Monday, February 27, 2006

தேசிய அறிவியல் தினம் - விழியன்

பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?

"தேசிய அறிவியல் தினம்".

இது எத்தனைப் பேருக்கு தெரியும்? நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம்
என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம்
கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல் தினம் பற்றியும் நாம்
அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான
காரணம் என்ன?

இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன்
விளைவு கண்டுபிடித்த தினம். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை
இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்
(1930) இவருக்கு கிடைத்தது. இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி
இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. மேலும் சில விவரங்கள்:

முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்
பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970

சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும்
ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசு
பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள்
பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு
தந்தார். 1934ல் பெங்களூர் இந்திய அறிவியல் கழக முதல்வராக
பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.


தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான
சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான்
அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை
எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். அவன் வாழ்கை தரம் உயர
வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஒரு பாடம்
அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள
அறியவேண்டும். வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, அவற்றை நிஜ
வாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் சாராம்சம் இது தான்.

ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.
கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். அது தான் கல்லோடு
வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. என்று
கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.

அனைவருக்கும் எனது தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள்

-விழியன்

1 Comments:

At 3:29 AM, Blogger முத்தமிழ் said...

கால்த்திற்கேற்ற பயனுள்ளக் கட்டுரை.
அறிவியல் தினத்தை அனைவரும் கொண்டாடுவோம்.
நன்றி விழியன்

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4