Sunday, October 08, 2006

சிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு

சிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது

நமது டில்லி நிருபர்

அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்திலிருந்து தேர்வு பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தவொரு நகரங்களிலும் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய ஆட்சிப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்

படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வில் 3.3 லட்சம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று வருகின்றனர்.

முதற்கட்டத் தேர்வான இதில், ஆறாயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

இதில், தேர்ந்தெடுக்கப்படுவோரில் ஆயிரத்து 174 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். அதில், 425 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., <உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் மிக முக்கியப் பணிகளான இவற்றுக்கு தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் குறைந்து வருவது என்பது பெரிய அளவில் தெரியாமல் உள்ளது.

கடந்த ஆண்டு 2005ம் ஆண்டு நடந்த தேர்வு முடிவுகளில் வெறும் 39 பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் பெரிய அளவில் ரேங்க் வாங்கியதாக தெரியவில்லை. முந்தைய 2004 2005ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் தேர்வானார்கள்.

அதற்கு முன் 20032004ம் ஆண்டு

களில் தமிழகத்திலிருந்து 60 பேர் தேர்வானார்கள். இந்த புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு பெறுவதில் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக தமிழகம் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு தேர்வு முடிவுகளின்படி அகில இந்திய அளவில் டில்லி தான் முதல் மாநிலமாக உள்ளது. இங்கிருந்து மட்டும் 113 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து டில்லி வந்து படித்து தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை முதல் முறையாக உத்தரபிரதேசம் பிடித்துள்ளது. 67 பேர் இம்மாநிலத்திலிருந்து தேர்வாகியுள்ளனர். மூன்றாவதாக மட்டுமே தமிழகம் உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அகில இந்திய அளவில் இரண்டாமிடத்திலிருந்த தமிழகம் தற்போது மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகம் பின்தங்கிக் கொண்டே போவதற்கு பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

* தமிழகத்தைப் பொறுத்தவரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. தங்கள் மகன் அல்லது மகளை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு தூண்டுவதோ அல்லது அவர்களை ஊக்கப்படுத்துவதோ இன்றைய தலைமுறை பெற்றோர் விரும்பவில்லை. தங்களது பிள்ளைகள் எப்படியாவது சாப்ட்வேர் படிப்புகளில் ஏதாவது ஒன்றை படிக்க வைத்து அதில் உடனேயே 20 ஆயிரம் 30 ஆயிரம் சம்பளம் பெற வைத்து பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.

* இளைய தலைமுறையினரும் சாப்ட்வேர் படிப்புகளின் மீது கொண்டுள்ள அதீத மோகமும் ஒரு காரணமாக உள்ளது. மேலைநாட்டு நாகரிகம், பெரிய அளவில் பணம், எப்படியாவது அமெரிக்கா போகவேண்டுமென்ற பிடிவாதம் போன்ற காரணங்களால் சாப்ட் வேர் துறையில் "ஒயிட் காலர் ஜாப்' செய்யவே விரும்புகின்றனர்.

*தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாநில அரசும், தனியார் நிறுவனங்களும் தவறி வருகின்றன. சிவில் சர்வீசுக்காக மாணவர்கள் தங்கிப் படிக்க வசதிகளோ போதுமான புத்தகங்களோ தமிழகத்தில் இல்லை. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கூட சிவில் சர்வீஸ் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம். நான்கு மாதங்களுக்கு முன்னரே புக் செய்தால் தான் சென்னை மாணவர்களுக்குகூட டில்லியில் இருந்து தான் புத்தகம் வருகிறது என்பது அரசு வட்டாரங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

* போட்டிபோட்டுக் கொண்டு இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்க ஆசைப்படும் தனியார் நிறுவனங்கள், ஐ.ஏ.எஸ்., கோச்சிங் சென்டர் துவங்க வேண்டுமென்ற எண்ணமே தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணாநகரில் மட்டும் அரசு தரப்பில் கோச்சிங் சென்டர் உள்ளது. இங்கும் எந்தவித பெரிய அளவிலான வசதிகள் ஏதும் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு மொத்தம் 26 பாடங்கள் உள்ளன. ஆனால், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், ஜெனரல் ஸ்டடீஸ் ஆகிய இரண்டே இரண்டு பாடங்கள் மட்டுமே அண்ணா நகரில் சொல்லித்தரப்படுகிறது.

* டில்லியில் உள்ள வாஜிராம் அண்டு ரவி, இன்ட்ராக்ஷன், ஸ்ரீராம், ராவ் ஆகிய நான்கு மையங்கள் உள்ளன. வாஜிராம் அண்டு ரவி மையத்தில் 26 பாடங்களும் மிகவும் தெளிவாக சொல்லித் தரப்படுகின்றன. ஷிப்ட் முறையில் வந்து அனைத்துப் பாடத்திற்கும் மிகவும் திறமையான பேராசிரியர்கள் வந்து பகுதி நேரமாக சொல்லித் தருகின்றனர்.

* அண்ணாநகர் மையத்தில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தவும், அங்கு முக்கிய பாடங்களுக்கு பலவற்றுக்கு திறமையான பேராசியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். அதேபோல சென்னை மட்டுமல்லாது, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கென மையங்கள் உருவாக்கி சென்னையை மையமாக வைத்து கிளஸ்டரை உருவாக்கலாம்.

* இதுபோன்ற திட்டங்களுக் கெல்லாம் தமிழக அரசு முன்னுரிமை தரவதே இல்லை. அதனால் தான் தமிழகத்தில் பெரும்பாலான கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆட்சி நிர்வாகப் பணிகளில் அமர்வதை தமிழகம் மறக்குமேயானால், மாநிலத்தின் உயர் ஆட்சிப் பணிகளில் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கமே இன்னும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

புத்தகமே இல்லை! : சிவில் சர்வீசில் தேர்வுக்கு பெரும்பாலோனோர் வரலாறு பாடத்தையே தேர்வு செய்து படிக்கின்றனர். இந்தியிலும்,

ஆங்கிலத்தில் மட்டுமே வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய உள்ளன. தமிழில் சொற்ப அளவிலேயே உள்ளன. இதனால், தமிழக மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

பதிப்பாளர்கள் எல்லாருமே வட இந்தியர்களாக உள்ளனர். தமிழகத்தில் திறமையான பேராசிரியர்

களைக் கொண்டு வரலாற்றுப் புத்தகங்கள் எழுத பதிப்பகங்கள் முன்வர வேண்டும். இதற்கு அரசு தரப்பில் மானியம் அளிக்கப்பட்டு ஊக்கம் தர வேண்டும்.

எதில் பலவீனம்? : ஸ்போக்கன் இங்கிலீஷ் மிகவும் பலவீனமாக தமிழக மாணவர்களிடையே உள்ளது. பெரிய பட்டப் படிப்புகள் படித்திருந்தாலும், நேர்காணலின்போது பல மாணவர்கள் இதில் கோட்டை விடுகின்றனர்.

பேனலில் பலரும் இந்திக் காரர்கள் இருப்பதால், வட இந்திய மாணவர்கள் இந்தியில் பேசி சமாளித்துவிடுகின்றனர். ஆனால்,

தமிழக மாணவர்கள் இந்தியும் தெரியாமல், இங்கிலீசும் சரிவர தெரியாமல் இருப்பதால் தடுமாறுகின்றனர். இதனால், நேர்முகத் தேர்வில் பலரும் தேர்வு பெறும் வாய்ப்பை இழக்கின்றனர்.

நன்றி : தினமலர்.காம்

--
M.Sivasankar , Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4