Monday, February 20, 2006

முத்தமிழின் முதல்வன் படைப்பு

முத்தமிழ் கூகிள் குழுமத்தின் முதல் மாத நிறைவை ஒட்டி எழுதப்பட்ட "முத்தமிழ்" பா

முத்தமிழ் பா'

இயற்றியவர்: எங்கள் புலவர் இரவா ஐயா அவர்கள்.


முத்தமிழ் விளைநி லத்தில்

மூழ்கியே கலைப யின்றோம்!

சித்திரம் அறிந்தோம்! நம்மின்

திறந்தனை ஆய்ந்த றிந்தோம் !

வித்தகம் விளைத்துப் பார்த்தோம்!

வீரத்தின் திரனனைக் கண்டோ !

முத்தமிழ் நிலமே என்று,

மோகித்து மகிழ்ந்தி ருந்தோம் !



நடையினால் எண்ணக் கூட்டை

நாடிடும் பறவைக் கூட்டம்!

அடைந்திடும் வேடந் தாங்கல்,

ஆங்கது போலே, ஈங்கு,

மடையென இயலும் இசையும்

மாண்பெனச் சீறிப் பாயும்,

நாடகத் தமிழும் நன்றாய்ப்

பதிந்திடும் பரணி போல!



மறையெனும் குறளை ஈங்கு

மலிந்திடக் கூற வந்தார்,

அறமிடும் புலவர் ஐயா!

அன்பெனும் ஊற்றாம் கோவை,

அகங்தையில் குசும்பர், கூத்துக்

குறும்பையில் சேர்த்துக் கட்டிக்

கலித்தொகை விருந்த ளிக்கும்

கரத்தவர், வேந்தன் அண்ணா!

அறிவினால் செறிவைக் காட்ட

அருந்தமிழ்க் கண் திறப்பார் !

தெளிவுடன் வரலாற் றேட்டைச்

சிறப்புடன் திறந்து காட்டும் ,

திறமுள்ள அன்புச் செல்வன்

சிறந்திடும் கூட மாகும்!

தரமுடன் தமிழின் சொய்யம்

சமைந்திடும் மடத்தின் பள்ளி .

(மடப்பள்ளி - சமயலறை)



குட்டுகள் போடு கின்ற

குன்றென வந்த( திய) தேவர்

பெட்டகம் அரங்கர், அன்பின்

பிழிவெனும் உரை சொல் லாளர் !

கட்டிடும் மனைக்கு நல்ல

காவலும் தூணும் போல,

கட்டுடன் காவல் காக்கும்

கனிமொழி சுதனின் தோழி!



பொறுமைக்குத் தலைமை!. நல்ல

தலைமைக்கும் உவமை!.. மஞ்சூர்

நிறைகுடம் போன்றி ருந்து

நிறையுடை சுந்தர் அண்ணா !

இறையென அருளும் அன்பும்

ஈன்றிடும் அன்பின் பலத்தால்

வலம்வரும் காத லாலே

வளம்பெறும் சக்தி கோமான் (சிவா)

காதலைக் காத லாகக்

காண்டிடக் காதல் செய்வார் !

காதலைக் கவிதை என்பார்!

கவிதையே காதல் என்பார் !

ஆதலின் காதல் தோழன்

ஆகிய நட்பின் நிலவன்!

போதமாய் நட்பைக் கொண்டார்,

போற்றுதற் குரிய ராமர் !



முத்தமிழ் மூச்சாய்க் கொண்டு

முழுமன மாருதி ராமன்!

விழிகுல விழியன், குட்டி

விடைதரும் விடையன்! எட்டுத்

திசையிலும் புகழை ஈட்டும்

இளைஞரில் துடியன் நண்பன் !

பசையுடன் கோடம் பாக்கப்

பக்தனாம் டசிதரன்! அன்பால்,



கலகத்தைச் செய்ய, இலக்கி

யமோஇலக் கியமெனக் கூவி

கலக்கிடும் இரசிங்க...! அன்பால் ,

கடைந்திட்ட அன்புத் தோழன் !



முத்தமிழ் முன்னேற் றத்தில்

மூழ்கிய முபாரக்! வங்கக்

கடலில்கண் டெடுத்த முத்து!

கருத்துக்கு மீனா அக்காள் !

கருணைக்குக் காந்தி அம்மாள்!

பெறுதற் கரிய ஹைமா!

பேற்றுக்குக் கேள்விழி ! தேனின்

பிழிவினை அன்பால் ஈயும்



சேயெனும் அன்புத் தங்கை.

செல்லமாய் துள்ளித் துள்ளி

பாயிரம் பாடும் கோதைப்

பாடலின் பதிகம், மண்ணின்

வாகைக்கு வாழும் அன்பின்

வனப்பினை வளைத்துக் கொண்ட

தோகையும் நடன மாடும்

தொட்டிலாம் முத்தமிழ்த் தோட்டம்!



பூத்திடும் பூக்கள் தன்னில்

பூவிடும் மணத்தைப் போல ,

அறிவியல், ஆன்மீ கத்தை,

ஆனந்த சினிமா தன்னை,

சொற்சிலம் பாட்டம் போலச்

சுழன்றிடும் கட்டுக் கதைகள் !

சித்திரை நிலவைப் போல

சிந்தையைக் கவரும் படங்கள் !



வளைகுடாப் போல் பரந்து

வானத்தைப் போல் உயர்ந்து

தளைத்திடும் போதிலெல்லாம்

தனித்தனிப் பொருள் உணர்ந்து

கிளைத்திடும் குறளின் பொருளும்

கின்னரம் போல் மொழிவார்!



கொஞ்சிடும் தென்றல் போல,

குதூகலம் வீசும் காதல் !

கலித்தொகை தேனின் பாகு!

காவிய மாகும் வீரம்!

பொருள்தரும் தமிழின் சொத்தைப்

பொன்னெனப் போற்றும் பண்பு !

மின்னலாய்க் கண்ணில் தோன்றி

மீண்டிடா வண்ண பாட்டு!

புகைப்படக் கதைகள்! இன்றே

பூத்திட மலரும் நினைவு !



நலந்தரும் சொற்கள்! வண்ண

நடைதரும் ஆடை போல,

தையலால் தையல் செய்யும்

தையலார் தையல் உண்டு!

வையகம் முழுதும் ஆளும்

வாழ்வென இணைந்துள் ளார்கள் !

ஐயமும் அகலும்! ஈங்கே,

ஆணவம் அகந்தை மீளும்!



ஒளிர்ந்திடும் தமிழின் பூக்கள்,

ஒவ்வொறு மணத்தை வீசும்!

தளிர்கின்ற வலையின் பூவின்

தளதள மாலை செய்யவீர்!

இளையவர் பலரும் ஈங்கே,

எழுப்பிடும் எண்ண் மெல்லம்

மிளிர்ந்திட வேண்டும், நாளை !

மேதினி மகிழ்ந்தி ருக்க!

தளிர்க்கரம் பற்றிச் செல்லும்

தன்மகன் போல வாரீர்

---------------------------------------------------
கவிதை இயற்றிய எங்கள் குழு முதல்வனுக்கு,தமிழாசானுக்கு, முத்தமிழின் நன்றியுரை


எங்கள் குறளரசர் அதன் பொருளுக்கும் தான் அரசர், அன்பிலே காட்டும் பண்பிலே தமிழ் உறவாய ஆன என் தந்தை எங்கள் அன்புமிகு இரவா ஐயா,



வார்தைகள் இல்லை எனக்கு வாழ்த்துக்கள் உரைப்பதற்கு, நெகிழ்ச்சீயில் கண்ணில் நீர் பெருகுதே இப்போதெனக்கு, ஐயா. எத்தனை நேரம் இறுக்கமாய் இருந்தாலும் தமிழால், தமிழுக்கு நெருக்கமாய் ஆன உங்கள் உறவு அதன் பால் நீங்கள் காட்டிய அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. நிறைந்த நன்றிகள். "காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" என்ற வள்ளுவர் மொழிந்ததற்கேற்ப உங்கள் உதவி மிக மிக மிகப்பெரிது. வாழ்க! முத்தமிழ் ! வளர்க அதன் புகழ்!



'நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை என் தமிழ் தந்த தந்தைக்கு

4 Comments:

At 11:00 AM, Blogger Dr.Srishiv said...

ஆஹா
அற்புதமான அறுசுவை படைப்பு ஐயா
தங்களின் தமிழ்ப்பால் குடித்தால் கூற்றன்கூட நெருங்க பயப்படுவானே? வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்....:)

 
At 11:06 AM, Blogger முத்தமிழ் said...

நன்றி சிவஷங்கர்

காலனை காலால் உதைப்பேன் என்ற கவியின் வழிவந்த தமிழாசான் இரவா இருக்கும்போது கூற்றுவன் அருகே வருவானா?

 
At 1:20 PM, Blogger thanara said...

அருமையான தமிழ்ப்பால்.
நன்றி நண்பரே.

 
At 2:00 AM, Blogger rnatesan said...

என்ன தவம் செய்தோம் கம்பரே,
எங்கள் இரவாவின் படைப்பினை இங்கும் காண!!
என்ன தவம் செய்தனை......!

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4