வேண்டுதல் வேண்டாமை இலான்
திருக்குறள் உரை எழுதுபவர் எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
மேற்கண்ட குறளின் பொருட்படி இணைந்தொழுகுவார்க்கு, வேண்டுதல் வேண்டாமை என்னும் நிலையிலாதாகும். அவ்வாறன மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு எதுபோதும் துன்பம் இலாதாகும்.
5. இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"...
இருள் - துன்பம்.
இருள்சேர் - துன்பத்தைச் சேர்க்கின்ற
இருவினை - இரண்டு வினை, நல்வினை, தீவினை
சேரா - அடைய மாட்டா
இறைவன் - தலைவன் (உடம்பின் தலைவன் - உயிர்)
பொருள்சேர் - அழியாத செல்வத்தைச் சேர்க்கும்
புகழ் புரிந்தார் - மெய்ம்மை சேர்ந்த புகழுடையச் செயலைச் செய்கின்றவர்
மாட்டு - இடத்து
விளக்கம்:
இறைவனாகிய உயிர்க்கு மெய்ம்மைப் புகழுடைய செயலைச் செய்கின்றவர்களிடத்து, துன்பம் தருகின்ற இருவினைப் பயனும் அடையமாட்டா. ("இன்பமும் துன்பமும் பிறர்தர வாரா" என்னும் புறநானூற்று வரிகள் காண்க)
குறிப்பு:
இறைவன் என்னுஞ் சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதால், அது இக்காலக் கடவுளைக் கூறியதாகக் கருத வேண்டாம். குறள் காலத்தில் வேந்தன் இறைவன் என அழைக்கப்பட்டான். உயர்வும் இறை என்றே அழைக்கப்படுள்ளது. உயர்ந்தோரைக் குறிக்கவும் இறை யுடன் ஆண்பால் விகுதி சேர்ந்து இறைவன் என்றாயிற்று. உயர்ந்தவர்கள் செய்யும் தொழிலை இறைவன் செயல் என்று கூறும் மரபு நம்மிடையே உண்டு.
6. "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்"...
மெய்,வாய்,கண்,காது,மூக்கு,செவி என்னும் ஐந்து பொறிகளை வாயிலாகக் கொண்டு இயங்கும் அவாவினை அகற்றுகின்ற நெறியாகிய மெய்ஞ்ஞானத்தின் வழி நின்று ஒழுக வல்லார், நீண்ட வாழ்நாளை உடைமையாகப் பெற்று நீடு வாழ்வார்கள்.
0 Comments:
Post a Comment
<< Home