Monday, January 28, 2008

ஜெயகாந்தன் - ஒரு பார்வை

ஜெயகாந்தன் - ஒரு பார்வை

--சீதாலட்சுமி


ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்
ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.
ஜெயகாந்தன் ஒரு மனிதர்
ஜெயகாந்தனின் பல முகங்களையும் விமரிசித்து எழுதிவிட்டார்கள்
புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.
ஆனாலும் அவர்பற்றி பேச எழுந்த ஆர்வத்தின் வெளிப்பாடு
இச்சித்திரம். அவருடன் பழகிய காலத்தில் எனக்குக் கிடைத்த
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கூறுவதற்கு
நிறைய இருப்பினும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும்
சொல்ல விரும்புகின்றேன்
அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று
நிறைய பேசினேன், எங்கள் நட்பு வளரக்காரணம் எங்களிடையே
இருந்த துணிச்சலும் , வெளிப்படையான பேசும் பழக்கமும் தான்.
நான் எட்டயபுரத்துக்காரி என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்னொரு செய்தியையும் நான் கூற வேண்டும்.
பாரதி பிறந்த இல்லம் அவர் தாய் மாமன் சாம்பசிவ அய்யருடையது.
ஆனால் பின்னர் அவர் திருமணமான பின் வெளியூரிலிருந்து வந்த பொழுது அதே
தெருவில் இன்னொரு வீட்டில் சிறிது காலம் தன் மனைவியுடன்தங்கி இருந்தார்.
நானும் அதே வீட்டில் கொஞ்ச காலம் வாழ்ந்தேன். இரண்டு வீடுகளும் ஒரே
தெருவில் அமைந்திருந்தன.. என் பள்ளிப் பருவகாலத்தில் மாலை நேரங்களில்
சாம்பு மாமாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேன். சுதந்திரம் பெறாத
காலம். எனவே சுதந்திரப் போராட்டவீரர்களின் கதைகளை மாமா சொல்லுவார்.
பாரதிபற்றிப் பேச்சு வராமல் இருக்குமா? பாரதியின் சிறுபிள்ளைச்
சுட்டிதனம்பற்றியும் அவர் பாடல்கள்பற்றியும் நிறைய பேசுவோம்.
“ஜெய பேரிகை கொட்டடா ‘ என்ற பாட்டை மாமா சத்தம் போட்டுப்
பாடுவார். ஏற்ற இறக்கங்கள் உச்ச ஸ்ருதியில் உணர்ச்சி பொங்கப் பாடுவார்.
நான் ஆச்சரியத்துடன் அவரைப் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
“மாமா, பாரதியும் இப்படித்தான் பாடுவாரா ?’என்று கேட்பேன்.
“என்னைவிட உணர்ச்சியுடன் பாடுவான்மா “ என்பார். எத்தனை
பாட்டுக்கள் அவர் பாடிக் கேட்டிருக்கின்றேன் அவர் பாடியவைகளில்
எனக்கு மிகவும் பிடித்தது , “அச்சமில்லை, அச்சமில்லை என்பதே”
பாரதியிடம் நான் ரசித்தது அவர் துணிச்சல்.எனக்குள் பாரதி அன்றே
புகுந்து விட்டான்.
பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவரை வெளியுலகம் அதிகம்
உணரவில்லை. அதனால்தான் அவர் இறந்த பொழுது இறுதியாத்திரைக்கு
15 பேர்களே வந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரம் வரும் முன்னரே புகழ்
பரவ ஆரம்பித்துவிட்டது. மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும்
பாரதிக்காக மணி மண்டபம் கட்ட நினைக்கவும், பாரதியின்பாடல்களும், அவரது
உணர்வுகளும் மக்களிடையே புத்துயிர் பெற்றதுபோல் வேகமாகப் பரவிற்று. “மணி
மண்டபம் கட்ட நீங்கள் கொடுத்த நிதி உதவி போதும் . இனி யாரும் பணம் அனுப்ப
வேண்டாம் “என்று
கூறும் அளவு மக்கள் தங்கள் ஈடுபாட்டைக் காட்டினர். “போதும் “ என்ற
ஒர் நிறைவுக்குச் சொந்தக்காரன் பாரதி
அடிக்கடி நான் ஒன்று நினைப்பது உண்டு
தமிழ் மன்னர்களில் மாமன்னன் இராஜ இராஜன். அவன் புகழை இக்கால
மக்களுக்கு உணர்த்தியது கல்கி. பாரதியின் பாட்டுக்களை, அதன்
உயிரோட்டத்தைத் தொட்டுக்காண்பித்த பெருமை ராஜாஜிக்கும் கல்கிக்கும்
உண்டு..இந்தியாவிற்கு 1947ல் ஆகஸ்டு மாதம் 15ந் தேதி சுதந்திரம்
கிடைத்தது. பாரதிக்கு மணிமண்டபம் பூர்த்தியாகி , 1947. அக்டோபர் மாதம்
13ந்தேதி திறப்பு விழா நடை பெற்றது. மக்களின் சுதந்திர
தாகம்,எட்டயாபுரத்தில் பாரதி மணி மண்டபமாக எழுந்தது பொருத்தமே

என் வாழ்வில் முதலில் அருகில் பார்த்த அரசியல்வாதியும் எழுத்தாளரும்
ராஜாஜி அவர்கள். அருகில் உடன் இருந்தவர் கல்கி. என் தந்தை தன் மகள் என்று
அறிமுகப் படுத்திய பொழுது என்னை அருகில் அழைத்துமுதுகில் தட்டிக்
கொடுத்துப் பேசியவர் கல்கி. என் மலரும் நினைவுகள் மகிழம்பூவாய்
மனத்திற்குள் காத்து வருகின்றேன்.

நான் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். தெரியும். எங்கள்
நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும்,
பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.
பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
என் வளர்ப்பின் அடித்தளம் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
நட்புக்கு சக்தியாக இருந்தவர் பாரதி.
நாங்கள் இருவரும்அச்சமில்லாதவர்கள்.வெளிப்படையாகப் பேசுபவர்கள்.
ஆடம்பரமில்லாதவர்கள்.
அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள்.
மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப்
பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்துஉண்மைகளை சத்தம் போட்டுக்
கூறியவர்.
அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன.
நான் செயலில் இறங்கினேன்.
இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.
கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.
என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது
மனங்களில் வரைந்த சித்திரம். உணர்வுகள்.என்னுடைய பணியில் எனக்குக்
கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன.இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய
சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம் என் சாதனைகள் என்று
கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் . எனக்கு அறிஞர்களையும் சாதனையாளர்களயும்
ந்ண்பர்களாகும் வாய்ப்புகள் கடவுள் தந்த பரிசுகள். கடந்த கால
நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

ஜெயகாந்தனும் நானும் சேர்ந்து ஒரு கிராமத்தைப் பார்க்கச் சென்றோம்..
அப்பொழுது நேரிடையாக மாபெரும் சக்தியுள்ள மனிதரைப் பார்த்தேன்
மணியனுக்கு நன்றி செலுத்தினேன்.
விகடனின் மணியன், இதயம் பேசுகிறது பத்திரிகைக்குச் சொந்தக்காரர்
ஆகியிருந்த பொழுதும் ,மணியன் - ஜெயகாந்தன் நட்பு அப்படியே இருந்தது.
1971ல் தான் ஜெயகாந்தன் எனக்குத் தெரியும். மணியனோ
1958ஆம் ஆண்டு முதல் தெரியும். ஜெயகாந்தனைக் கூட்டிச்செல்லும்படி
மணியன் கூறியிருந்தார். காரண காரியங்களை அடுத்து விளக்குகின்றேன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4