அகமே புறம் - பகுதி2
அகமே புறம் - 2.
மனத்தின் தன்மையும் வன்மையும் -1
மனம் வாழ்வை விதிக்கும் நியந்தா; நிலமைகளைச் சிருஷ்டித்துது திருத்தும் கர்த்தா; தந்து சொந்தப் பலன்களை அநுபவிக்கும் போக்தா; பொய்யைச் சிருஷ்டிக்கும் திறனும் மெய்யைக் காணும் திறனும் மனத்திற்கு உண்டு. ஆன்றோரும் "மனத்தானா மாந்தர்க்குணர்ச்சி" என்று கூறியுள்ளனர்.
மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது; நினைப்பு நூல். நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும். ஒழுக்கம், வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக்கொள்கிறது.
மனிதன் மனத்தையுடைய உயிராகையால் மனத்தின் சகல சக்திகளையும் உடையவனாயிருக்கிறான். தான் விரும்புவனவற்றையெல்லாம் அடைதற்குத் தக்க கருவிகளைக் கொண்டிருக்கிறான். அவன் தனது அனுபவத்தினால் கற்கிறான்; அவன் தனது அநுபவத்தை மிகுக்கவும் குறைக்கவும் கூடும். அவன் பிறரால் எந்த இடத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை; ஆனால் அவன் தானே தன்னைப் பல இடங்களில் கட்டுப்படுத்தியிருக்கிறான்; அவன் தானே தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பதால், அவன் நினைத்த மாத்திரத்தில் தானே தன்னை அக்கட்டிலிருந்து நீக்கிக்கொள்ளக்கூடும்.
அவன் தான் விரும்புகிறபடி தீயனோ அல்லல்து தூயனோ,கீழானோ அல்லது மேலானோ, மடையனோ அல்லது அறிஞ்சனோ ஆகக்கூடும். அவன் சில செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்து பழக்கங்களாக்கிக் கொள்ளலாம்; அவன் அவற்றிற்கு மருதலையான செயல்களை மென்மேலும் செய்து அப் பழக்கங்களை அழித்துவிடலாம். அவன் மெய்ப்பொருள் முழுவதும் தனக்கு மறைபடும் வரை தன்னைச் சுற்றிப் பொய்கலை அமித்துக் கொள்ளக்கூடும்; அவன் மெய்ப்பொருளைப் பூரணமாகக் காணும்வரை தன்னைச்சுற்றி பொய்களை ஒன்றின்பின் ஒன்றாக அழித்துவிடக்கூடும். அவன் செய்யக் கூடியன அளவற்றன்; அவன் பூரண ச்வதந்திரத்தையுடையவன். ஆன்றோரும்,
"நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானு-நிலையினு
மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத
தலையாகச் செய்வானுந் தான்."
என்று கூறியுள்ளார்.
நண்பர்களே கட்டுரையின் கட்டுமானமும் சரி நடையும் சரி சாரமும் சரி கடினமாயிருக்கும் என்பதால் சின்ன சின்ன பகுதிகளாக்கித் தருகிறேன்...
பின் குறிப்பு
நன்றி:
As A Man Thinketh by James Allen
மனம் போல் வாழ்வு - வ.உ.சி.
வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - Dr.M.S.உதயமூர்த்தி...
இது என் சொந்தக் கட்டுரை அல்ல... ஜேம்ஸ் ஆலன் மூலம். அதன் பின்னர் வ.உ.சி யின் மனம் போல் வாழ்வு, என் இனிய நண்பர் Dr.M.S.உதய மூர்த்தியின், "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" ஆகியவற்றிலிருந்து "சுட்டது..."
0 Comments:
Post a Comment
<< Home