Sunday, April 09, 2006

அம்மா தான் பிரதமர் - அன்பு செல்வன்

2011 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அம்மா மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.வென்றதும் ஆலோசனை கூட்டம் கூடுகிறது.

பிரதமராக அம்மாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறுகிறது.அடுத்ததாக மந்திரிகளாக யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடக்கிறது.(ஆலோசனை எல்லாம் கிடையாது.அம்மா அறிவிக்கிறார் அவ்வளவுதான்)

"பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்.எஸ் சந்திரன்" என்கிறார் அம்மா.

தடால் என்று ஒரு எம்.எல்.ஏ அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுகிறார்.அவரை தூக்கிக்கொண்டு போகிறார்கள் சிலர்.ஓ.பி.எஸ் மட்டும் நெளிகிறார்.

"ஏம்மா..இவருக்கு என்ன தகுதி இருக்குன்னு..." என்று இழுக்கிறார்.

"என்னையா ஒளர்ரீங்க?மந்திரியாறதுக்கு பெருசா தகுதி என்ன வேண்டிகிடக்கு?அடிமடியில கைவெச்சுடுவீங்க போலிருக்கு" என ஒரு எம்.எல்.ஏ முணுமுணுக்கிறார்.

"எஸ்.எஸ் இங்க வாங்க" என அம்மா அழைக்க ஓடோடி வருகிறார் எஸ்.எஸ்.

"பாதுகாப்பு மந்திரியாவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று சொல்லுங்கள்" என்கிறார் அம்மா.

"எனக்கு ஒரு தகுதியும் கிடையாது.இது நீங்கள் போட்ட பிச்சை" என்கிறார் எஸ்.எஸ்.பட படவென்று அனைவரும் மேஜையை தட்டுகின்றனர்.

"முஷாரப் வாலாட்டுனா என்ன பண்ணுவீங்க? என கேட்கிறார் அம்மா.

"அடேய் முஷாராப்.வேணாண்டா.அம்மா கிட்ட வம்பு வெச்சுகாதே.ஊடு கட்டி அடிப்பேன்.கால் முட்டிய பேத்து,யூனிபாரத்தை கழட்டி பஞ்சை பராரியா உன்னை லாகூர்ல ஓட வைப்பேன்." என கர்ஜிக்கிறார் எஸ்.எஸ் சந்திரன்.

"இப்படி தைரியமா பேசற எந்த பாதுகாப்பு துறை மந்திரியாவது நீங்க பாத்திருக்கிங்களா?" என கேட்கிறார் அம்மா."இல்லை" என தலையசைக்கிறார் பன்னீர்.அனைவரும் எஸ்.எஸ் சந்திரனை ஏற்று கைதட்டுகின்றனர்.

"நிதி மந்திரி செந்தில்" என அடுத்து அறிவிக்கிறார் அம்மா.

தொப் தொப் என இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் மயங்கி விழுகின்றனர்.பன்னீருக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது.

செந்தில் எனும் பெயரில் வேறு யாராவது எம்.எல்.ஏ இருக்கிறாரா என பார்க்கிறார் பன்னீர்.யார் யார் அதிமுகவில் எம் எல் ஏ என யாருக்கும் தெரியாதே?ஆனால் அம்மா சொன்னது நடிகர் செந்திலைத் தான் என்பது தெரிந்ததும் பன்னீர் அதிர்ச்சி அடைகிறார்.

"ஏம்மா,,இவருக்கு வாழைபழ கணக்கு கூட தெரியாதே.இவரை நிதி அமைச்சரா ஆக்குனா உலகம் பூரா சிரிக்குமே?உலக வங்கி தலைவர் கிட்ட ஒரு வார்த்தை இவரால பேச முடியுமா?ஐ.எம்.எப் எங்க இருக்குன்னு இவருக்கு தெரியுமா?காண்டலினா ரைஸ் கிட்ட இவர் என்னன்னு பேசுவார்?ஆலன் கிரின்ஸ்பேன் யாருன்னாவது இவருக்கு தெரியுமா? " என அதிர்ச்சியுடன் வினவுகிறார் பன்னீர்.

"இதெல்லாம் தெரியாத ஆளா இருக்கணும்னு தான் அமெரிக்கா காரன் கேட்டான்.எப்படியும் நம்ம பட்ஜெட்டை முடிவுபண்றது அமெரிக்கா காரன் தான்.அவன் எழுதின பட்ஜெட்டுல கையெழுத்து போட ஒரு ஆள் வேணும்.உலக வங்கி தலைவர் கிட்ட பேச என்ன இருக்கு?அவர் நீட்டுற வெள்ளை பத்திரத்துல கையெழுத்து போட்டா பத்தாதா?அவர் என்ன சொன்னாலும் தலை ஆட்டிகிட்டு சிரிச்சா போதாதா?அதுக்கு ஆர்வேர்ட்ல படிச்ச ஆள் தான் வேணுமா?" என அம்மா வினவுகிறார்.

"உண்மை அம்மா,உண்மை " என பன்னிர் ஒத்துக்கொள்கிறார்.
"குடும்ப நலத்துறை அமைச்சர் கா.காளிமுத்து" என அம்மா அறிவிக்கிறார்."அவருக்கு ரெண்டு சம்சாரமாச்சே" என யாரோ முணுமுணுக்கிறார்கள்.'யோவ் சும்மா கிட" என இன்னொருவர் அதட்ட அவர் பேசாமல் இருக்கிறார்.

கால்நடைத்துறை அமைச்சராக ராமராஜன் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் கைதட்டுகிறார்கள்.பகுத்தறிவுத்துறை என புதிதாக ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக மதுரை ஆதினம் நியமிக்கப்படுகிறார்.

மந்திரிகளின் பட்டியலை அப்துல்கலாமிடம் கொண்டு போய் தருகிறார்கள்.அந்த பட்டியலை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து "இந்தியா 2020" என்பதை "இந்தியா infinity" என மாற்றி விட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 Comments:

At 12:44 AM, Blogger Pot"tea" kadai said...

:-)

 
At 1:15 AM, Anonymous Anonymous said...

அவர் அதிர்ச்சி அடைந்து "இந்தியா 2020" என்பதை "இந்தியா infinity" என மாற்றி விட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
"true"

 
At 1:27 AM, Blogger தயா said...

பிரதமர் என எழுதிவிட்டு எம்.எல்.ஏக்களை அமைச்சாராக்குகிறீர்கள். (அம்மா ஆட்சி தானே என சமாளிப்பு சொல்லலாம் என்றா?)

அப்ப சிதம்பரம் பட்ஜெட் போடறதில்லையா? அமெரிக்கா தான் போடுகிறதா!

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4