கால் நூற்றாண்டுக் கிழவர்கள
கிராமத்தில் என் பாட்டனார்..
சூரியன் உதிக்கையிலே உதயமாகி..
ஏறு பூட்டி..
கலப்பை எடுத்து..
உச்சி வெயிலிலே கூழ் அருந்தி..
மாமர நிழலில் ஒய்யாரமாய் ஓய்வெடுத்து..
தினம் தினம் மாடாய் உழைத்து
சூரியன் மறைகையில் உறங்கி..
முக்கால் நூற்றாண்டு வயதை கடந்து
என்றாவது முனகிக்கொண்டு..
"கால் வலிக்குது பேராண்டி..பிடித்து விடேன்.."..
இதோ நகரத்து சொகுசில் வாழும் இளசுகள்..
சாவிப்பலகையில் கை தொலைத்து..
திரையகத்தில் கண் வைத்து
சூரியனை வேண்டாத விருந்தாளியாக்கி..
நித்தம் நித்தம் உடல் உபாதைகள் ..
"முதுகு வலி மச்சி.."
"கை வலி மாமா.."..
"தலை நரைச்சிடுச்சிடா.."
என்ன தான் செய்வது இந்த
கால் நூற்றாண்டுக் கிழவர்களை?
ஆரோக்கியமே வாழ்வின் அச்சாணி
கற்றதும் பெற்றதும்
அம்மா கையால் அழகாய் கற்றது இருநூற்றி நாற்பத்தேழு
"தமிழ் எழுத்துக்கள்"
சாந்தி டீச்சர் அடித்து அடித்து தந்தது இருபத்தி று..
"ஆங்கில எழுத்துக்கள்"..
வரைபடத்தில் வண்ணம் தீட்டி கற்றது இருபத்து இரண்டு., (அப்போது)
"இந்திய மாநிலங்கள்"
உருண்டை உருண்டையாய் சுற்றுதென அதிசையத்தது ஒன்பது
"சூரியக் குடும்ப கிரகங்கள்"
யார் கோடு போடாமல் பிரித்ததென வியந்தது ஏழு
"பூமியின் கண்டங்கள்"
வளர வளர கற்றல் எண்ணிக்கை குறையுமோ??
கல்லூரி முடித்து...
மூன்றாண்டுகளாய் முக்கி முக்கி கற்றதும்
நோகாமல் நோன்பெடுக்க பெற்றதும்
மூன்று
"கட்" .. "காப்பி"..."பேஸ்ட்". .
இங்கே..
கற்றதும் பெற்றதும்
Cutறதும் Pasteறதும்
-விழியன்
2 Comments:
கவிதை நன்றி! கருத்தும் நன்று. நீங்கள் சொன்னது 100/100 உண்மை. எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமா அழிந்து வருகிறது/வருகிறோம். எவருக்கும் உறைக்க வில்லை என்பது தான் வருத்தம்
உண்மைதான் நண்பர் முத்தமிழ்.
இளம் பருவ நினைவுகள் எப்போதும்
சுகமானவை.இப்போதுள்ள இயந்திர
வாழ்க்கையில் எல்லாமே சிறிதளவாவது
அழிந்து தான் வருகின்றன.
Post a Comment
<< Home