Saturday, July 08, 2006

காரட் தயிர் பச்சடி

இன்றைய சமையல் குறிப்பு:

முத்தமிழ் குழுமத்தில் உள்ள அனைவரையும் கொடுமைப் படுத்தியாவது சமையல்
கற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த (!!!) இலக்கை கொண்டுள்ளதால்
இன்று காரட் தயிர் பச்சடிக்கான குறிப்பை தருகிறேன். எனது குறிப்பைப்
பயன்படுத்தி, ஆண்கள் அனைவரையும் மனைவிக்கு சமைத்துத் தரும்படியும்,
பெண்கள் கணவரை செய்து தரும்படி சொல்லி சாப்பிடும்படியும் பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன். (ஹ ஹ ஹா ஹா!)

காரட் தயிர் பச்சடி:

தேவையானப் பொருட்கள்

காரட் - நான்கு
ப. மிளகாய் - மூன்று
பெ. வெங்காயம் - ஒன்று
கடுகு - சிறிது
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தயிர் - இருநூறு மி.லி
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்

செய்முறை
முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்
வெங்காயம், ப,மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு
சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட்,
உப்பு சேர்க்கவும்.
அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.

எழுதியவர் முத்தமிழ் குழும உறுப்பினர் சித்ரா செல்லதுரை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4