கதையைக் குறை
முத்தமிழின் வளவினுள் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
"ஏதும் நடக்கலாம் என்பதை இந்திய தேர்வுக்கூட்டணிகள் உங்களுக்கு காட்டியிருக்கலாம்"....'அடச்சே" என்றெல்லாம் அலுத்துக்கொள்ளாதீர்கள். 'ஏனெனில் நாளாந்தம் நடக்கின்ற வேடிக்கை விளளயாட்டுக்கள்
தானே இவை.
முத்தமிழின் மெருகேற்றம் கண்டு மனம் பூரிப்பில் திளைக்கின்றது.
நினைவு நல்லது வேண்டும்என்பதற்கிணங்க நம் நினைவுகள் நல்லவையாக
இருந்துவிட்டால் 'நெருங்கிய பொருள் கைப்படும் என அறிந்தோம்.
அத்தோடு ஒரு கொக்கியோடு நிறுத்தினேன் அல்லவா? உங்கள் வாய்திறந்து நீங்கள்எப்போது பேசுவீர்களளென்ற ஆவலைத்தூண்டி விட்டு உங்கள் பேச்சின் ஆழம் உண்மை தெளிவு, ஞானம் இவை கலந்து ஒரு நல்ல பேச்சாக இருக்க வேண்டும்.
"சில பேரோடு கதைத்துக்கொண்டிரு்ந்தாலோ பொழுது போய்விடும். இன்னும்
சிலரோடு கதைத்துக்கொண்டிருந்தாலோ உற்சாகம் பீறிடும். இன்னும் சிலரோடு கதைத்துக்கொண்டிருந்தாலோ ஆயுள் அவதிப்படும்"...
இந்த மூன்று வகையானவர்கள் இருக்கின்றார்கள். இதில் நீங்கள் எந்த வகை?
அந்த முதல்இரண்டு வகையில் முதல்வகை நம் நேரத்தை சந்தோசமாக்குவார்கள். இரண்டாவது வகை நம் நேரத்தைப்பொன்னாக்குபவர்கள் மூன்றாவது வகையினர் நம் நேரத்தை கரியாக்குபவர்கள். ஆக இந்த மூன்றாவது வகையினரிடம் இருந்து எப்படி எம் நேரத்தை பாதுகாத்துக்கொள்வது?
முதலில் அவர்கள் பேச்சு எப்படித்தொடங்கும் என்பதை கண்டு கொண்டிருப்பீர்கள் இருந்தாலும் என் அனுபவத்தில் '.....அவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது என்பது மாதிரித்தான் தொடங்குவார்கள். சுயபுராணம் பாடுவதில்
பலே கெட்டிக்காரர்கள்..அப்பப்பப்போ உங்களுக்கு அவர்கள் பேச்சு அலுப்படையாமல் இருக்கின்றதா என்று பார்க்க இடைக்கிடை...'உங்களைப்பற்றியும்இரண்டு மூன்று'ஐஸ் மழை பொழிவார்கள்கள்அதை நீங்களே அவதானித்துக்கொள்ளலாம்,ஏனெனில் அது பொய் யான வார்த்தை என்பதுபோக போக அல்ல உடனேயே உங்களால் புரிந்து கொள்ள முடியும். அடிக்கடி உங்களைத்தேவையே இன்றி புகழ்ந்து தள்ளுவார்கள். அது வெறும் புழுகு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களிடம் இருந்து எப்படித்தப்பித்துக்கொள்ளலாம்.'இருங்க எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு இன்னொரு நாள் சாவகாசமா கதைபோமே!!" என்கின்ற ரீதியில் அவர்கள் மனம் புண்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.
'கம்பராமாயணம் தந்த சொல்லின் செல்வர்'எங்கள் ஆஞ்சநேயப்பெருமான் எப்படி அந்த பெயரைத்தட்டிக்கொண்டார். தெரியுமா?தேவையற்ற பேச்சுக்கள் அவர் வாயில் இருந்து எப்போதுமே வந்ததில்லை " கண்டேன் சீதையை' .. இதுதான் அவர் இராவணன் பிடியிலிருந்தசீதையைக்கண்டு இராமருகுச்சொல்லிய முதல் வார்த்தை! ஆக அந்த இரண்டே சொற்களில்வீண் வர்ணனைகள் இல்லை வாய்சவடால் இல்லை. அறிந்து தெளிந்து நேரத்திற்கு ஏற்ற வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். கதையைக் குறைப்பவனுக்கு ஆயுளூம் அதிகம் என்று ஆய்வுகளும் சொல்லி இருக்கின்றன.
நீங்களூம் சொல்லின் செல்வர் ஆக வேண்டாமா?!! அடுத்த முத்தமிழின் வளவினுள் உங்களைச் சந்திக்கும் வரை
'இன்பத்தை கருவாக்கினாள் பெண்'
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்"
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற
செல்வம் பெண்' விலையற்ற செல்வம் பெண்"....
மார்ச் 8ம் நாள் சர்வதேச மகளிர் தினம்'.. எல்லோருக்கும் பாதுகாப்பான நல் மகளிர் தின வாழ்த்துக்கள்
உங்களிடம் இருந்து...
--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி
2 Comments:
அன்பின் சிவனடியார்
பல ராமாயணங்கள் நம்மிடையே உண்டு.இதை எழுதிய எங்கள் குழு உறுப்பினர் சுதனின் விஜி கண்டேன் சீதையை என்ற சொற்றொடரை கம்ப ராமாயணத்திலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார்.ராவண காவியத்தை அவர் படித்தாரா இல்லையா என தெரியவில்லை.
சிவனடியார் அவர்களே,,
அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை
கதையைக்குறைத்துக்கொள் என்பதற்கிணங்க சொல்லின்செல்வர்" பற்றிச் சொன்னேன்.வரும் மகளிர் தினத்திற்கான படைப்பு என் அடுத்த பதிவில் வரும் என்ப்தைச்சொல்லி முடித்திருக்கின்றேன். மீண்டும் ஒரு தடவை நேரமிருந்தால் படித்துப்ப்பாருங்களேன்.
Post a Comment
<< Home