Wednesday, March 15, 2006

தாட்சாயிணி தாண்டவம் - திலகபாமா

தாட்சாயிணி தாண்டவம்

இற்று விழுகின்றன
என் தாலியின் கண்ணிகள்
ஆடி ஆடி
ஆனது ஆனதென்று சொல்லிச் சொல்லி
சொல்லத் தேவையில்லை
எனும் தருணத்தில்
இற்று விழுகின்றன

அதில் இருந்திருந்த
சிவனார்கள் தொலைந்து போனார்கள்
ஆடிய ஆட்டத்தில்
குண்டலங்களைத் தொலைத்து
வென்று விட வழி இல்லாது செய்த
என்னுடன் இருக்கப் பயந்து


வலப் பக்கம் நான் தர மறுத்ததை
சொல்ல வெட்கி
இடப் பாகம்
இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய்
சொல்லிப் போக

நெற்றிக் கண் நெருப்பு
சாம்பராகிப் போனது
தாட்சாயிணி தொடங்கினாள்
தாண்டவத்தை
பாதத்தினடியில்நசுங்கும்

பலநூறு வருட சாபங்கள்
மேகங்களாய்
மழையாகி
வெள்ளமாகி
கழுவிப் போகப் பார்க்கின்றது
உப்புக் கரிக்கும் கடலையும் சேர்த்து

Sunday, March 12, 2006

வேலைக்கான சரியான நபர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

சுமார் நூறு கற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு மூடிய அறைக்குள் வைத்து ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்துவிடவும்.

வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் 3 அல்லது 4 நபர்களை அந்த அறைக்குள் அனுப்பி கதவை மூடிவிடவும்.
அவர்களை தனியாக விட்டுவிட்டு சுமார் 6 மணி நேரம் கழித்து நிலமை என்னவென்று பார்க்கவும்.

* அவர்கள் கற்களை எண்ணிக்கொண்டிருந்தால் கணக்கு (accounts) துறையில் போடவும்.
* திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருந்தால் கணக்காய்வு, தணிக்கை துறையில் போடவும் (auditing)
* அறை முழுவதும் எல்லா கற்களையும் கலைத்துவிட்டிருந்தால் அவர்களை பொறியியல் (இன்ஜீனியரிங்) துறையில் போடவும்.
* கற்களை வித்தியாசமான முறையில் அடுக்கியிருந்தால் திட்டத் துறையில் (planning) போடவும்.
* கற்களை ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொண்டிருந்தால் செயல் மற்றும் இயக்கத்துறையில் (operation) போடவும்.
* தூங்கிக்கொண்டிருந்தால், பாதுகாப்புத் துறையில் (Security) போடவும்
* கற்களை உடைத்து துண்டுகளாக்கிக் கொண்டிருந்தால் தகவல் தொழில்நுபத்துறையில் (Information Technology) போடவும்.
* அமைதியாக உட்கார்ந்துக் கொண்டிருந்தால் மனிதவள மேம்பாட்டுத்துறையில் (Human Resource Development) போடவும்.
* நாங்கள் பல விதங்களில் முயற்சி செய்தோம் என்று அவர்கள் சொல்வதுடன், ஒரு கல்லையும் இன்னும் நகர்த்தாமல் வைத்திருந்தால், விற்பனை துறையில் (sales) போடவும்.
* நீங்கள் அங்கு போகும் போது அவர்கள் ஏற்கனவே போய் விட்டிருந்தால் சந்தை படுத்துதல் (marketing) துறையில் போடவும்.
* ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் முக்கிய முடிவு எடுக்கும் திட்டக்குழுவில் (strategic Planning) போடவும்

இறுதியாக ஆனால் முக்கியமாக

* அவர்கள் ஒரு கல்லையும் நகர்த்தாமல் ஒருவரோடு ஒருவர் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி, நிறுவனத்தின் முக்கியமான உயர்ந்த நிர்வாகத்துறையில் (Top Management) போடவும்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4