தாட்சாயிணி தாண்டவம் - திலகபாமா
தாட்சாயிணி தாண்டவம்
இற்று விழுகின்றன
என் தாலியின் கண்ணிகள்
ஆடி ஆடி
ஆனது ஆனதென்று சொல்லிச் சொல்லி
சொல்லத் தேவையில்லை
எனும் தருணத்தில்
இற்று விழுகின்றன
அதில் இருந்திருந்த
சிவனார்கள் தொலைந்து போனார்கள்
ஆடிய ஆட்டத்தில்
குண்டலங்களைத் தொலைத்து
வென்று விட வழி இல்லாது செய்த
என்னுடன் இருக்கப் பயந்து
வலப் பக்கம் நான் தர மறுத்ததை
சொல்ல வெட்கி
இடப் பாகம்
இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய்
சொல்லிப் போக
நெற்றிக் கண் நெருப்பு
சாம்பராகிப் போனது
தாட்சாயிணி தொடங்கினாள்
தாண்டவத்தை
பாதத்தினடியில்நசுங்கும்
பலநூறு வருட சாபங்கள்
மேகங்களாய்
மழையாகி
வெள்ளமாகி
கழுவிப் போகப் பார்க்கின்றது
உப்புக் கரிக்கும் கடலையும் சேர்த்து
3 Comments:
உண்மையில் தாட்சாயணியின் தாண்டவத்தினை திலகாவின் எழுத்தினில் கண்டேன், வாழ்த்துக்கள்,
ஸ்ரீஷிவ்..
நன்றி
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home