முத்தமிழில் குறும்புவாதிகள்
முத்தமிழ் கூகிள் குழுமத்தில் பல குறும்புவாதிகள் உலவுவதாக
கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஞ்சூர் ராசா என்ற குறும்புவாதி ஒருவர் குழுவில் உள்ள விழியன் என்ற இன்னொரு குறும்புவாதியின் புகைப்படத்துக்கு என்னென்ன வேலைகள் செய்திருக்கிறார் என பாருங்கள்.
"அன்பு முத்தமிழ் நண்பர்களே, தமிழ் திரையுலகின் புதிய வில்லன் நடிகர்
இவர்தான். இதுவரை 10 படங்கள் புக் ஆகியுள்ளதாக நமது நிருபர் சொல்கிறார்.
உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் கண்டுப்பிடிக்கும் 3
பேருக்கு பரிசு உண்டு. பரிசை புதுமுக வில்லனிடமிருந்து நேரடியாக பெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் விழாவில் விபாகையின்
வர்ணனைகளுடன் பரிசு வழங்கப்படும்.
அனைவரின் ஊகங்களும் வரவேற்கப்படுகின்றன."
--
மஞ்சூர் ராசா
தினம் தினம் இப்படி இந்த குறும்புவாதிகள் முத்தமிழில் அடிக்கும் லூட்டிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
2 Comments:
ஹா ஹா ஹா இந்த மொட்டைகளின் அட்டகாசங்கள் தாங்கலப்பா, குவைத்லகூட இருக்கறதா கேள்வி???? ;)
அன்பின் ஷிவ்.
முத்தமிழில் குறும்பு செய்யும் அன்பர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
குவைத்திலும் ஒரு பொல்லாத குறும்பர் இருக்கிறார்.
Post a Comment
<< Home