தத்துவம்
அடுத்தமுறை யாராவது வதந்தியைப் பரப்ப முயன்றால், இதை நினைத்துப் பார்க்கவும்:
தத்துவஞானி சாக்ரட்டீஸைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்
ஒரு நாள் சாக்ரட்டீஸின் நண்பர் மிக ஆர்வத்துடன் அவரிடம் ஓடிவந்து, "நண்பரே, உங்களுடைய சீடன் ஒருவன் என்ன செய்தானென்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.
"கொஞ்சம் பொறுங்க, நீங்க சீடனுடைய விசயத்தெ சொல்றதுக்கு முன்னாடி, உங்களுக்கு நான் ஒரு சின்ன தேர்வு வைக்கிறேன். அந்தத் தேர்வின் பெயர் மும்முறை வடிக்கட்டி தேர்வு" என்று சாக்ரட்டீஸ் சொன்னார்.
"மும்முறை வடிக்கட்டி"
"ஆமாம", என்று சொன்ன சாக்ரட்டீஸ், "நீங்கள் எனது சீடனைப் பற்றி சொல்வதற்கு முன்னால் ஒரு நிமிசம் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை சுருக்கமாக வடிக்கட்டவும்.
முதல் வடிக்கட்டி உண்மை.
"நீங்கள் சொல்லப்போகும் விசயம் நிச்சயமாக உண்மையான விசயமா?" என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.
"இல்லை, உண்மையெ சொல்லப்போனா நா இப்பத்தான் அந்த விசயத்தைக் கேள்விப்பட்டேன்." ஆனா….
"சரி, அப்ப அது உண்மையா இல்லையான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியாது."
இப்ப நாம இரண்டாவது வடிக்கட்டியெ எடுக்கலாம்.
இரண்டாவது வடிக்கட்டி: நல்ல விசயம்.
"என்னுடைய சீடனைப் பற்றி நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயமா?"
"இல்லை," ஆனா அது வந்து...
"அப்ப, நீங்க என்னுடைய சீடனைப் பத்தி மோசமா ஏதோ சொல்லப் போறீங்க, ஆனா அது உண்மையா, இல்லையான்னுக்கூட உங்களுக்குத் தெரியாது அப்படித்தானே?"
நண்பர் சங்கடமாக தோளைக் குலுக்கிக்கொண்டு, ஒரு மாதிரி நெளிந்தார்.
"இப்பவும் நீங்க இந்த சோதனையில் வெற்றிப்பெறலாம்.ஏன்னா மூணவது வடிக்கட்டி இருக்கு.
மூன்றாவது வடிக்கட்டி : பயன்
"நீங்க என்னுடைய சீடனைபபத்தி சொல்லப் போற விசயம் எனக்குப் பயன்படக் கூடியதா?
நண்பர் சங்கடத்துடன் "உண்மையா சொல்லனும்னா இல்லை"
சரி, நீங்க சொல்லப் போற விசயம் உண்மையோ, நல்ல விசயமோ அல்லது எனக்குப் பயனளிக்கக் கூடியதோ கிடையாது. பின்னெ எதுக்கு அதெ எங்கிட்டெ சொல்ல நினைக்கிறீங்க.
அந்த நண்பர் தனது தோல்வியை தலைக்குனிவுடன் ஒப்புக்கொண்டார்.
இதனால் தான் சாக்ரட்டீஸ் ஒரு மிகப் பெரிய தத்துவஞானியாகவும் உலகம் போற்றுபவராகவும் திகழ்ந்தார்.
குறிப்பு:தன் மனைவிக்கும் புளுட்டோவுக்கும் (சாக்ரட்டீஸின் சீடன்) உள்ள உறவை சாக்ரட்டீஸ் அறியாததற்கு காரணமும் இதுதான்.
தொடரும்
1 Comments:
நல்ல தத்துவம். ஆனா துணுக்க போட்டதோட நிக்காம சாக்ரடீஸோட தத்துவத்த பத்தியும் எழுதலாம்.
பிளேடோ - சாக்ரடீசின் மனைவி விவகாரம் இப்ப தான் தெரியும். எத்தன ஆயிரம் வருஷம் ஆனாலும் கிசு கிசு கேக்கறதுல ஒரு இன்பம் இருக்கு.... :)
Post a Comment
<< Home