உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
தீமை ஒழிந்து நன்மை பொங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் பொங்கிப் பெருக திருவருள் துணை புரியட்டும்