என் கனவுத் தோழியே!
என் கனவுத் தோழியே!
தோழியே!
ஒரு நாள்
பேசிக்கொண்டிருக்கும்போது!
"என்னை ஏன்
உன் சிறந்த தோழி என்கிறாய்
காரணம் சொல்" என்றாய்
"நிறைய இருக்கிறது
எதைச் சொல்ல!
ஏன் இப்படி ஒரு
த்டீர் கேள்வி" என்றேன்
"நான் கொஞம் கூட
அழகாஇல்லையே
அதான் கேட்டேன்" என்றாய்!
"நட்பில் எதற்க்கு அழகு
உன் முகத்தை கண்ணாடியில் பார்த்து
போலியாக குறைபட்டுக்கொள்ளும்
உனக்குத் தெரியாது உன் அழகு!
நேரடியாக கண்களாலும்
மனதாலும் பார்க்கும்
எனக்குத்தான் தெரியும்
உன் உண்மை அழகு !என்றேன்
சிரித்துக் கொண்டே!
"சரி வேறு காரணம் சொல்"என்றாய்!
"நீ அறிவாளியாக இருக்கிறாய்" என்றேன்!
"அதிகமாலம் இல்லை!
ஏதோ கொஞ்சம் இருக்கு
அவ்வளவுதான" என்றாய்!
இப்படி கர்வமின்றி அடக்கமாக
சொல்கிறாயே இதுதான் உண்மை அறிவு"என்றேன்
உற்சாகமாய் பார்த்து!
"சரி வேறு காரணம் சொல்"என்றாய்!
அன்பும் பொறுப்பும்!
நிறைந்தவளாய் இருக்கிறாய் "என்றேன்
"நான் வளர்ந்த விதம் அப்படி
அதற்க்கு காரணம் நான் அல்ல
என் பெற்றோர்கள்தான் !
சரி வேறு காரணம் சொல்"என்றாய்!
எப்போதும் உற்சாகமாய் இருக்கிறாய்" என்றேன்!
அது என் பிறவி குணம்
அதில் பெருமைப்பட எதுவும் இல்லை
சரி வேறு காரணம் சொல்"என்றாய்!
"மிகவும் நல்லவளாக இருக்கிறாய்"என்றேன்!
"அப்படி எல்லாம் இல்லை!
நான் செய்த தவறுகள்
எனக்குதான் தெரியும்" என்றாய்!
"இருக்கலாம் பரவாயில்லை!
நீ இப்படி சொல்வதினால்
உன்னிடம் போலியான
நடிப்பு இல்லை என தெரிகிறது!
இதுவும் ஒரு காரணம்" என்றேன்!
விநோதமாய் பார்த்து பார்த்து!
"சரி உலகில்
இவ்வளவு பேருக்கு இடையே
நாம் எப்படி நண்பர்களானோம் சொல்" என்றாய்!
சிறிது நேரம் சிந்தித்து பார்த்து விட்டு
தெரியவில்லை! நீ சொல்!" என்றேன்!
"ஏனென்றால் நாம், நம்!
நட்புக்காவே பிறந்தவர்கள்" என்று சொல்லி!
நட்புடன் தோள்களில் சாய்ந்து கொண்டாய்!!
~நம்பிக்கைபாண்டியன்