Monday, February 20, 2006

கேள்விழி மகரந்தன் படைப்புகள்

"ஏழைகளின் அவல நிலை"
புத்தகம் வாங்கினேன்
ஆயிரம் ரூபாய்க்கு

இது கவிதை இல்லை கடுதாசி..
-----------------------------------------------------------------------

அன்பு நண்பனே,
நம்பத்தகுந்த ஊடகத்தில் நாம் சந்திக்கவில்லை
ஆயினுமென் நம்பிக்கையின் பாத்திரமானாய்
தேசத்திற்காக உழைக்கும் நீ எனக்காக
இறங்கிவந்து நட்பளித்தாய் கொஞ்சம்..
நேரம் பாராமல் என்னுடம் இருக்கும் நிமிடங்கள்
சந்தோஷத்தின் உச்சகட்ட தருணங்கள்
வாழ்வின் விளிம்பில் நிற்பவன் கூட
உன் கை பிடித்தால் நம்பிக்கை அறிவான்
பொய்யே எல்லாமுமாய் வாழும் உலகிலே
உண்மையாய் ஒர் உறவு நம்மிடம்
காலம் கணக்கு பார்த்து கொண்டுதான் இருக்கிறது
நமது நட்பின் வலுமை வலுக்க..
காதலர் தினம் காதலுருக்கு மட்டுமா?
நம்மை இணைத்ததும் இந்த தேசத்தின் மீதுள்ள காதலே..
அர்த்தமில்லா காதலென்னும் கதையிலே..
அன்பின் அர்த்தமாய் நீ நானும்..
வீரம் மிகுந்த என் அன்பு நண்பனுக்கு
என் பாசமிகு காதலர் தின வாழ்த்துக்கள்

-நட்பான காதலுடன்
கேள்விழி மகரந்தன்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் கவிஞர் கேள்விழி மகரந்தன் எழுதிய இனிய கவிதைகள்

1 Comments:

At 12:26 AM, Blogger சந்திப்பு said...

Fantastic... Muthamizh

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4