Monday, January 28, 2008

ஜெயகாந்தன் - ஒரு பார்வை

ஜெயகாந்தன் - ஒரு பார்வை

--சீதாலட்சுமி


ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்
ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.
ஜெயகாந்தன் ஒரு மனிதர்
ஜெயகாந்தனின் பல முகங்களையும் விமரிசித்து எழுதிவிட்டார்கள்
புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.
ஆனாலும் அவர்பற்றி பேச எழுந்த ஆர்வத்தின் வெளிப்பாடு
இச்சித்திரம். அவருடன் பழகிய காலத்தில் எனக்குக் கிடைத்த
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கூறுவதற்கு
நிறைய இருப்பினும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும்
சொல்ல விரும்புகின்றேன்
அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று
நிறைய பேசினேன், எங்கள் நட்பு வளரக்காரணம் எங்களிடையே
இருந்த துணிச்சலும் , வெளிப்படையான பேசும் பழக்கமும் தான்.
நான் எட்டயபுரத்துக்காரி என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்னொரு செய்தியையும் நான் கூற வேண்டும்.
பாரதி பிறந்த இல்லம் அவர் தாய் மாமன் சாம்பசிவ அய்யருடையது.
ஆனால் பின்னர் அவர் திருமணமான பின் வெளியூரிலிருந்து வந்த பொழுது அதே
தெருவில் இன்னொரு வீட்டில் சிறிது காலம் தன் மனைவியுடன்தங்கி இருந்தார்.
நானும் அதே வீட்டில் கொஞ்ச காலம் வாழ்ந்தேன். இரண்டு வீடுகளும் ஒரே
தெருவில் அமைந்திருந்தன.. என் பள்ளிப் பருவகாலத்தில் மாலை நேரங்களில்
சாம்பு மாமாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேன். சுதந்திரம் பெறாத
காலம். எனவே சுதந்திரப் போராட்டவீரர்களின் கதைகளை மாமா சொல்லுவார்.
பாரதிபற்றிப் பேச்சு வராமல் இருக்குமா? பாரதியின் சிறுபிள்ளைச்
சுட்டிதனம்பற்றியும் அவர் பாடல்கள்பற்றியும் நிறைய பேசுவோம்.
“ஜெய பேரிகை கொட்டடா ‘ என்ற பாட்டை மாமா சத்தம் போட்டுப்
பாடுவார். ஏற்ற இறக்கங்கள் உச்ச ஸ்ருதியில் உணர்ச்சி பொங்கப் பாடுவார்.
நான் ஆச்சரியத்துடன் அவரைப் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
“மாமா, பாரதியும் இப்படித்தான் பாடுவாரா ?’என்று கேட்பேன்.
“என்னைவிட உணர்ச்சியுடன் பாடுவான்மா “ என்பார். எத்தனை
பாட்டுக்கள் அவர் பாடிக் கேட்டிருக்கின்றேன் அவர் பாடியவைகளில்
எனக்கு மிகவும் பிடித்தது , “அச்சமில்லை, அச்சமில்லை என்பதே”
பாரதியிடம் நான் ரசித்தது அவர் துணிச்சல்.எனக்குள் பாரதி அன்றே
புகுந்து விட்டான்.
பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவரை வெளியுலகம் அதிகம்
உணரவில்லை. அதனால்தான் அவர் இறந்த பொழுது இறுதியாத்திரைக்கு
15 பேர்களே வந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரம் வரும் முன்னரே புகழ்
பரவ ஆரம்பித்துவிட்டது. மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும்
பாரதிக்காக மணி மண்டபம் கட்ட நினைக்கவும், பாரதியின்பாடல்களும், அவரது
உணர்வுகளும் மக்களிடையே புத்துயிர் பெற்றதுபோல் வேகமாகப் பரவிற்று. “மணி
மண்டபம் கட்ட நீங்கள் கொடுத்த நிதி உதவி போதும் . இனி யாரும் பணம் அனுப்ப
வேண்டாம் “என்று
கூறும் அளவு மக்கள் தங்கள் ஈடுபாட்டைக் காட்டினர். “போதும் “ என்ற
ஒர் நிறைவுக்குச் சொந்தக்காரன் பாரதி
அடிக்கடி நான் ஒன்று நினைப்பது உண்டு
தமிழ் மன்னர்களில் மாமன்னன் இராஜ இராஜன். அவன் புகழை இக்கால
மக்களுக்கு உணர்த்தியது கல்கி. பாரதியின் பாட்டுக்களை, அதன்
உயிரோட்டத்தைத் தொட்டுக்காண்பித்த பெருமை ராஜாஜிக்கும் கல்கிக்கும்
உண்டு..இந்தியாவிற்கு 1947ல் ஆகஸ்டு மாதம் 15ந் தேதி சுதந்திரம்
கிடைத்தது. பாரதிக்கு மணிமண்டபம் பூர்த்தியாகி , 1947. அக்டோபர் மாதம்
13ந்தேதி திறப்பு விழா நடை பெற்றது. மக்களின் சுதந்திர
தாகம்,எட்டயாபுரத்தில் பாரதி மணி மண்டபமாக எழுந்தது பொருத்தமே

என் வாழ்வில் முதலில் அருகில் பார்த்த அரசியல்வாதியும் எழுத்தாளரும்
ராஜாஜி அவர்கள். அருகில் உடன் இருந்தவர் கல்கி. என் தந்தை தன் மகள் என்று
அறிமுகப் படுத்திய பொழுது என்னை அருகில் அழைத்துமுதுகில் தட்டிக்
கொடுத்துப் பேசியவர் கல்கி. என் மலரும் நினைவுகள் மகிழம்பூவாய்
மனத்திற்குள் காத்து வருகின்றேன்.

நான் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். தெரியும். எங்கள்
நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும்,
பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.
பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
என் வளர்ப்பின் அடித்தளம் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
நட்புக்கு சக்தியாக இருந்தவர் பாரதி.
நாங்கள் இருவரும்அச்சமில்லாதவர்கள்.வெளிப்படையாகப் பேசுபவர்கள்.
ஆடம்பரமில்லாதவர்கள்.
அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள்.
மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப்
பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்துஉண்மைகளை சத்தம் போட்டுக்
கூறியவர்.
அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன.
நான் செயலில் இறங்கினேன்.
இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.
கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.
என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது
மனங்களில் வரைந்த சித்திரம். உணர்வுகள்.என்னுடைய பணியில் எனக்குக்
கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன.இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய
சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம் என் சாதனைகள் என்று
கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் . எனக்கு அறிஞர்களையும் சாதனையாளர்களயும்
ந்ண்பர்களாகும் வாய்ப்புகள் கடவுள் தந்த பரிசுகள். கடந்த கால
நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

ஜெயகாந்தனும் நானும் சேர்ந்து ஒரு கிராமத்தைப் பார்க்கச் சென்றோம்..
அப்பொழுது நேரிடையாக மாபெரும் சக்தியுள்ள மனிதரைப் பார்த்தேன்
மணியனுக்கு நன்றி செலுத்தினேன்.
விகடனின் மணியன், இதயம் பேசுகிறது பத்திரிகைக்குச் சொந்தக்காரர்
ஆகியிருந்த பொழுதும் ,மணியன் - ஜெயகாந்தன் நட்பு அப்படியே இருந்தது.
1971ல் தான் ஜெயகாந்தன் எனக்குத் தெரியும். மணியனோ
1958ஆம் ஆண்டு முதல் தெரியும். ஜெயகாந்தனைக் கூட்டிச்செல்லும்படி
மணியன் கூறியிருந்தார். காரண காரியங்களை அடுத்து விளக்குகின்றேன்

Monday, January 14, 2008

ஜில்லுன்னு ஒரு போட்டி விவரங்கள்

வலைபதிவர்களே, வாசகர்களே

முத்தமிழ் குழும ஆண்டுவிழவை முன்னிட்டு நடைபெறும் "ஜில்லுன்னு ஒரு போட்டி" அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசு தொகை $200. இதன் மூலம் நான்கு வலைபதிவர்கள், வாசகர்கள் கலந்துகொண்டு தலா $50 (சுமார் 2000 ரூ) பரிசு பெற வாய்ப்புள்ளது

முத்தமிழ் குழுமத்துக்கான பரிசு போட்டியில் பங்குபெற இந்த இணைப்புக்கு செல்லுங்கள்.

போட்டி பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன.

Labels:

Thursday, September 06, 2007

முத்தமிழ் குழுமம்

அன்புள்ள தமிழ் இதயங்களே

முத்தமிழ் குழுமம் முதலாம் ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னமும் சில மாதங்களே உள்ளன. முத்தமிழின் இரண்டாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். நம் முத்தமிழ் குழுவுக்கு நல்ல ஆதரவளித்த வலைபதிவு பெருமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

முத்தமிழ் கூகிள் குழுமம் மற்றும் முத்தமிழ்மன்றம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். முத்தமிழ் கூகிள் குழுமமும், முத்தமிழ் மன்றமும் முற்றிலும் வேறு வேறு என்பதை தெளிவிக்க விரும்புகிறோம். முத்தமிழ் கூகுள் குழுமம் வலைபதிவர் மற்றும் தமிழ் ஆர்வலர் மஞ்சூர் ராசா மற்றும் பல தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் குழுமம். தமிழ்மணத்தில் சிறப்பாக வலைபதியும் பலரும் முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் (குழுமத்தில் உள்ள இணைப்புகள் பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன)

முத்தமிழ் வலைபதிவுக்கும், குழுமத்துக்கும் உங்கள் மேலான ஆதரவை என்றும் தொடர்ந்து நாடுகிறோம்.

Labels:

Monday, January 15, 2007

முத்தமிழ் பிறந்தநாள்

அன்பின் முத்தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், வாழிய நலம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வரும் ஜனவரி 20, 2007 முத்தமிழ் குழுமத்திற்கு முதலாம் பிறந்தநாள்

ஆம். முத்தமிழ் குழுமம் பிறந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைந்துவிட்டது.

இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகள் புதுமையானவை. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது. உங்கள் சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். கட்டுரை மற்றும் சிறுகதை 400 வார்த்தைகளுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜனவரி 25, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்து மிக முக்கியமாக இந்த பிறந்த நாளில் முத்தமிழ் குழுமம் ஒரு நல்ல காரியத்தை உங்கள் முன் வைக்கிறது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

Citibank Account
Bangalore - Koramangala

A/c No. 5637000804 - Umanath

Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)

Mailing Address

S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095


முத்தமிழ் பிறந்த நாள் விழா சிறப்பாக அமைய குழும நண்பர்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு
முத்தமிழ் குழுமம்

Wednesday, January 10, 2007

மணி மேனேஜர் Ex

ஒரு அருமையான கட்டுரை, நம் ஹாய்கோபி அவர்களால் எழுதப்பட்டது, இந்த புதிய இலவச மென்பொருளை அனைவரும் தரவிரக்கம் செய்து பயன்படுத்தி மகிழலாமே? இனி கட்டுரை இதோ :

மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software).

இச்செயலி மூலம் தனிநபர் எவரும் தன்னுடைய ஒவ்வொரு வரவு செலவையும் கணக்கில் கொள்ள இயலும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (Budget) அமைத்து, வரவும் செலவுகளும் அத்திட்டத்துள் செயல்படுகின்றதா (Budget Performance) என்பதை கண்காணிக்க இயலும்.

இதன் அறிக்கைகள்(Reports) வசதி மூலம், குறிப்பிட்ட கால வரையில் நாம் செலவிடும் பணம் எங்கு, எவருக்கு, எவ்வளவு செல்கிறது என்பதை தெளிவாக அறிந்திட இயலும்.

மேலும், இச்செயலியில் பங்கு சந்தை, வாகனம், நிலம், நகை இதர முதலீடுகளையும் அதன் விவரங்களையும் இட்டு அதன் தற்போதைய மதிப்பினை கணக்கிட இயலும்.
(உ.ம்:இச்செயலியின் அறிக்கையின் வாயிலாக எனது வாகன எரிபொருளுக்கான ஆண்டு செலவையும் வாகன முதலீட்டின் தற்போதைய மதிப்பையும் அறிந்து, செலவைக் குறைக்க முடிந்தது)

மொத்தத்தில் இந்த செயலி எந்த ஒரு கணத்திலும் நம் நிதி/சேமிப்பின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை அறிந்திடவும், தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானவற்றில் சரியான வழியில் செலவிடவும் திட்டமிட/கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள்.

பல்வேறு கட்டற்ற தமிழ் கணிமை திட்டங்களை குறித்து முகுந்த் அவர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது இச்செயலியின் தமிழாக்கம் குறித்தும் பேசப்பட்டது. பின்னர் இச்செயலியினை வடிவமைத்து நிரல் திட்டத்தை நடத்தி வரும் மதன் கனகவேல் (இவர் ஒரு தமிழர்) அவர்களுக்கு மடல் அனுப்பிய போது, இச்செயலியினை தமிழில் மாற்ற இசைவு தெரிவித்தார். உடனடியாய் தமிழா! மொழிபெயர்ப்பு வலைத்தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒருவாரத்துக்குள் தமிழாக்கம் நிறைவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவில் நானும், முகுந்த் அவர்களும் பங்கு பெற்றோம்.

நான் முதன் முதலாய் நிரல் எழுதாமல் தமிழாக்கத்தில் மட்டும் பங்கு பெற்ற தமிழ் கணிமைத் திட்டம் இது.

இவ்வாரம் வெளியான இதன் புதிய வெளியீடான மணி மேனேஜர் 0.8.0.2வில் தமிழ் மொழி தெரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இச்செயலியை மணிமேனேஜர் தரவிறக்கப் பக்கத்திலிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

நம் பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்! தேவையற்ற செலவுகளை குறைக்க திட்டமிடுவோம்!
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

Thursday, January 04, 2007

அகமே புறம் - பகுதி 6

அகமே புறம் - 6

அதிகாரம் - 3

பழக்கத்தை உண்டாக்கல் - 2சரியான் காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் எளிதென்றும், புண்ணியத்தைச் செய்தலினும் பாவத்தைச் செய்தல் எளிதென்றும், சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நிலைமை அநேகமாக எல்லோராலும் நித்தியத்தன்மை யுடைய தெனக் கொள்ளத்தக்க தாகி விட்டது.

ஆசிரிய சிரேஷ்டரான புத்தரும் "தீய வினைகளையும் நமக்குத் துன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் எளிது; நல்ல வினைகளையும் நமக்கு இன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் அரிது..." என்று கூறியுள்ளார்.

இது மனித சமூகம் சம்பந்தப்பட்ட மட்டில் உண்மையானாலும் மனிதர் அபிவிருத்தியடையும் மார்க்கத்தில் கண்டு கழிக்கும் ஒரு அநுபவமேயன்றிப் பொருட்களின் ஸ்திரமான நிலைமையன்று, நித்தியத் தன்மை யுடைய தன்று; சரியான காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் மனிதர்களுக்குச் சுலபமாகத் தோற்றுவதற்குக் காரணம் அவர்களிடத்துலுள்ள மடமையும் அவர்கள் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் அறியாமையுமே.
ஒரு குழந்தை எழுதுதற்குக் கற்றுக்கொள்ளுங் காலையில் எழுதுகோலைப் பிசகாகப் பிடித்தலும் அச்ஷரங்களைப் பிசகாக எழுதுதலும் அதற்கு மிகச் சுலபமாகவும்; எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும் அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அதற்கு மிகப் பிரயாசமாகவும் தோற்றுகின்றன; விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் ஒழிக்கக் கூடிய எழுதற்றொழிலின் அறியாமை அதனிடத் திருத்தலான்.

கடைசியாக அவ்வஞ்ஞானம் நீங்கிய பின்னர் எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும், அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அக்குழந்தைக்கு இயற்கையும் சுலபமுமாகிவிடுகின்றன. அக்காலத்தில் பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் அதற்குத் தோற்றுகிறது.

இவ்வுண்மை மனத்தின் காரியங்கட்கும் வாழ்க்கையின் காரியங்கட்குமசமமாகப் பொருந்தும். சரியான காரியத்தை நினனத்தற்கும்
செய்தற்கும் அதிக அப்பியாசமும் விடாமுயற்சியும் வேண்டும்; சரியான காரியத்தை நினைத்தலும் செய்தலும் இறுதியில் இயற்கையும் சுலபமுமாகின்றன; அப்பொழுது பிசகான காரியத்தைச் செய்தல்பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் தோற்றுகிறது.

ஒரு சிற்பி அப்பியாசத்தினால் தனது தொழிலில் தேர்ச்சியடைதல் போல, ஒரு மனிதன் அப்பியாசத்தினால் நல்வினையில் தேர்ச்சியடைதல் கூடும்; அது புதிய நினைப்புக்களால் புதிய பழக்கங்களை உண்டுபண்ணுதலே யன்றி வேறன்று; எவனுக்குச் சரியான நினைப்புக்களை நினைத்தலும் சரியான செயல்களைச் செய்தலும் சுலபமாகவும், பிசகான நினைப்புக்களை நினைத்தலும் பிசகான செயல்களைச் செய்தலும் பிரயாசமாகவும் தோற்றுகின்றனவோ, அவன் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒழுக்கத்தையும் ஒப்புயர்வற்ற தூய ஆன்ம ஞானத்தையும் அடைந்து விட்டான்.


மனம் விரியும்....


நன்றி

ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran
The Art of Excellence - K.Raveendran

அகமே புறம் - பகுதி 5

அகமே புறம் - 5

அதிகாரம் - 3

பழக்கத்தை உண்டாக்கல் - 1


நிலைத்த மனோநிலைமை ஒவ்வொன்றும் மனிதனால் ஈட்டப்பட்ட பழக்கம்; அது திரும்பத் திரும்பத் தொடர்ந்து நினைக்கப்பட்டதால் பழக்கமாகியிருக்கிறது. தளர்ச்சியும்,உற்சாகமும், வெகுளியும், பொறுமையும், இவறன்மையும் ஈகையும், உண்மையில் மனத்தின் சகல தன்மைகளும் மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட நினைப்புக்கள்; அவை தாமாக நிகழும் வரை திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டுப் பழக்கங்களாகி யிருக்கின்றன. அடிக்கடி நினைக்கப்பட்ட ஒரு நினைப்பு, கடைசியில் மனத்தின் ஒரு ஸ்திரமான பழக்கமாகின்றது. அத்தகைய பழக்கங்களிலிருந்து வாழ்க்கை வருகின்றது...

தனது அநுபவங்களைத் திரும்பத் திரும்ப கொள்ளுதலால் அறிவை அடையும் இயற்கையுள்ளது மனம். முதலில் கிரகிப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகப் பிரயாசமாகத் தோன்றும் ஒரு நினைப்பு அடிக்கடி மனத்திற் கொள்ளப்படுதலால் பழக்கமும் இயற்கையும் ஆகின்றது.

ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில் தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது. ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில் அடைவதற்கு முடியாததாகத் தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிலைமை ஆகின்றது.
தனது பழக்கங்களையும் நிலைமைகளையும் ஆக்கற்கும் திருத்தற்கும்
மனத்திற்கு வலிமையுண்டு. இவ்வலிமை மனிதனது முத்திக்குக் காரணமாக இருப்பதுந்தவிர, தன்னை ஆளுதலால் அடையப்படும் பூரண சுதந்திரத்தையடையும் வழியைக் காட்டுகிறது. ஏனெனின், ஒரு மனிதன் தீய பழக்கங்களை உண்டு பண்ணிக்கொள்ளும் சக்தியை உடையவனாயிருப்பதுபோல, நல்ல பழக்கங்களை உண்டுபண்ணிக்கொள்ளும் சக்தியையும் உடையவனாயிருக்கிறான்.

இப்பொழுது நான் சொல்லும் விஷயத்தைச் சிறிது விளக்கிக் கூற வேண்டுவது அவசியம். இதனைப் படிப்பவரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்...

மனம் விரியும்....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran

அகமே புறம் - பகுதி 4

அகமே புறம் - 4
மனத்தின் தன்மையும் வன்மையும் -3

சகல வளர்ச்சியும் வாழ்வும் அகத்திலிருந்து புறத்திற்கு வ்ருகின்றன; சகல தேய்வும் அழிவும் புறத்திலிருந்து அகத்திறகுச் செல்கின்றன. இது பிரபஞ்சத்தின் ஒரு விதி.

சகல விரிவுகளும் அகத்திலிருந்து நிகழ்கின்றன; சகல திருத்தங்களும் அகத்தில் செய்யப்படவேண்டும். எவன் பிறரோடு போராடுதலை விட்டுத் தனது மனத்தைத் திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், தனது சக்திகளைப் பிரயோகிக்கிறானோ அவன் தனது சக்திகளையெல்லாம் ஒருமுகப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறான்; அவன் தனது மனத்தைச் சமநிலையில் நிற்கச்செய்த பொழுது இரக்கத்தாலும் ஈகையாலும் பிறரையும் அந்த நிலைமைக்குக் கொண்டு வருகிறான்; ஏனெனில், ஒருவன் பிறருடைய மனத்தை நடத்துவதும் ஆளுவதும் ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள் அல்ல; தனது சொந்த மனத்தின் மீது தனது நியாயமான அதிகாரத்தைச் செலுத்துவதும் உயர் தர ஒழுக்கங்களாகிய சன்மார்க்கங்களில் தன்னை நடத்துவதும் ஞானத்துக்கும்
சாந்திக்கும் வழிகள்.

ஒருவனுடைய வாழ்வு அவனது அகத்தினின்றும் அவனது மனத்தினின்றும் வருகிறது. அவன் அந்த மனத்தைத் தனது சொந்த நினைப்புக்களையும் செயல்களையும் கலந்து உண்டுபண்ணியிருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் நினைப்புகளைத் தெரிந்தெடுத்துத் தனது மனத்தைத் திருத்தும் சக்தியை உடையவன். ஆகையால், அவன் தனது வாழ்வையும் திருத்திக் கொள்ளக்கூடும். ஆன்றோரும்,
"ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்"

என்று கூறியுள்ளார்.

மனம் விரியும்.....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி

அகமே புறம் - பகுதி 3

அகமே புறம் - 3.மனத்தின் தன்மையும் வன்மையும் -2


தனது சொந்த நிலைமைகளைச் சிருஷ்டித்துக் கொள்வதற்கும், தான் வாழ்வதற்குத்தக்க நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கும், ஏற்ற சக்தி மனத்தினிடத்தில் உண்டு. மனம் எந்த நிலைமையையும் மாற்றுதற்கும், எந்த நிலைமையை விட்டொழித்தற்கும், வல்லமையுடையது.

ஆன்றோரும்,

"கெடுக்க வல்லதுங் கெட்டவர் தங்களை

யெடுக்க வல்லது மிம்மனம்...."

என்று கூறியுள்ளார்.

அது பல நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக அநுபவித்து அவற்றின் ஞானத்தை அடையுங் காலையில் தனது நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக் மாற்றிக்கொண்டும், கைவிட்டுக்கொண்டும் இருக்கிறது.

உள்நோக்கும் நினைப்புக்கள் ஒழுக்கத்தையும் வாழ்வையும் உண்டு பண்ணுகின்றன; நினைப்புக்களை மனிதன் தனது விருப்பத்தாலும் முயற்சியாலும் திருத்திக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் கூடும். பழக்கமும் பலவீனமும் பாவமுமாகிய தளைகள் தன்னாலேயே யுண்டுபண்ணப்படுகின்றவை; அவை தன்னால் மாத்திரம் அழிக்கப்படக்கூடும்; அவை ஒருவனுடைய் மனத்திலின்றி வேறெங்கும் இல்லை; அவை புறப்பொருட்களோடு சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவை உண்மையில் அப் புறப்பொருட்களின் கண் இல்லை.

புறம் அகத்தால் ஆக்கவும் திருத்தவும் படுகிறது. அகம் ஒருபோதும் புறத்தால் ஆக்கப்படுவதும் திருத்தப்படுவதும் இல்லை. மனக்கவர்ச்சிக்கு ஏது புறப்பொருளில் இல்லை; ஆனால், அப்பொருளின் மீது மனம் கொண்டிருக்கிற ஆசையில் இருக்கிறது. துன்பமும் நோவும் புறப்பொருட்களிலும் வாழ்வின் சம்பவங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை; ஆனால், அப்பொருட்களை அல்லது சம்பவங்களைப் பற்றிய மனத்தின் ஓர் ஒழுங்குபடாத நிலைமையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. தூய்மையால் ஒழுங்கு செய்யப்பட்டு, ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட மனம் பிரிக்கக்கூடாத வண்ணம் துன்பத்தோடு கட்டப்பட்டுள்ள சகல அவாக்களையும் காமங்களையும் ஒழித்துத் தெளிவையும் சாந்தியையும் அடைகிறது.

பிறரைக் கெட்டவர் என்றலும், கெடுதிக்கு மூலம் புறநிலைமைகள் என்றெண்ணி அவற்றோடு போராடுதலும் உலகத்தின் துன்பத்தையும், அமைதியின்மையையும் அதிகப்படுத்துவதன்றிக் குறைப்பதில்லை. புறம் அகத்தின் நிழல், அகத்தின் ககரியம். அகம் சுத்தமாயிருக்கும்பொழுது புறத்திலுள்ள சகல காரியங்களும் சுத்தமாயிருக்கின்றன. ஆன்றோரும்,
"கற்றதங் கல்வியுங் கடவுட் பூசைய
நற்றவ மியற்றலு நவையி றானமு
மற்றுள வறங்களு மனத்தின் பாலழுக்
கற்றவர்க் கேபய னளிக்கு மென்பரால்"

என்று கூறியுள்ளார்.

மனம் விரியும்....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி

அகமே புறம் - பகுதி2

அகமே புறம் - 2.மனத்தின் தன்மையும் வன்மையும் -1மனம் வாழ்வை விதிக்கும் நியந்தா; நிலமைகளைச் சிருஷ்டித்துது திருத்தும் கர்த்தா; தந்து சொந்தப் பலன்களை அநுபவிக்கும் போக்தா; பொய்யைச் சிருஷ்டிக்கும் திறனும் மெய்யைக் காணும் திறனும் மனத்திற்கு உண்டு. ஆன்றோரும் "மனத்தானா மாந்தர்க்குணர்ச்சி" என்று கூறியுள்ளனர்.மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது; நினைப்பு நூல். நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும். ஒழுக்கம், வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக்கொள்கிறது.மனிதன் மனத்தையுடைய உயிராகையால் மனத்தின் சகல சக்திகளையும் உடையவனாயிருக்கிறான். தான் விரும்புவனவற்றையெல்லாம் அடைதற்குத் தக்க கருவிகளைக் கொண்டிருக்கிறான். அவன் தனது அனுபவத்தினால் கற்கிறான்; அவன் தனது அநுபவத்தை மிகுக்கவும் குறைக்கவும் கூடும். அவன் பிறரால் எந்த இடத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை; ஆனால் அவன் தானே தன்னைப் பல இடங்களில் கட்டுப்படுத்தியிருக்கிறான்; அவன் தானே தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பதால், அவன் நினைத்த மாத்திரத்தில் தானே தன்னை அக்கட்டிலிருந்து நீக்கிக்கொள்ளக்கூடும்.அவன் தான் விரும்புகிறபடி தீயனோ அல்லல்து தூயனோ,கீழானோ அல்லது மேலானோ, மடையனோ அல்லது அறிஞ்சனோ ஆகக்கூடும். அவன் சில செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்து பழக்கங்களாக்கிக் கொள்ளலாம்; அவன் அவற்றிற்கு மருதலையான செயல்களை மென்மேலும் செய்து அப் பழக்கங்களை அழித்துவிடலாம். அவன் மெய்ப்பொருள் முழுவதும் தனக்கு மறைபடும் வரை தன்னைச் சுற்றிப் பொய்கலை அமித்துக் கொள்ளக்கூடும்; அவன் மெய்ப்பொருளைப் பூரணமாகக் காணும்வரை தன்னைச்சுற்றி பொய்களை ஒன்றின்பின் ஒன்றாக அழித்துவிடக்கூடும். அவன் செய்யக் கூடியன அளவற்றன்; அவன் பூரண ச்வதந்திரத்தையுடையவன். ஆன்றோரும்,"நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை

நிலைகலக்கிக் கீழிடு வானு-நிலையினு

மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத

தலையாகச் செய்வானுந் தான்."என்று கூறியுள்ளார்.நண்பர்களே கட்டுரையின் கட்டுமானமும் சரி நடையும் சரி சாரமும் சரி கடினமாயிருக்கும் என்பதால் சின்ன சின்ன பகுதிகளாக்கித் தருகிறேன்...

பின் குறிப்பு

நன்றி:

As A Man Thinketh by James Allen
மனம் போல் வாழ்வு - வ.உ.சி.

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - Dr.M.S.உதயமூர்த்தி...

இது என் சொந்தக் கட்டுரை அல்ல... ஜேம்ஸ் ஆலன் மூலம். அதன் பின்னர் வ.உ.சி யின் மனம் போல் வாழ்வு, என் இனிய நண்பர் Dr.M.S.உதய மூர்த்தியின், "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" ஆகியவற்றிலிருந்து "சுட்டது..."

அகமே புறம் - பகுதி 1

அகமே புறம்
-------------

அகத்தை யொத்தெ புறம்(வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கிறது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைபட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிற்து. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது.

வித்து,மலர்,கனி,இவை ஒன்றன் பின் ஒன்றாகவும்,ஒன்றிலிருந்து ஒன்றாகவும், எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புக்கள் அவனது செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புற நிலைமையுமாகிய கனிகளைக் கொடுக்கின்றன.

மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய
கோட்டையின் தனிக் காப்பாள்ன்.அவன் அந்த முறைமையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக்கூடும். அவன் தனது மனத்தை அதிகப்பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக்கொள்ளக்கூடும்; அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக்கொள்ளக்கூடும்.

இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். இதற்கு மாறாக, அவன் தனது ஒழுக்கத்தைச்
சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும். இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்..

ஒரு மனிதன் தன் வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால் அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான்.

அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கோண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான். அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும். அவன் சிறிது முன்னகவோ பின்னகாவோ, சகல தீமைகளையும் சகல கவலைகளையும் சகல துன்பங்களையும்
போக்கிவிடுவான்.ஏனெனில்-

தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும்,சுகப் ப்ராப்தியையும் அடையாமல் இரான்.
நண்பர்களே... இந்தக் கட்டுரைத்தொடர் உங்களுக்கு உபயோகமாய் இருக்குமா எனத் தெரிவிக்கவும்...என்னைச் செதுக்கிய திரு ஜேம்ஸ் ஆலன் அவர்களின் மூலத்திலிருந்து....

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

Monday, December 11, 2006

காலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்முத்தமிழ் குழுமத்துக்காக எழுதியவர் சிவா

இனிய இணைய இதயங்களுக்கு வணக்கம் வாழிய நலம்,
இன்று சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் புகழ்ந்துபாராட்டப்படும் ஒரு மனிதனுக்கு பிறந்தநாள், மண்ணில் உதித்தநாள், எவ்வளவோ பேதங்கள் வேறுபாடுகள் கூறப்படலாம், அவர் கன்னடர், மகாராட்டிரர் இதுபோல, ஆயினும் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். அதுவே இன்றும் என்னை அவரின் ரசிகனாக வைத்து ஒரு பதிவு போடும் அளவிற்கு கொண்டுவந்திருக்கின்றது.

ஒரு 12 வருடங்களுக்கு முன் என் எண்ணக்குதிரையை ஓட்டுகின்றேன், 1993ஆம் வருடம், நான் மூன்றாம் ஆண்டு இயந்திரப்பொறியியல் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்துவந்த சமயம், டிசம்பர் 12, தலைவரின் பிறந்தநாள் வந்தது, என் வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும், மற்றும் என் வகுப்பு ஆசிரியருக்கும், எங்கள் கல்லூரி கேண்டீனில் தேனீர் மற்றும் கேக் வாங்கிக்கொடுத்தது நினைவில் இன்றும் நிற்கின்றது, என் அப்போதைய கணினி ஆசிரியரான திரு.ஜவஹர் என்னிடம் கேட்டார், இந்த வயசுலயும் எப்படிப்பா சினிமாக்காரங்களுக்கு விசிரியா இருக்கீங்க? அப்படினு, நான் சொன்னேன் இன்னும் 50 வருசம் போய் கேட்டாலும் நான் விசிரியாத்தான் சார் இருப்பேன் அப்படின்னு... :) என் குரூப் தோழர்கள் இன்றும் ரஜினிப்படம் வந்தால் அமெரிக்காவில் இருந்தாலும் 500மைல்தூரத்தில் படம் போட்டிருந்தாலும், கார் போட்டுக்கிட்டு போயாச்சும் பாலாபிசேகம் எல்லாம் தலைவர் கட்டவுட்டுக்கு செய்துட்டு படம் பார்த்து விசில் அடிச்சிட்டு வந்துதான் மறுவேளை பார்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்களேன் எப்படி எங்கள் தலைவர் பக்தி அப்படினு?

இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு, என்னுடன் முதல் வருடம் ஜெயச்சந்திரன் என்று ஒரு தோழன் படித்தான், அவனுக்கு கல்லூரிக்கு பணம் கட்ட சிறிது பண முடை வந்ததால் அவன் தந்தையுடன் சென்று ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து முறையிட, ஒரு முழு செமஸ்டர் பீஸ் மற்றும் உணவுக்கட்டணத்தையும் உடனடியா கொடுத்தனுப்பின அந்த வள்ளலுக்கு ஒரு பதிவு என்ன? ஓராயிரம் பதிவு போட்டாலும் தகும்..
என்றும் ரஜினி ரசிகனாய்,
ஸ்ரீஷிவ்...:)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4