Tuesday, February 28, 2006

அமிர்தம் == அம்மா

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கவிதைகள்
அமிர்தம் == அம்மா

உணவினை சமைத்து
நைசாய் குழைத்து
சூட்டை தணித்து
ஓடி ஓடி மழலையைப் பிடித்து
துரத்தி துரத்தி...
வேண்டாமெனிலும் நிர்பந்தித்து
வாயில் திணித்து
நிலாக் கதை சொல்லி
பூச்சாண்டி பேச்சுக்கள் பேசி
ஓங்கிய கைகள்
ஓசைப்படாமல் கன்னத்தில் கிள்ளி
அணைத்து அரவணத்து
சில நேரம் அடித்து
கடைசியாய்...
ஊட்டி முடித்து
உணவு தட்டினில்
மிச்சம் இருக்கும்
எச்சங்களே..
எல்லா தாய்க்கும் அமிர்தம்..
-விழியன்

ஒரு நாள் பொறுத்திரு

என் அமுதே என் கனியே
என் வாழ்வின் ஆதாரமே
நாளையாவது உணவு கிட்டும்
கவலைகள் பறந்தோடும்
ஒரு நாள் பொறுத்திரு

முகத்தில் புதிதாய் ரேகைகள்
நாள் முழுவதும் கண்ணீர் சென்ற தடங்கள்
உன் தேம்பலின் அர்த்தம் அறிவேன்
வயிற்றில் சோறில்லை
காம்பில் பாலில்லை
எஞ்சியது நம்பிக்கை மட்டும்
ஒரு நாள் பொறுத்திரு

கடவுளை துதிப்பதும் இல்லை நிந்திப்பதுமில்லை
எத்தனை கொடுமை
காச நோய்க்கு தந்தை
இரும்பி இரும்பியே சேர்ந்தாள் என் தாய்
விஷச் சாராயத்திற்கு விலை என் தாலி
காட்டாறு விழுங்கியது வீட்டையும் மாட்டையும்
நன்றி சொல்வேன்
ஒன்றுக்கு மட்டும்
உதிரத்தை பாலாக்கும் பேறுக்கு

நாளை விடியல் பிறக்கும்
வயிறு நிறையும்
கவலை நீங்கும்
என் மார்பில் பால் சுரக்கும்
ஒரு நாள் பொறுத்திரு

- விழியன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4