Monday, February 27, 2006

கடவுளும் சாத்தானும்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கலீல் கிப்ரானால் எழுதப்பட்ட கதை

கடவுளும் சாத்தானும்

கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

எழுதியவர் "முறிந்த சிறகுகள்" எழுதியவர்...

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4