குப்பை-விழியன்
குப்பை
வீட்டின் குப்பைகள்
வெளியில் போக
சிகரெட் துண்டுகள் வீசப்பட
காப்பிக்கோப்பைகளும்
பேருந்து சீட்டுகளும்்
நசுக்கி எறியப் பட
ஊரெங்கும் குப்பை.
குப்பைத் தொட்டிகள் தவிற
குப்பைகளை தின்ன
காத்திருக்கும் தெருவோர
மாடுகளும், நாய்களும், கழுதைகளும்
அவற்றுடன் போட்டிப்போடும்
சில மனிதர்களும்
குப்பைக் காகிதத்தை விற்று பிழைக்கும் சிறார்களும்
தூரத்து மேடையில்
புறக்குப்பையை சுத்தம் செய்கிறோமென
அகத்தினில் ஆயிரம் குப்பையோடு
பிரசங்கம் செய்யும் அரசியல் வாதிகள்.
இவற்றில் எது குப்பை என புரியாமல்
விழிக்கும் நான்
(மஞ்சூர் ராசாவின் செதுக்கலுக்கு பின்னர் வந்த கவிதை. நன்றி - மஞ்சூர் அண்ணா)
-விழியன்
1 Comments:
பயணங்களில் அதிக ஆர்வமுள்ளவன் நான்.. ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் போதும்.. குப்பைகள் தான் நம்மை வரவேற்கின்றன..
குப்பைகளை அகற்றியே ஆகவேண்டும்.. அகத்திலும்..புறத்திலும்...
Post a Comment
<< Home