ஒரு கோப்பை தேநீர்
ஒரு கோப்பை தேநீர்
காலையில் விடிந்ததும்
கனவுகள் கலைந்ததும்
அன்பு மனைவியும்
நீயும்தான்!
சந்தியா காலங்களும்
சாயுங்கால வேலைகளும்
நண்பனும் நீயும் தான்!
இக்கட்டான வேலையிலும்
எதிர்கால யோசிப்பிலும்
தனியான தருணங்களில்
நீ இருப்பினும் - நினது
இருப்பை மறந்தேன்
கடவுளைப்போல!
அன்புடன்
தியாகு