்பி, ஆர்ப்பாட்டம் பலசெய்து,
முகத்தினுள் நுண்ணுணர்வுகள் பலகாட்டி,

காண்போர் உருவெல்லாம் காட்டும்
கண்ணாடிபோல்,

மனத்தகத்து மலிந்த உணர்வுகளின்
உருவங்களை
மாறாது காட்டி,

மனது ஒரு நிலை நின்று,

தானென்ப தறத் தன்னை மறந்து

வேற்றுமுகம் பல காட்டி

நிகழ்வுகளில் நிலைத்து நிற்கும்
நன்னயமுடையவன்
நடிகன்.

06.06.2001.

Friday, March 03, 2006

என் காதலியின் காதலனே...

முத்தமிழ் குழுமத்தில் விழியனின் படைப்பு

அன்பு நண்பனே,
நலம் நலம் அறிய ஆவல். யார் இது இந்த முகம் தெரியாத நண்பர் நம்மை விசாரிக்கிறாரே என்ற ஆர்வம் உங்கள் கண்களில் தெரிகின்றது. நான் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவன் தான். நீங்கள் இருக்க நினைத்த இடத்தில் இன்று நிற்கின்றேன். இன்னும் புரியவில்லை. விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

காதல் எப்படிப்பட்ட மனிதனையும் விட்டுவைப்பதில்லை. நீங்களும் நானும் அப்படியே. அரும்பு மீசையில் இது காதலா, அல்லது கவர்ச்சியா என்று கூட தெரியாமல் காதலித்ததுண்டு. நீங்கள் முதன்முதலாய் நேசித்தது நான் மணக்கப்போகும் பெண்ணைத்தான். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே. யார் தான் காதலிக்கவில்லை? காதலித்த அனைவரும் அதே சமயம் ஒன்றாய் இணையும் சந்தர்ப்பமும் அமைவதில்லை. எந்த மனிதனை வேண்டுமானாலும் கேளுங்கள் மனதின் ஏதாவது இடுக்கில் தன் முதல் காதல் அனுபவங்களை அசைப்போட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக தற்போது சந்தோஷமாக இல்லை? இருக்கிறார்கள் என்பதே நிஜம். னாலும் அவள்/அவன் பெயரை எங்கேனும் கேட்கும் போது அவர்களையும் மீறி பழைய எண்ணங்கள் ஆட்கொள்ளும். அந்த சில நொடி சந்தோஷம் உண்மையான சந்தோஷத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே நிஜமான நிஜம்.

நானும் ஒரு பெண்ணால் ஆட்கொள்ளப்பட்டேன் என் கனாக் காலத்தில்.ஆனந்தமாக துள்ளி குதித்த நாட்களில் அவள் அமைதியாய் நுழைந்தாள் கல்லூரிக்குள்ளும் என் மனதிற்குள்ளும். எதனால் ஈர்க்கப்பட்டேன் என்று இன்றுவரை திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை என்பது என் தெளிவின் மீது எனக்கு எழுந்த சந்தேகம். நண்பர்களாய் உலாவந்தோம் மனதில் அவளை சுமந்தபடி. நித்தம் நித்தம் என் காதல் வளர்ந்தது. ஒரு தலைக்காதல் தான். சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. சொல்லாத காதல் செல்லா காச என்று படிக்க இரு மாலை வேளையில் தனிமையில் இருவரும் நடந்து செல்லும் போது இனிமையாய் நானும் காதலை தெரிவித்தேன் அவள் ஒப்புதலுக்காக. நிதானமாக முடிவெடுப்போம் இரண்டு வருடம் கழித்து என்றாள். என் வயதைவிட சின்னவள், நிதானத்தில் மூத்தவள். நண்பர்களாய் இருப்போமே கடைசிவரை என்றாள். நாம் ஒரு கணக்கும் போட காலம் ஒரு கணக்கு போட்டது. ஊசியின் துவாரம் வழியே உலகை பார்த்த நான் , கல்லூரி விட்டு வேலை இல்லாமல் அலைந்த போது வெட்ட வெளியில் அம்மணமாக நிற்பதாக உணர்ந்தேன்.

அதுவரை என்னை மட்டும் பார்த்த நான் என்னை சுற்றியும் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கான பாதை என்ன என்பதை முடிவு செய்தேன். அதற்குள்ளாக என் மனதில் பெண்ணின் மீது இருந்த காதல் காணாமல் போனது, உலகை ஆழமாக காதலித்தேன். பின்னர் ஒரு பெரிய போராட்டமே நடந்தது அது காதல் தானா என்று. எனக்கானவளை தேடினேன். என் பயண்ம் சற்றே வித்தியாசனமானதாக இருக்கும், அந்த ஓட்டத்திற்கு முதலில் யா ரவது கிடைப்பார்களா என்றே சந்தேகமாக இருந்தது. கிடைத்தாள் உங்களின் தோழி.

முகம் தெரியாமல் சினேகிதித்தோம் இணையத்தில். எங்களது கருத்துக்களையும், கனவுகளையும் பறிமாறிக்கொண்டோம். வாழ்த்திக்கொண்டோம் நல்ல வாழ்வு அமைய. மெல்ல மெல்ல நாங்கள் பயணிக்க விரும்பும்பாதை ஒன்றாய் இருப்பதை கண்டோம். ஏன் என் விரல் நுனி பிடித்து அவளும் நானும் பயணிக்க கூடாதென முடிவெடுத்தோம். ஆராய்ந்த்தோம்.

உணர்வுகளால் ஈர்க்கப்பட்டோம்..
உணர்ச்சிகள் தொற்றிக் கொண்டன..
காதல் பிறந்தது...

நாங்கள் முதன்முதலாய் அழுது பேசிக்கொண்டது என் பழைய ஈர அனுபவங்களையும் அவளின் (+உங்களின்) கதைகளையும். அது என்ன ஆண் தன் பழைய காதலை சொல்லலாம், பெண் சொல்லக்கூடாதா ? எங்கள் இருவர் தோளும் ஈரமாகின, என் தோள் அவள் கண்ணீராலும் என் கண்ணீர் அவள் தோளிலும்.

உங்களை அந்த பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டேன் என்றால் மன்னியுங்கள் நண்பரே. நான் கூட நினைத்ததுண்டு, என் பழைய நினைவுகளை மறந்து எப்படி வாழ்வது. ?னால் இவளின் அன்பு என்னை திணறடிக்க வைத்துவிட்டது. முதலில் நான் இனி என் தோழியை காணவே கூடாது, அது என்னை கதறடிக்கும் என்று தான் நினைத்தேன். இப்போது காலம் தெளிவினையும் பக்குவத்தையும் தந்துள்ளது. அவளோடு நன்றாக பழகுகிறேன். இன்றும் எனக்கு நல்ல தோழியாக அவளும் இவளும்.

எங்கள் திருமண அழைப்பிதழை முதன் முதலாக உங்களுக்கு வைக்க வேண்டும் என்பது இவளின் வல். அத்தனை அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என் மீதி பாதி. திடீர் என்று பத்திரிக்கை வைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்று தெரியாதா. அதனால் தான் உங்களுங்கு முன்னேற்பாடாக எங்கள் தோழமை பற்றி கூறிவிடலாம் என்று இந்த கடிதம். திருமணம் முன்னர் பெண்கள் நல்ல நண்பர்கள் வட்டத்தில் இருந்துவிட்டு பிறகு தன் கணவர் வாழ்வே கதி என்று இருக்கும் பெண்னைப்போல என் இல்லாளும் இருக்க கூடாது என்பது என் ஆசை. ஆதலால் அவளில் நண்பர்களை இப்போதே சந்தித்து பழகிவிடுகிறேன். உறவு விட்டுப்போக கூடாதல்லவா? நீங்கள் தான் அயல் தேசத்தில் போய் உட்கார்ந்து உள்ளீர். தாயகம் திரும்பினால் அடியேனை சந்திக்க ஒரு நாள் ஒதுக்க வேண்டும். முடியாதது என்று ஏதும் இல்லை நண்பா..திறந்த மனதோடு காத்திருப்போம் உங்களுக்காக நாங்கள் இருவரும்..

நேசமுடன்..

அன்பு தோழன்..

Wednesday, March 01, 2006

வேண்டுதல் வேண்டாமை இலான்

திருக்குறள் உரை எழுதுபவர் எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்


4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

மேற்கண்ட குறளின் பொருட்படி இணைந்தொழுகுவார்க்கு, வேண்டுதல் வேண்டாமை என்னும் நிலையிலாதாகும். அவ்வாறன மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு எதுபோதும் துன்பம் இலாதாகும்.


5. இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"...

இருள் - துன்பம்.
இருள்சேர் - துன்பத்தைச் சேர்க்கின்ற
இருவினை - இரண்டு வினை, நல்வினை, தீவினை
சேரா - அடைய மாட்டா
இறைவன் - தலைவன் (உடம்பின் தலைவன் - உயிர்)
பொருள்சேர் - அழியாத செல்வத்தைச் சேர்க்கும்
புகழ் புரிந்தார் - மெய்ம்மை சேர்ந்த புகழுடையச் செயலைச் செய்கின்றவர்
மாட்டு - இடத்து


விளக்கம்:
இறைவனாகிய உயிர்க்கு மெய்ம்மைப் புகழுடைய செயலைச் செய்கின்றவர்களிடத்து, துன்பம் தருகின்ற இருவினைப் பயனும் அடையமாட்டா. ("இன்பமும் துன்பமும் பிறர்தர வாரா" என்னும் புறநானூற்று வரிகள் காண்க)


குறிப்பு:
இறைவன் என்னுஞ் சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதால், அது இக்காலக் கடவுளைக் கூறியதாகக் கருத வேண்டாம். குறள் காலத்தில் வேந்தன் இறைவன் என அழைக்கப்பட்டான். உயர்வும் இறை என்றே அழைக்கப்படுள்ளது. உயர்ந்தோரைக் குறிக்கவும் இறை யுடன் ஆண்பால் விகுதி சேர்ந்து இறைவன் என்றாயிற்று. உயர்ந்தவர்கள் செய்யும் தொழிலை இறைவன் செயல் என்று கூறும் மரபு நம்மிடையே உண்டு.

6. "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்"...

மெய்,வாய்,கண்,காது,மூக்கு,செவி என்னும் ஐந்து பொறிகளை வாயிலாகக் கொண்டு இயங்கும் அவாவினை அகற்றுகின்ற நெறியாகிய மெய்ஞ்ஞானத்தின் வழி நின்று ஒழுக வல்லார், நீண்ட வாழ்நாளை உடைமையாகப் பெற்று நீடு வாழ்வார்கள்.

Tuesday, February 28, 2006

அமிர்தம் == அம்மா

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கவிதைகள்
அமிர்தம் == அம்மா

உணவினை சமைத்து
நைசாய் குழைத்து
சூட்டை தணித்து
ஓடி ஓடி மழலையைப் பிடித்து
துரத்தி துரத்தி...
வேண்டாமெனிலும் நிர்பந்தித்து
வாயில் திணித்து
நிலாக் கதை சொல்லி
பூச்சாண்டி பேச்சுக்கள் பேசி
ஓங்கிய கைகள்
ஓசைப்படாமல் கன்னத்தில் கிள்ளி
அணைத்து அரவணத்து
சில நேரம் அடித்து
கடைசியாய்...
ஊட்டி முடித்து
உணவு தட்டினில்
மிச்சம் இருக்கும்
எச்சங்களே..
எல்லா தாய்க்கும் அமிர்தம்..
-விழியன்

ஒரு நாள் பொறுத்திரு

என் அமுதே என் கனியே
என் வாழ்வின் ஆதாரமே
நாளையாவது உணவு கிட்டும்
கவலைகள் பறந்தோடும்
ஒரு நாள் பொறுத்திரு

முகத்தில் புதிதாய் ரேகைகள்
நாள் முழுவதும் கண்ணீர் சென்ற தடங்கள்
உன் தேம்பலின் அர்த்தம் அறிவேன்
வயிற்றில் சோறில்லை
காம்பில் பாலில்லை
எஞ்சியது நம்பிக்கை மட்டும்
ஒரு நாள் பொறுத்திரு

கடவுளை துதிப்பதும் இல்லை நிந்திப்பதுமில்லை
எத்தனை கொடுமை
காச நோய்க்கு தந்தை
இரும்பி இரும்பியே சேர்ந்தாள் என் தாய்
விஷச் சாராயத்திற்கு விலை என் தாலி
காட்டாறு விழுங்கியது வீட்டையும் மாட்டையும்
நன்றி சொல்வேன்
ஒன்றுக்கு மட்டும்
உதிரத்தை பாலாக்கும் பேறுக்கு

நாளை விடியல் பிறக்கும்
வயிறு நிறையும்
கவலை நீங்கும்
என் மார்பில் பால் சுரக்கும்
ஒரு நாள் பொறுத்திரு

- விழியன்

கடைவீதியில் 4 மாதக் குழந்தையுடன்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கவிதைகள்

1. "மறக்காமல் வந்துவிடு என் திருமணத்திற்கு
அழையாமல் வருவேன் உன் திருமணத்திற்கு"

2. கடைவீதியில் நாலு மாதக் குழந்தையுடன்
என் அடையாளம் கூடத் தெரியாமல்
கடக்கையில்...

இதுவும் கடந்து போம்'

3.விருந்து மக்கா விருந்து

கடைசி ஆண்டில்
கரைந்தன சலவை நோட்டுக்கள்
வாழ்வில் கரைசேர்ந்ததற்க்கு
புதிய புதிய நிறுவனங்கள் கல்லூரிக்குக் படையெடுக்க
வந்தது வாராவாரம் விருந்து
"சத்தியம்" சத்தியமாய் அழைக்க வாக்களித்ததால்
குதூகளித்து விருந்தளித்தான் நண்பன்.
அப்போதும் எப்போதும் நாங்கள் விரும்புவது
அமிர்தம் போல உணவு கிடைக்கும் 'அமிர்தா' தான்

ஏழரை மணிக்கு ஆரம்பித்தோம்
ஏழரை சனி ஒழிந்ததற்காக..
இரண்டு குழுக்களாக அமர்வு,
எதிர் - எதிரே
போட்டியுடன் விருந்து
முதல் குழு முதல் உணவு பட்டியலிட
அடுத்த குழு அடுத்த சுற்றில் கூற..
சுற்றின் எண்ணிக்கைகள் கூட மறந்து போக..
நாலுமணி உண்டே பறக்க..
கால் வலிந்த சர்வர்கள் பரிதவிக்க
கடைமூட முதலாளி காத்திருக்க
முடிந்தது போட்டி..
நிறைந்தது வயறு..
யாரும் ஜெயிக்கவில்லை
தோற்றது என்னமோ
விருந்தளித்தவன் தான்
சாப்பாட்டு பில் வந்தபின்

வெல்லப்படமுடியாத காலம் நான்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் ஆன்மிகம்-பண்பாடு எனும் இழையில் மிகச்சிறப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த இழையில் முத்தமிழ் குழுமத்தின் சீர்மிகு செல்வங்களான அரங்கர்,காழியூரார்,மஞ்சூரார் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இன்று முத்தமிழ் வலைபதிவில் இடம் பெறுகிறது.

அரங்கர்

"மூகம் கரோதி வாசாலம்
பங்கும் லங்கயதே கிரிம்..
........................................
........................................"
----கீதா மஹாத்மியம்.


எவனது கருணையானது ஊமையைப் பேச வைக்குமோ

முடவனை மலையைத் தாண்டச் செய்யுமோ

அந்த பரமானந்த மாதவனை வணங்குகிறேன்.



"எதனாலும் வெல்லப்படமுடியாத காலம் நான்."

--------ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதை.


காமமும் ஆசையும் பெரும் பசியுடையன.
அதற்கு இந்த உலகினையே ஆஹ¥தியாகக் கொடுத்தாலும் தீராது."
------- பகவான். ஸ்ரீ.கிருஷ்ணர், பகவத் கீதை.

[அதாவது பாலை நிலத்தில் பெய்த மழை போல் அடுத்த விநாடியே காணாது போகும். இன்னும் எங்கே? எங்கே? என்று கேட்கும். பெருமழை பெய்ததின் எந்த அடையாளமும் மிச்சமிருக்காது.]

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்."

"நுனிக்கொம்பர் ஏறினார் அ·துஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்."

"அதர்மம் ரக்த பீஜத்தினை உடையது.
அது வெட்ட வெட்ட வளரும் விருட்சம்;
பேராற்றலோடும் பெரு வேகத்தோடும் கிளைத்தெழும்.
தர்மம் ஆற்றல் குறைந்த வித்து;
இது மெதுவாகவே வளரும்.
எனவே அதர்மத்தை வெட்டி
தர்மத்திற்கு எருவாக இடவேண்டும்.
அப்போது அதர்மம் இன்னும் வேகமாகக் கிளைத்தெழும்;
இடைவிடாது தொடர்ந்து தர்மத்தின் காவலர்கள் இதனைச்
செய்யவேண்டும்..............................................................
....................................................................................
ஒரு தேர்ந்த போர் வீரனைப்போல்;
நாம் தினந்தோரும் சலிக்காமல் குளிக்கிறோமே
அழுக்கைக் கண்டு அஞ்சாமல் அதுபோல்..."
------ மகாகவி பாரதி, பாரதியார் கதைகள்.

[ரக்த பீஜம் - அசுர வித்து, வெட்ட வெட்டத் துளிர்க்கும் விருட்சம்]


பண்பாடு, நற்பண்புகள் முக்கியம் என பெரும்பாலோர் ஒத்துக்கொள்வோம். ஆன்மிகத்திலும் சீலம் மிகவும் அவசியம். ஆனால் அந்த நற்பண்புகள் மனதை சார்ந்தது. புலன்கள் நம் கட்டுபாட்டுக்குள் இருந்தாலே நற்பண்பிலிருந்து வழுவாமல் இருக்க முடியும். ஆனால் பெரியவர்களே

"சுருள் புரி கூழையர் சூழலில் பட்டுன் திறம் மறந்திங்கு இருள் புரி யாக்கையில் கிடந்தெய்தனன்.." - திருவாசகம்

"வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசைமு வாசையனல் மூட்டி"- திருப்புகழ்

"அஞ்சு மடக்கடக்கென்ப ரறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரு மங்கிலை..." - திருமந்திரம்
என அதன் கடினத்தை வெளிப்படுத்துகின்றனர். நற்பண்புகளை, நிலை தவறாத நிலையை பெறச் செய்யும் தெளிவான செயல் நுணுக்கமே உண்மை ஆன்மீகம். மாட்டுக்கு மூக்கணாங் கயிறுப் போல மனத்திற்கு மூக்கணாங் கயிறு மாட்ட முடியுமானால் அது உண்மை நெறி என்பதே பெரியோர் சொல்.

காழியூரன்

அஞ்சு மடக்கடக்கென்ப ரறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரு மங்கிலை..." - திருமந்திரம்


இத்திருமந்திரத்தில் அகிலமே அடக்கம்.

மனதிற்கு மூக்கணாங்கயிறு மாட்ட முடியாமல்தானே இத்தனை பிரச்சினைகள்.

மனம் ஒரு குரங்கு என்று தெரியாமலா சொன்னாங்க.

ஆனா குரங்குக்கு பதிலா வேறெ ஏதாவது சொல்லியிருக்கலாம்.

மனம் ஒரு மனிதன் அப்படீன்னு குரங்கும் சொல்லியிருக்கும்போல.


அதனால்தான் இறைவனை உன்னிடத்தில் தேடு.
ஆன்மா உன்னுள் உள்ளது என கூறியிருக்கிறார்களோ.


மஞ்சூர் ராசா

ஆதி பகவன்

திருக்குறள் உரை எழுதுபவர் எங்கள் முத்தமிழ் முதல்வரான முனைவர் இரவா கபிலன் ஐயா அவர்கள்.

அறத்துப்பால்"
1 கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர். அருளிய திருக்குறள்


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"


"அகரம்" என்ற சொல்லே முதல் முதலில் உலகில் தோன்றிய ஒலி அதுவே எல்லாவற்றிற்கும் ஆதிமூலமாக இருக்கின்றது.எல்லாப்பொருளும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகின்றன. அதுபோல், மொழியும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகிறது. அந்த மூலம் ஆதிபகவன் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒலியின் மூலத்திலிருந்து மொழி தோன்றியது என்று குறிப்பிடுகிறது

2.கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

திருக்குறள் தோன்றிய காலத்தில் மெய்ஞ்ஞானம் ஆட்சிப் பெற்றிருந்தது. அதனையே அதிகமாக மதங்கள் எடுத்தோதின. மெய்ஞ்ஞானத்தின் இறுதி நிலையைக் காண்பது காடவுளைக் காண்பது என்றும், அதனொடு இணைந்து நிலைத்திருப்பதைக் கடவுளுடன் இணைந்திருப்பது என்றும்,
அந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாக மதிக்கப்பட்டனர்.

ஆக,

மெய்ஞ்ஞானப் பயிற்சியில் மூலாதாரத்திலிருந்து எழும் ஒளியை ஞானச்சுடர் என்றும், அது மேலெழுந்து செல்வது பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதனால் பாம்பு என்றும் வால் போன்ற ஒரு சுடர் அறியப்படுவதனால் வாலறிவன் என்பர்.


கற்றதினால் ஆய பயன் என்கொல்? ஞானக்கல்வியைக் கற்பதினால் ஆகும் பயன் என்ன? அதனைப் பயின்று, மூலச் சுடரை ஏற்றித் தொழாமல் இருப்போர்க்கு! சுடர் ஏற்றினால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தினால் கிடைக்கும் பயன் கிடைக்கும். அல்லாவிட்டால், அது ஏட்டுக்கல்வியாகும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே.

3.. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

மூலாதாரம் - குதத்துக்கும் குய்யத்துக்கும் இடையில் இருக்கும். முக்கோண வடிவில் நாலிதழ் தாமரை போலிருக்கும்.


சுவாதிட்டானம் - மூலாதாரத்திலிருந்து இரண்டங்குலத்துக்கு மேலிருக்கும் ஆறிதழ் தாமரை போலிருக்கும்.


மணிப்பூரகம் - சுவாதிட்டானத்திலிருந்து ஆறு அங்குல்த்துக்கு மேலிருக்கும். பத்து இதழ் தாமரை போலிருக்கும்.


அனாகதம் - மணிப்பூரகத்திலிருந்து எட்டாவது அங்குலத்தில் இருக்கும். பன்னிரண்டு இதழ் தாமரை வடிவிலிருக்கும்.


விசுத்தி - அனாகத்துக்கு மேல் பன்னிரண்டாவது அங்குலத்தில் இருக்கும். இது, பதினாறு இதழ் கொண்டது.


ஆக்கினை - விசுத்திக்கு மேல் பதினாலங்குலத்தில் இருக்கும். இது இரண்டிதழ் கொண்டது.


இவ்வாறான தாமரை இதழ்கள் கொண்ட நிலையங்களை அடைந்து, ஆங்கே தோன்றும் ஒளியாக மாண்பின் அடியைப் பற்றி நின்றால்
இந்த நிலத்தின்கண் நீண்ட நாள் வாழலாம். என்று, மேற்கண்ட பாடலின் பொருளாகும். இவ்வாறல்லாமல், வேறு முறையில் எவ்வழியினாலும் மரணத்தை வெண்ரு நிலைத்திருக்க முடியாது! என்றறிக.


இதுவே மரணமில்லாப் பெருவாழ்வுக்கான வழியாகும்.

எங்கள் முத்தமிழில் இரவா ஐயாவின் தமிழ்த்தேன் குறள் விளக்கமாய் தினமும் பொங்கி வழிகிறது.

ஆதி பகவன்

திருக்குறள் உரை எழுதுபவர் எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்.

அறத்துப்பால்"
1 கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர். அருளிய திருக்குறள்


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"


"அகரம்" என்ற சொல்லே முதல் முதலில் உலகில் தோன்றிய ஒலி அதுவே எல்லாவற்றிற்கும் ஆதிமூலமாக இருக்கின்றது.எல்லாப்பொருளும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகின்றன. அதுபோல், மொழியும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகிறது. அந்த மூலம் ஆதிபகவன் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒலியின் மூலத்திலிருந்து மொழி தோன்றியது என்று குறிப்பிடுகிறது

2.கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

திருக்குறள் தோன்றிய காலத்தில் மெய்ஞ்ஞானம் ஆட்சிப் பெற்றிருந்தது. அதனையே அதிகமாக மதங்கள் எடுத்தோதின. மெய்ஞ்ஞானத்தின் இறுதி நிலையைக் காண்பது காடவுளைக் காண்பது என்றும், அதனொடு இணைந்து நிலைத்திருப்பதைக் கடவுளுடன் இணைந்திருப்பது என்றும்,
அந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாக மதிக்கப்பட்டனர்.

ஆக,

மெய்ஞ்ஞானப் பயிற்சியில் மூலாதாரத்திலிருந்து எழும் ஒளியை ஞானச்சுடர் என்றும், அது மேலெழுந்து செல்வது பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதனால் பாம்பு என்றும் வால் போன்ற ஒரு சுடர் அறியப்படுவதனால் வாலறிவன் என்பர்.


கற்றதினால் ஆய பயன் என்கொல்? ஞானக்கல்வியைக் கற்பதினால் ஆகும் பயன் என்ன? அதனைப் பயின்று, மூலச் சுடரை ஏற்றித் தொழாமல் இருப்போர்க்கு! சுடர் ஏற்றினால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தினால் கிடைக்கும் பயன் கிடைக்கும். அல்லாவிட்டால், அது ஏட்டுக்கல்வியாகும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே.

3.. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

மூலாதாரம் - குதத்துக்கும் குய்யத்துக்கும் இடையில் இருக்கும். முக்கோண வடிவில் நாலிதழ் தாமரை போலிருக்கும்.


சுவாதிட்டானம் - மூலாதாரத்திலிருந்து இரண்டங்குலத்துக்கு மேலிருக்கும் ஆறிதழ் தாமரை போலிருக்கும்.


மணிப்பூரகம் - சுவாதிட்டானத்திலிருந்து ஆறு அங்குல்த்துக்கு மேலிருக்கும். பத்து இதழ் தாமரை போலிருக்கும்.


அனாகதம் - மணிப்பூரகத்திலிருந்து எட்டாவது அங்குலத்தில் இருக்கும். பன்னிரண்டு இதழ் தாமரை வடிவிலிருக்கும்.


விசுத்தி - அனாகத்துக்கு மேல் பன்னிரண்டாவது அங்குலத்தில் இருக்கும். இது, பதினாறு இதழ் கொண்டது.


ஆக்கினை - விசுத்திக்கு மேல் பதினாலங்குலத்தில் இருக்கும். இது இரண்டிதழ் கொண்டது.


இவ்வாறான தாமரை இதழ்கள் கொண்ட நிலையங்களை அடைந்து, ஆங்கே தோன்றும் ஒளியாக மாண்பின் அடியைப் பற்றி நின்றால்
இந்த நிலத்தின்கண் நீண்ட நாள் வாழலாம். என்று, மேற்கண்ட பாடலின் பொருளாகும். இவ்வாறல்லாமல், வேறு முறையில் எவ்வழியினாலும் மரணத்தை வெண்ரு நிலைத்திருக்க முடியாது! என்றறிக.


இதுவே மரணமில்லாப் பெருவாழ்வுக்கான வழியாகும்.

எங்கள் முத்தமிழில் இரவா ஐயாவின் தமிழ்த்தேன் குறள் விளக்கமாய் தினமும் பொங்கி வழிகிறது.

Monday, February 27, 2006

சர்வதேச வலைபதிவர்கள் மாநாடு - 3

நம்பிக்கை கூகிள் குழுவின் தலைவரும், முத்தமிழ் கூகிள் குழுமத்தின் நம்பிக்கை நட்சத்திரமுமான எங்கள் அன்பு அண்ணன், ஜெயமாருதி பக்தனான நம்பிக்கை ராமர் சென்னையில் சமீபத்தில் நடந்த சர்வதேச வலைபதிவர் மாநாட்டிலும்,முதலாம் முத்தமிழ் குழும மாநாட்டிலும் கலந்து கொண்டார்.அவரின் நம்பிக்கை மொழியில் இதோ மாநாட்டு விவரங்கள்...

வேந்தர் விருந்து

சென்ற ஞாயிறு எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத நாள். ஏன் என்று கேட்கிறீர்களாக.. இணைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டோம்.

சுருக்கமாய் சொல்வதாய் இருந்தால் ..

"சித்தமிகு நம்பிக்கை, அன்புடன் முத்தமிழில் சங்கமித்த நாள்" எனலாம்.

விரிவாக எழுதவில்லை என்றால் நம் கடலூர் நடேசன் வீச்சரிவாளோடு வந்திடுவதாய் தகவல்.. எனவே பணிச்சுமைக்கு இடையில் கொஞ்சம் தருகிறேன்.

26-2-06 ஞாயிறு அன்று வழமைபோல் பணிக்கு போகவேண்டி இருந்தது. அமெரிக்கா சின்சின்னாட்டி வேந்தரை/ மற்றும் மற்ற நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாது போயிடுமோ என்று மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது.

வேந்தர் சென்னை வந்ததும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே ..இன்னமும் பண்ண வில்லையே என்று மனம் எண்ண :(( அவ்வப்போது குறள் ஆசான் இரவா(டாக்டர். வாசுதேவன்)வுக்கு போன் செய்து நிலவரத்தை அறிந்து கொண்டேன்.

பின்னர்தான் தெரிந்தது வேந்தர் நம்மை தொலைத்து விட்டார் என்று...இல்லை இல்லை எனது நம்பரை தொலைத்துவிட்டார் என்று :))

அலுவலக வேலை இருந்தாலும் முடித்தபின்னராவது எவ்வளவு இரவு ஆனாலும் அவரை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏனென்றால் "அன்புடன்" அன்பு காந்தி அவர்களும் வருவதாய் சொல்லி இருந்தார்கள். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு ஏற்கனவே வருகை புரிந்துள்ளார்கள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே என்று மனதில் எண்ணம் ஓட...

மாலையும் நடைபெற இருந்த அலுவல் நிகழ்ச்சி பகலோடு ரத்தானது.

நம்மோட மகிழ்ச்சியை சொல்லவும் வேணுமோ.. :))

தேனாம்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி கிளம்பினேன்...

இரவா தந்த முகவரியில் ஆட்டோகாரன் நம்மளை இறக்கிவிட்டான்.

அமுதம் அங்காடி மாடியில் என்பதற்குப்பதில் , மடியில் இல்லை இல்லை...அருகில் என்று இருந்தமையால் அப்படியே ஒரு வாக் செய்து வேந்தர் தங்கியுள்ள ஹெஸ்ட் ஹவுஸ்-ஐ தேடினேன்.

தேடியகண்களில் மின்னல் என நம் இரவா என்பீல்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். இன்னொருவர் வெள்ளை ஜிப்பா வெள்ளை பேண்ட் சகிதமாய் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார்.. அவரை முன்பின் நன் பார்த்தில்லை எனினும் இவர் யாராக இருக்கும் என்று மனம் கணக்கு போட்டது.

இனி...

ராமா: என்ன சார் எப்படியிருக்கீங்க..

இரவா: வாங்க வாங்க சரியா மணி 3 க்கு வந்திட்டீங்க.. வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே ..

ராமா: (கரணம் தப்பினாலும் காலம் தப்பக் கூடாது) ஆமாங்க! நீங்க சொன்ன நேரத்துக்கு வந்திட்டேன்.. உங்க எல்லாரையும் சந்திக்கனும்கிற எண்ண அலை எனக்கு சாதகமாய் என்னை அழைச்சிட்டு வந்திட்டது.

(வெள்ளை ஜிப்பா காரர் விர்ரென்று எங்களைக் கண்டுக்காமல் மாடிப்படியேறினார்)

ராமா: அது யாரா இருக்கும்

இரவா: தெரியலியே ...

ராமா: சித்தார்த்தோ ..

(இப்போது நாங்கள் இருவரும் மாடிப்படியேறினோம். இரவா , வேந்தர் இருக்கும் அறையை திறந்து உள் சென்றார்.. நானும் அகலக்கண்களை விரித்தபடி உள் நுழைந்தேன் . ஆச்சரியம் வேந்தர் அப்படி ஒரு இளமையாக இருந்தார் (வயதே தெரியவில்லை , என்ன காயகல்பம் சாப்பிடுறாரோ :) ) .

ராமா: வணக்கம்

வேந்தர் : வணக்கம் , வாங்க, அமருங்க

இரவா: இவரை யாரென்று தெரிகிறதா ?

வேந்தர் : ????????????????????? :(

இரவா : ராம்

வேந்தர்:@@@@@@@@@@@@@@@@@ :(

(நான் சிரித்தபடி அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் :)) )

இரவா: நம்ம ராமா பாசிடிவ் ... ராமா

வேந்தர் : ஓ :)) நம்ம பாசிடிவ்ராமாவா..

(இப்போது இருவரும் இருக்கமாகிக்/நெருக்கமாகிக் கொண்டோம்)

வேந்தர் : ராமான்னு சொல்லுங்க..உடனே புரிந்திருக்கும் :)

(வேந்தர் மேற்கொண்டு வாயைத் திறக்கவில்லை ..தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தார்.. "என்னடா இது குழுமத்தில என்னா லொள்ளு பண்ணுவாரு" இவரா அவர் என்று யோசித்தேன் .. அப்படி யொரு அமுல் வேந்தராய் இருந்தார் ... மிக்க அமைதியோடு )

அந்த வெள்ளை ஜிப்பா வேறயாருமில்லை நம்ம அன்புடன் அன்பர் "சுரேஷ்" என்பது தெரியவந்ததும் மேலும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.. மனுசனை சும்மா சொல்லக் கூடாது மூன்று கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருந்து கொண்டும் அப்படியொரு அடக்கம் அவரிடம்.. குரல் நல்ல கணீர் கணீர் என்று இருந்தது ..அவரும் அப்படித்தான் இருந்தார் :) நல்ல அழகர் :)

அடுத்ததாய் ஒரு விருந்தினர் .. ஆம் அவரது கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்றுதான் அவரை சந்திக்கிறம்.. சம்ஸ்கிருத்தில் நல்ல புலமை மிக்க "மதுமிதா" தான் அவர் . பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளில் அவரது எழுத்துக்களை நாம் காணலாம்.

[இரவா அவர்கள் மதுமிதாவை குறித்து சொல்கையில் ' இவரது கவிதைகள் எல்லாம் மது இதா..மது இதா என்று சொல்வதுபோல் இருந்ததால் இவர் மதுமிதா ஆகிவிட்டார்..என்று சொல்லியதை மிக ரசித்தேன்.]

அடியேன் யார் என்று அறிந்து கொண்டதும் மிக்க உற்சாகத்தோடு பேசினார்.

இனியும் இந்த இடம் பத்தாது என்று அறையை விட்டு ஹால் (பெரிய அறைக்கு) வந்தோம்..

இப்போ கச்சேரி களை கட்டியது ..

வட்டமேசை மாநாடு போல் இருக்கைகளை அடுக்கிக்கொண்டோம்

சற்று நேரத்திற்குள் இன்னொரு அம்மணி வந்தார்கள். என்னால் யாரென்றே யூகிக்க முடியவில்லை..

மதுமிதா மூலம் அவர்தான் "வலைப்பூ புகழ் " "சித்தம் பிராத்தனை கிளப் புகழ்" நியூசிலாந்து துளசி அம்மா என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாய் ஆனது. ஏனென்றால் மனதில் ஒரு தள்ளாத வயது பாட்டியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன் (துளசி அம்மா மன்னிக்கவும்) . ஆனால் பாருங்கள். அப்படியொரு படபடப்பு சுறுசுறுப்பு கடகடவென பேசினார்.

இதில் பாசிடிவ் ராமா யாரென்று அவர் கேட்க.. மதுமிதா சொல்லாதீர்கள் என்று என்னை தடுக்க.. அவர் விழிக்க.. சுரேசை முறைத்து முறைத்து பார்க்க.. பின்னர் என் பக்கம் அவர் திரும்புகையில் பாவம் இனியும் அவர்களை யோசிக்க விடக் கூடாது என்று "நான்தேன்" என்றேன்.

ஒரே சிரிப்பு மயம்தான் போங்கள்:))

இருவரும் பரஸ்பரம் வணங்கிக் கொண்டோம்.

இதற்கிடையில் பணிப்பெண் இனிப்பு/காரம் வகைகளை டீபாயில் கொண்டு வைத்தார்கள்....துளசியம்மா அத்தனையையும் தனது டிஜிட்டல் கேமராவில் அடைத்துக் கொண்டார். அதனால் நாங்கள் சாப்பிட முடியாமல் போனது :)) .. காரணம் சாப்பாடு பற்றி எழுதவில்லை யெனில் வலைப்பூ நண்பர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.)

பல தலைப்புகளில் பேச்சு சென்றது..

இப்போதுதான் நம் "கோவைக்குசும்பு" வேந்தர் நார்மலுக்கு வந்தார் (அதாங்கோ பேச/குசும்ப ஆரம்பித்தார்)


இந்த நிகழ்வில் குவைத் "சித்தார்த்" உள்ளே நுழைந்தார்.. அவர்தான் சித்தார்த் என யூகித்தபடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அனைவரும் சொன்னோம். அவர் தனது தங்கையின் திருமண அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார். அவர் ஒரு புத்தகப்புழு. எந்தப்புத்தகம் பற்றி கேட்டாலும் அவரிடம் விளக்கம் கிடைக்கும்.

நிறைய கதைகள் போய்க்கொண்டு இருந்தது.

முக்கியமான ஒருத்தர் இன்னும் வரலியே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.. ஆயுசு நூறுங்க! நம்ம அன்புடன் காந்தி உள்ளே நுழைந்தார்கள்.
கலகலப்புக்கு இப்போ பன்ஞ்சம் இல்லை.

ராமா: காந்தி அம்மா! ஷிபு(காந்தியின் சுட்டி பையன்) வரலியா ?
காந்தி : என் கணவர், மாமியார், பையன் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்கள் ராமா.

(நம்ம சுரேஷ் , காந்தியை கண்டதும் உற்சாகத்தில் குதித்துக் கொண்டே இருந்தார். சுரேஷ், சித்தார்த், காந்தி இவர்கள் ஏற்கனவே சந்திருக்கிறார்கள்...காந்தி மதுமிதாவை வெளிநாட்டில் இருப்பவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தாராம்.. அவரும் இப்போதுதான் முதன் முதலில் சந்திக்கிறார்..)

சுரேஷ்:( காந்தியை நோக்கி) எங்களின் புரட்சித்தலைவியே வருக!

காந்தி : ஐயோ இவரு தொல்லை தாங்க முடியலை..

சுரேஷ்:(இர்வாவிடம்) எங்களையெல்லாம் அன்புடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்வது இவர்தான்.. என்ன காந்தி அம்மா!

காந்தி: என்னாஆஆஅ து அம்மா வா?

சுரேஷ்: ராமா சொன்னாரே அதான் நானும் சொன்னேன்.

ராமா: நீங்க புரட்சித் தலைவின்னு சொன்னதைதான் நான் கொஞ்சம் மாற்றி "அம்மா" என்றேன். என்ன கலர் புடவை(பச்சைப் புடவையில் வந்திருந்தார்) கட்டியிருக்கிறார் பாருங்கள் .

(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..இப்போ நம் வேந்தரும் கலாய்க்க ஆரம்பித்தார்)

வேந்தர் : அப்ப உடன்பிறவா சகோதரி..

துளசி: நான் தான் உடன்பிறவா சகோதரி ..

மதுமிதா: உப்புசமா இருக்கீங்க பொருத்தம்தான். ஆனா அம்மாதான் கொஞ்சம் மெலிந்து இருக்காங்க..

(ஹா ஹா)

சுரேஷ்: அப்ப நம்ம இரவா ஐயாவிற்கு தமிழ்த்துறை கொடுத்திட வேண்டியதுதான்.

[ இதற்கிடையே வேந்தரிடம் நான் அமெரிக்க கலாச்சாரம் இங்கிருந்து செல்பவர்களை எப்படி பாதிக்கிறது? எப்படி அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் என்று பலவும் பேசினேன். தனது மனைவிக்கு கூட தெரியாமல் வேந்தர் அவர்கள் செய்து வரும் பல நல்லகாரியங்கள் அவரது உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்தியது]

[திடீரென்று ஒரு போன் கால் எனக்கு வர...அதை யாரெனக் கேட்க நம்ம கடலூர் நடேசன் சார்..உற்சாகமாய் என்ன ராமா யாரெல்லாம் இருக்கிறாங்க என்று கேட்க.. நான் வேந்தரிடம் மற்றும் இரவாவிடம் கொடுத்தேன். அவர் பேசியதைதான் அனைவரும் அவரது மடலில் படித்துவிட்டீர்களே.. ஒரு அரை மணி நேரமாவது பேசியிருப்பார்கள்.நான் காந்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் கடலூர் மாவட்டக் காரங்க பாருங்க அதான் போனில் கலாய்க்கிறாங்க என்றேன்]

எங்கள் பேச்சு பெண்கள் சுதந்திரம், நம்பிக்கை, அன்புடன், முத்தமிழ், சித்தம் என்று பலவாறு சென்று கொண்டு இருந்தது.

பலகாரங்களை வாணலியில் சுடுவதை அறிவோம். ஆனால் துளசி அம்மா தனது கேமாராவில் பலகாரங்களோடு எங்களையும் சேர்த்து சுட்டுக்கொண்டு இருந்தார். துளசி அம்மா நியுஸிலாந்தில் நடத்தி வரும் வீடியோ லைப்ரரி, பணிகள் குறித்தும் பேசினோம்.

(எனக்கு எதை விட எதை தொட என்று தெரியாமல் மனதில் வந்ததையெல்லாம் வேகவேகமாக தட்டச்சிக் கொண்டு இருக்கிறேன். எழுத்து/கருத்துப் பிழைகளை மன்னிக்க.)

நேரம் ஆறை நெருங்கிக் கொண்டு இருந்தது..

துளசி அம்மா கிளம்ப துவங்கினார்.. கொஞ்சம் பொறுங்கள் என்வீட்டினர் எல்லாரும் இப்போ வந்திடுவாங்க என்று காந்தி சொல்ல.. சொன்னபடி காந்தி குடும்பம் வந்தது.

காந்தியின் கணவரை , மாமியாரை இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்.

நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை.. என்னால் நம்ம முடியவில்லை...

நம்ம காந்தியோடு கணவரா இவர். மனுசர் அப்படியொரு அமைதி.

அவருக்கு ஜெகந்நாதன் என்ற பெயரைவிட சாந்த நாதன் என்பது மிகப்பொருத்தம். ரொம்ப அமைதியானவராய் சாந்தரூபமாய் , மெலிதான புன்னகையோடு இருந்தார். சும்மா இல்லீங்கோ அவர் மிகச் சிறப்பான ஓவியருங்கோ..(எல்லாத்துக்கும் மேல அவரு எங்க ஊருக்காருங்கோ அதான்..மக்கா ஊருதாங்கோ)

அடுத்து காந்தியின் மாமியார் .. உண்மையில் இப்படியொரு மாமியார் மருமகள் காம்பினேஷன் பார்ப்பது ரொம்ப அரிது. (காந்தி உங்க ரெண்டுபேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ)

நான் நெல்லை மாவட்டம் அருகில் உள்ளவன் என்பதை அறிந்ததும் மேலும் நெருக்கமாகி விட்டார். ஷிபு கண்ணா அங்கே இருந்த மீன் தொட்டியில் மீன்களோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.

இப்போ மணி 6.15 ஒவ்வொருவராய் விடைபெற்றனர்.

காந்தி&குடும்பம், சுரேஷ், மதுமிதாம்,துளசி என்று ஒவ்வொருவராய் விடை பெற்றனர்.

எஞ்சி நின்றது.. சித்தார்த், இரவா, நானும்தான். நாங்களும் விடைபெற்றோம்.. வேந்தர் வழியனுப்ப வாசல் வரைக்கும் வந்தார்.

இரவா தனது புல்லட்டை உதைக்க அது அவரைப்போலவே கர்ச்சித்தது..

சித்தார்த் தனது தங்கையின் வாகனத்தில் கிளம்பத் துவங்கினார்.

வேந்தர் : ராமா நீங்கள் இருசக்கரம் வாகனம் வைக்கவில்லையோ ?

ராமா: "நாற்சக்கரம் வாங்கும் வரை பாதையாத்திரை " என்ற எனது சார்பை விளக்கிவிட்டு இரவா அழைத்த்மையால் அவரது வாகனத்தில் அமர்ந்து கொண்டேன்.

இரவா வாகனத்தில் பயணிக்கும் போது இலக்கிய விருந்தளித்தபடி என்னை ஜெமினியில் டிராப் செய்தார்.

பேசியது அத்தனையும் இங்கே எழுத நேரம் பத்தலை. நான் விட்டதை மற்றவங்க தங்களின் பார்வையில் எழுதிடனும்..

இணைய இனிய நண்பர்களின் சந்திப்பு நாளும் தொடரனும்..

கடவுளும் சாத்தானும்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கலீல் கிப்ரானால் எழுதப்பட்ட கதை

கடவுளும் சாத்தானும்

கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

எழுதியவர் "முறிந்த சிறகுகள்" எழுதியவர்...

முத்தமிழில் குறும்புவாதிகள்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் பல குறும்புவாதிகள் உலவுவதாக
கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஞ்சூர் ராசா என்ற குறும்புவாதி ஒருவர் குழுவில் உள்ள விழியன் என்ற இன்னொரு குறும்புவாதியின் புகைப்படத்துக்கு என்னென்ன வேலைகள் செய்திருக்கிறார் என பாருங்கள்.




"அன்பு முத்தமிழ் நண்பர்களே, தமிழ் திரையுலகின் புதிய வில்லன் நடிகர்
இவர்தான். இதுவரை 10 படங்கள் புக் ஆகியுள்ளதாக நமது நிருபர் சொல்கிறார்.
உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் கண்டுப்பிடிக்கும் 3
பேருக்கு பரிசு உண்டு. பரிசை புதுமுக வில்லனிடமிருந்து நேரடியாக பெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் விழாவில் விபாகையின்
வர்ணனைகளுடன் பரிசு வழங்கப்படும்.

அனைவரின் ஊகங்களும் வரவேற்கப்படுகின்றன."

--
மஞ்சூர் ராசா

தினம் தினம் இப்படி இந்த குறும்புவாதிகள் முத்தமிழில் அடிக்கும் லூட்டிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

நினைவுகள் இல்லாத மனது

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் சுதனின்விஜி எழுதிய நினைவின் கதை

என் முத்தமிழ் உள்ளங்களே,

எல்லோர் நலனுக்கும் பிரார்த்திக்கின்றேன். ஒட்டாவாவில் வெள்ளி இரவு 8:39 மணி அளவில் புவி அதிர்ச்சி ஏற்பட்டது அதிர்வு 4.5. 'கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவுமே நடக்கலாம் என்ற 'சந்திரமுகி' பாட்டின் வரிகள் நினைவிற்கு வந்தது.

என் வாழ்நாளில் நான் முதல் முதல் உணர்ந்த புவி அதிர்வு இதுதான். தாக்கம் என்று அழிவுகள் ஒன்றுமில்லை ஆனால் அதிர்வுகள் ஏற்படுத்திய தாக்கம் நெஞ்சை விட்டு அகலவில்லை. வாரம் வாரம் முத்தமிழின் வளவினுள் உங்களை சந்திக்க வேண்டும் என்ற பேராவலில் இன்று ஓடி வந்தேன்.

சரி உங்கள் நினைப்புகள் எல்லாம்..எப்படி நல்லவழியில் தானே?!! ஆக நெருங்கிய பொருள் கைபடும்"....

இன்றும் அதைப்பற்றித்தான் வளவினுள் அலசப்போகின்றோம், நினைவுகள் இல்லாத மனது ஒன்று இருக்குமானால் அது அலையில்லாத கடல் போன்றது.
நினைவுகள் எந்த நேரமும் நம்மை ஆட்கொண்டபடிதான் ஒரு நொடியில் இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து வந்து விடும் இந்தப்ப்பொல்லாத நினைவுகளை உருவாக்கும் மனது.

சரி இந்த பிழைப்பை கெடுக்கும் நினைவின் அடுத்த கதைக்கு நகர்வோமா?

ஒரு குருவும் சீடனும், ஆற்றங்கரைக்கு நீராடச்சென்றிருந்தார்கள் அப்போது ஒரு பருவப்பெண் ஆற்றில் மூழ்கும் நிலையில் தன்னை காப்பாற்றும் முயற்சியில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் அதைக்கண்ட சீடன் உடனேயே அவளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி அவளைக் கரையும் சேர்த்தான். இது குருவுக்க்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை அவர்கள் குளித்து முடிக்கும் வரை ஒன்றும் பேசாத குரு....'சிறிது நேரம் கழித்து 'சிஷ்யா நீ அப்படிச்செய்து விட்டாயே உன் பிரம்மச்சரியம் என்னாவது இத்தனை நாளும் நீ கற்ற அத்தனை கல்வியும் வீணானதே!!! என்று தலையில் அடிக்காத குறையாக பெரும் குறைப்பட்டுக்கொண்டார். அப்போது சீடன் சொன்னார்..'குருவே நான் அப்போதே அந்த பெண்ணை இறக்கிவிட்டு விட்டேனோ நீங்களோ அதை இப்போதும் அந்த நினைவை சுமந்துகொண்டிருக்கின்றீர்களே" என்று...அதை கேட்டதும் 'சீடன் கற்பித்த பாடம் குருவிற்கு விளங்கி இருக்க வேண்டும் என்பதை சொல்லியும் புரிய வைக்க வேண்டுமோ?"...

நினைவுகள் என்பது நம்மை அறியாமலேயே சில நேரங்களில் ஆழ்சுழியாய் எங்கெங்கோ இழுத்துச்செல்லும். நாம் விரும்பும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் சொல் ஒன்று சொல்லிவிட்டால் மனம் அந்த நினைப்பை விட்டு வரவே மறுக்கும். மறக்க வேண்டியது நினைப்பில் நின்று அலைக்கழிக்கும். அதற்கு சரியான வழி மனதை ஒருமுகப்படுத்துவது பிடித்த நல்ல விசயங்களில் மனதை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நிறைய நல்ல புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.

நல்ல புத்தகங்கள் போல் நல் நண்பன் என்று வேறெதுவும் இல்லை. அது உங்கள் நல் வாழ்கைக்கு வழிகாட்டி. நிறைய வாசியுங்கள், குறைவாகப் பேசுங்கள். எப்போதும் நிறைய நல்ல விசயங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவே நமக்கு இருகாதுகளையும் பேச்சின் வீரியம்குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனால் ஒரே ஒரு நாக்கும் தரப்பட்டுள்ளது.

'கேட்பது உங்களைச் செதுக்கி செம்மைப் படுத்த உதவும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லப்போகின்றேன் என்ற பேர்வழியில் நிறைய பேசாதீர்கள். அதுவே உங்கள் நல்ல பெயரை பல வேளைகளில் கெடுக்க வழி வகுத்துவிடும்.

'அரிச்சந்திரன் நாடம் பார்த்து ஒரே ஒரு காந்தி தான் மஹாத்மா ஆனார். அதைப்போல் உங்கள் பயனுள்ள விசயங்கள் யாரிக்கு வழிகாட்டுமோ அவர்களைப்போய்ச்சேரும். நிறைய வாசியுங்கள், எழுதுங்கள், எப்போது பேசுவீர்கள் என்று ஆவல் பொங்க காத்திருக்கும் போது உங்கள் வாய் திறந்து பேசுங்கள். மீண்டும் அடுத்த வாரம் உங்களை வளவினுள் சந்திக்கும் வரை.....

உங்களிடம் இருந்து........................

--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

தேசிய அறிவியல் தினம் - விழியன்

பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?

"தேசிய அறிவியல் தினம்".

இது எத்தனைப் பேருக்கு தெரியும்? நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம்
என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம்
கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல் தினம் பற்றியும் நாம்
அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான
காரணம் என்ன?

இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன்
விளைவு கண்டுபிடித்த தினம். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை
இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்
(1930) இவருக்கு கிடைத்தது. இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி
இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. மேலும் சில விவரங்கள்:

முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்
பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970

சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும்
ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசு
பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள்
பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு
தந்தார். 1934ல் பெங்களூர் இந்திய அறிவியல் கழக முதல்வராக
பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.


தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான
சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான்
அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை
எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். அவன் வாழ்கை தரம் உயர
வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஒரு பாடம்
அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள
அறியவேண்டும். வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, அவற்றை நிஜ
வாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் சாராம்சம் இது தான்.

ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.
கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். அது தான் கல்லோடு
வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. என்று
கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.

அனைவருக்கும் எனது தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள்

-விழியன்

Sunday, February 26, 2006

பழைய புத்தகம்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் எழுதிய கவிதை

பழைய புத்தகம்
========================================================
பழைய புத்தகம் தருகிறேன்..
யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்ததிது..
சின்ன வயது கனவுகளை பதித்திருக்கிறேன்
என் அரும்பு மீசை தோழி அவள்..
அவளை எவ்வளவு நேசித்தேன்
ரகசிய பார்வைகள்..
ஒரு நாள் பார்க்காத அந்த வேதனை.
தேவதை உடுத்திய ஆடையின் சுவாசம்.
அவள் மீது சிறு கோபம்
என்னிடம் சொல்லாமலே ஒரு அதிகாலையில் இறந்திருந்தாள்
பெயரிடப்படாத நோய்..

அது வரை மட்டுமே எழுத முடிந்தது என்னால்..
படியுங்கள்...
என்ன?
எல்லாம் வெண் தாளாக உள்ளதா???
அழிந்திருக்கும் என் கண்ணீர் பட்டு பட்டு..
தினம் தினம் தான் படிக்கிறேன் நானும்,
எந்த பக்கதில் என்ன இருக்கு என்று சொல்லவா?
உங்களுக்கேன் அந்த சோகம்..
வேண்டாம் !!!
எனக்குள்ளே அழிந்து போகட்டும் அவள் நினைவுகள்
தந்து விடுங்கள் அந்த புத்தகத்தை..
- விழியன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4