Tuesday, February 28, 2006

வெல்லப்படமுடியாத காலம் நான்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் ஆன்மிகம்-பண்பாடு எனும் இழையில் மிகச்சிறப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த இழையில் முத்தமிழ் குழுமத்தின் சீர்மிகு செல்வங்களான அரங்கர்,காழியூரார்,மஞ்சூரார் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இன்று முத்தமிழ் வலைபதிவில் இடம் பெறுகிறது.

அரங்கர்

"மூகம் கரோதி வாசாலம்
பங்கும் லங்கயதே கிரிம்..
........................................
........................................"
----கீதா மஹாத்மியம்.


எவனது கருணையானது ஊமையைப் பேச வைக்குமோ

முடவனை மலையைத் தாண்டச் செய்யுமோ

அந்த பரமானந்த மாதவனை வணங்குகிறேன்.



"எதனாலும் வெல்லப்படமுடியாத காலம் நான்."

--------ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதை.


காமமும் ஆசையும் பெரும் பசியுடையன.
அதற்கு இந்த உலகினையே ஆஹ¥தியாகக் கொடுத்தாலும் தீராது."
------- பகவான். ஸ்ரீ.கிருஷ்ணர், பகவத் கீதை.

[அதாவது பாலை நிலத்தில் பெய்த மழை போல் அடுத்த விநாடியே காணாது போகும். இன்னும் எங்கே? எங்கே? என்று கேட்கும். பெருமழை பெய்ததின் எந்த அடையாளமும் மிச்சமிருக்காது.]

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்."

"நுனிக்கொம்பர் ஏறினார் அ·துஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்."

"அதர்மம் ரக்த பீஜத்தினை உடையது.
அது வெட்ட வெட்ட வளரும் விருட்சம்;
பேராற்றலோடும் பெரு வேகத்தோடும் கிளைத்தெழும்.
தர்மம் ஆற்றல் குறைந்த வித்து;
இது மெதுவாகவே வளரும்.
எனவே அதர்மத்தை வெட்டி
தர்மத்திற்கு எருவாக இடவேண்டும்.
அப்போது அதர்மம் இன்னும் வேகமாகக் கிளைத்தெழும்;
இடைவிடாது தொடர்ந்து தர்மத்தின் காவலர்கள் இதனைச்
செய்யவேண்டும்..............................................................
....................................................................................
ஒரு தேர்ந்த போர் வீரனைப்போல்;
நாம் தினந்தோரும் சலிக்காமல் குளிக்கிறோமே
அழுக்கைக் கண்டு அஞ்சாமல் அதுபோல்..."
------ மகாகவி பாரதி, பாரதியார் கதைகள்.

[ரக்த பீஜம் - அசுர வித்து, வெட்ட வெட்டத் துளிர்க்கும் விருட்சம்]


பண்பாடு, நற்பண்புகள் முக்கியம் என பெரும்பாலோர் ஒத்துக்கொள்வோம். ஆன்மிகத்திலும் சீலம் மிகவும் அவசியம். ஆனால் அந்த நற்பண்புகள் மனதை சார்ந்தது. புலன்கள் நம் கட்டுபாட்டுக்குள் இருந்தாலே நற்பண்பிலிருந்து வழுவாமல் இருக்க முடியும். ஆனால் பெரியவர்களே

"சுருள் புரி கூழையர் சூழலில் பட்டுன் திறம் மறந்திங்கு இருள் புரி யாக்கையில் கிடந்தெய்தனன்.." - திருவாசகம்

"வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசைமு வாசையனல் மூட்டி"- திருப்புகழ்

"அஞ்சு மடக்கடக்கென்ப ரறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரு மங்கிலை..." - திருமந்திரம்
என அதன் கடினத்தை வெளிப்படுத்துகின்றனர். நற்பண்புகளை, நிலை தவறாத நிலையை பெறச் செய்யும் தெளிவான செயல் நுணுக்கமே உண்மை ஆன்மீகம். மாட்டுக்கு மூக்கணாங் கயிறுப் போல மனத்திற்கு மூக்கணாங் கயிறு மாட்ட முடியுமானால் அது உண்மை நெறி என்பதே பெரியோர் சொல்.

காழியூரன்

அஞ்சு மடக்கடக்கென்ப ரறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரு மங்கிலை..." - திருமந்திரம்


இத்திருமந்திரத்தில் அகிலமே அடக்கம்.

மனதிற்கு மூக்கணாங்கயிறு மாட்ட முடியாமல்தானே இத்தனை பிரச்சினைகள்.

மனம் ஒரு குரங்கு என்று தெரியாமலா சொன்னாங்க.

ஆனா குரங்குக்கு பதிலா வேறெ ஏதாவது சொல்லியிருக்கலாம்.

மனம் ஒரு மனிதன் அப்படீன்னு குரங்கும் சொல்லியிருக்கும்போல.


அதனால்தான் இறைவனை உன்னிடத்தில் தேடு.
ஆன்மா உன்னுள் உள்ளது என கூறியிருக்கிறார்களோ.


மஞ்சூர் ராசா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4