நட்சத்திர கிரிக்கட் - 2 (அன்பு செல்வன்)
நட்சத்திர கிரிக்கட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.பிரட்லீ பந்துவீச தயாராகிறார்.முதலில் பேட் செய்ய புரட்சித்தமிழன் சத்யராஜ் வருகிறார்.பேட்டுக்கு பதில் சிலம்பக்குச்சியை ஏந்தி வருகிறார் புரட்சித்தமிழன்.
"சிலம்பக்குச்சியை வைத்துக்கொண்டு ஆடினால் பவுன்சர் போடுவேன்" என பிரட்லீ பயமுறுத்துகிறார்.சத்யராஜ் சிரிக்கிறார்."என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறையே தம்பி " என சிரிக்கிறார்.
"என்னம்மா கண்ணு,பவுன்சர் போடுவியா?உங்க டீம்ல இருக்கற 11 பேரையும் ஒரே சமயத்துல பந்து வீச சொல்லுடா கண்ணு" என்கிறார்.
டீமில் உள்ள 11 பேரும் சுற்றி நின்றுகொண்டு பந்துகளை எறிகின்றனர்.சிலம்பக்குச்சியை சுழற்றி அத்தனை பந்துகளையும் தட்டி ஆடுகிறார் சத்யராஜ்.திருமதி பழனிச்சாமி படத்தில் வருவது போல் ஒரு பந்து கூட அவர் மீதோ விக்கட் மீதோ படவில்லை.பந்துவீசி வீசி அனைவரும் களைப்படைகின்றனர்.ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது.தோல்வியை ஒப்புக்கொண்டு சத்யராஜை வழிஅனுப்பி வைக்கிறார் ரிக்கிபான்டிங்.
அடுத்ததாக விசு பேட் செய்ய வருகிறார்.அவரை வினோதமாக பார்க்கிறார் ப்ரெட்லி.அவர் அருகே விசு போகிறார்.
"ஏம்பா கண்ணா பிரட்லீ,என்னை உனக்கு முன்னமே தெரியுமா?"
"தெரியாதே" என்கிறார் பிரட்லீ.
"முன்ன பின்ன என்ன தெரியாதுங்கறே.அப்ப பேட் பண்ண வந்தது நான் தான்னு உனக்கு எப்படி தெரியும்?" என கேட்கிறார் விசு.
தலை சுற்றி பிரட்லீ மயங்கி விழுகிறார்.
"விசு,விசுன்னு காத்தடிக்குதில்ல,அதான் தம்பி மயங்கி விழுந்துட்டான்" என்கிறார் விசு.பிரட்லீயை தூக்கிக்கொண்டு போக வந்தவர்கள் அவரையும் சேர்த்து தூக்கிக்கொண்டு போகிறார்கள்.
அடுத்ததாக கமல் களமிரங்குகிறார்.ஸ்பின் பவுலிங் போட ஷேன் வார்ன் தயாராகிறார்.மெதுவாக கமல் ஷேன் வார்னிடம் போகிறார்.இரு விரல்களை மடக்கி இந்தியன் ஸ்டைலில் மெதுவாக ஷேன் வார்னின் கையில் வர்மத்தட்டு தட்டுகிறார்.ஷேன் வார்னால் கையை திருப்பவே முடியாமல் போகிறது.
"நிறுத்துங்க,இது அக்கிரமம்" என சத்தம் போடுகிறார் ரிக்கி பான்டிங்.கமலுக்கு கோபம் வந்துவிடுகிறது.
மெதுவாக அவர் அருகே போகிறார்.காதை பிடித்து ஒரே கடி."ஐயோ" என அலறுகிறார் பான்டிங்."கடவுள் பாதி,மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என பாடுகிறார் கமல்.வந்திருப்பது ஆளவந்தான் கமல் என புரிந்துகொண்டு அவரை பெவிலியனுக்கு கெஞ்சிக்கூத்தாடி அனுப்பி வைக்கின்றனர்.
அடுத்ததாக மாறுவேஷத்தில் ஒருவர் பாவமாக வருகிறார்."பாக்க அப்பாவி மாதிரி இருக்காரே,இவருக்கு பந்து போடவே மனசு வரலை" என்கிறார் மெக்ராத்.
"இவர் பாக்க பாவமா தான் இருப்பார்.ஆனா இவர் யார்னு தெரிஞ்சா நீங்க ஓடிடுவீங்க" என்கிறார் அம்பயர்.
"இவர் யார்? என கேட்கிறார்.
"இவர் சூர்யா.என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்,காக்க காக்க அன்புச்செல்வன்" என்கிறார் அம்பயர்.
ஆஸ்திரேலியாகாரர்கள் அனைவரும் விட்டலாச்சாரிய படத்தில் வருவது போல் மாயமாக மறைகின்றனர்.
3 Comments:
நல்ல அட்டகாசமான கிரிக்கட் போட்டி.
தொடருங்கள் நண்பர் முத்தமிழ்.
//முன்ன பின்ன என்ன தெரியாதுங்கறே.அப்ப பேட் பண்ண வந்தது நான் தான்னு உனக்கு எப்படி தெரியும்?" என கேட்கிறார் விசு.//
கலக்கிட்டீங்க அன்பு :)
வாய்விட்டு சிரிச்சேன்! எப்படீப்பா இப்படியெல்லாம் எழுதமுடியுது!!
மீனா
நன்றி தனாரா,
நன்றி மீனா.
முத்தமிழ் கூகிள் குழும உறுப்பினர்களின் படைப்புக்களை தினமும் வலையில் தொடர்ந்து ஏற்றுவோம்.நன்றி
Post a Comment
<< Home