நிலா ரசிகன் கவிதைகள்
முத்தமிழ் கூகிள் குழுமத்தின் பெட்டகத்தில் இருக்கும் நவரத்தினங்கள் பல.அப்படிப்பட்ட ரத்தினத்தில் ஒருவன் தான் எங்கள் நிலா ரசிகன்.நிலவனை நாங்கள் அன்போடு "தேவதை ரசிகன்" என அழைப்போம்.நிலா தேவதை என்றால் அதை ரசிக்கும் எங்கள் நிலவனும் தேவதை ரசிகன் தானே?
இதோ முத்தமிழின் "நிலாரசிகன் கவிதைகள்" இழையில் எங்கள் தேவதை நிலவன் எழுதிய தேன் சிந்தும் கவிதைகள் சிலவற்றை இடுகிறோம்.நிலவன் கவிதைகளை படித்த பிறகு காதல் தேவதையே தன் மீது பெருமிதம் கொண்டாளாம்.காதலும் தமிழும் துள்ளி விளையாடும் எங்கள் தேவதை நிலவனின் கவிதைகள் இதோ உங்களுக்காக
மயிலிறகு மனசுக்காரன்...
வாழ்த்து அட்டைகள்,
பூங்கொத்துகள்,
இடைவிடாத தொலைபேசி
அழைப்புகள்...
இப்படி,
என் பிறந்தநாளுக்கான
வாழ்த்து மழையில்
நான் நனைந்து நின்ற
பொழுதில்
வெறுங்கையுடன் வந்து
நின்றாய் நீ.
பார்வையால் என்
கேள்வியுணர்ந்து
மயிலிறகு ஒன்றை
பரிசளித்துவிட்டு
கண்களால் வாழ்த்திவிட்டு
போகும் உன்னை
காதலனாய் பெற
என்ன தவம் செய்தேன்
நான்?
மனிதப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே?
நாய்க்குட்டியிடம்
நீ கொஞ்சுவது
கண்டப்பின் மனித
பிறப்பே எனக்கு
பிடிக்கவில்லை போ!
மகாலஷ்மியின் தந்தை
கடவுள் நம்பிக்கை
இல்லை என்கிறார்
உன் அப்பா...
மஹாலட்சுமி
உன்னை வீட்டில்
வைத்துக் கொண்டு!!!
0
சுடிதாரில் நீ
பெண்.
தாவணியிலும் நீ
பெண்.
நம் திருமணத்தன்று
அணியும் சேலையில்
நீ என் உயிர்வளர்க்கும்
தேவதை.
4 Comments:
நிலாவின் புதுமையானக் காதல் கவிதைகள் மிக அருமை. வாழ்த்துக்கள்.
எல்லாக் கவிதைகளும் அருமையா இருக்கின்றன.
-ஞானசேகர்
காதல் அரும்பி பகலெல்லாம் போதாகி மாலையாகும் காதல் மணநாளில்!!...காதல் சொட்டி..சொட்டி சொக்க வைக்கின்றன அத்தனையும் தேன்!!!..
என்றென்றும் உங்கள்
சுதனின்விஜி
நன்றி மஞ்சூர் ராசா, ஞானசேகர்,விஜி.
நிலவனின் தேன் சிந்தும் கவி அமுதை அடிக்கடி இடுகிறோம்.
Post a Comment
<< Home