Sunday, May 14, 2006

இப்படிக்கு... மு.க.



அம்மாக்கள் தினமாம் இன்று!
சொந்த அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பும்...
வயது மீறிவிட்டது!
ஆகவே
உனக்கு அனுப்புகின்றேன்
ஒரு வாழ்த்து!

நீ வாழிய ..வாழிய


நீ இல்லையென்றால்
எனக்கு
இத்தனை புகழ் ஏது?


நீ வித்தியாசமான அம்மா..
எல்லா அம்மாக்களும்
உள்ளிருந்து
வெளியே அனுப்புவார்கள்!
என்னை நீ
வெளியேயிருந்து
உள் அனுப்பினாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய


என் மீது
ஆட்சி புரிந்தாய்..
எனக்காக
விட்டுக்கொடுத்திருக்கின்றாய்..
சிலநேரம்
பெட்டியும் கொடுத்திருக்கின்றாய்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய


ஆயிரத்தில் ஒருத்தியாக வந்து
கோடியில் ஒருத்தி ஆனாய்
கொடிகளின் சலசலப்பில்
கோடியை நகர்த்திப் போனாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய

நான் எழுதிய வசனத்தில்
கிடைத்த பெருமையை விட

நான் எழுதாத வசனமான
"அய்யோ கொலை பண்றாங்க
அய்யோ கொலை பண்றாங்க "


இதில் கிடைத்த
இரக்கத்தில்தான்
ஆட்சியைப் பிடித்தேன்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய

நீ இருக்குமிடத்திற்கு
நான் வரத் தெம்பில்லை
நான் இருக்குமிடத்திற்கு
நீ வரத் தைரியமில்லை

சட்டசபையில் நீயும் நானும்
சந்திப்போமா..?
சந்தித்தாலும், முடியாவிடினும்
நீ வாழிய ..வாழிய


என்னை
தாத்தா என்றழைப்பவர்களும்
தாங்கிப்பிடிக்கின்றார்கள்!
அப்பா என்றழைப்பவர்களும்
அருகில் உண்டு!
தலைவா என்றழைக்கும்
தொண்டர்களுமுண்டு!
ஆனால்
உன்னை மட்டும் எப்படி
ஒட்டுமொத்தமாய்
அம்மா என்று
அழைக்கிறார்கள்?
அம்மா..
நீ வாழிய ..வாழிய


சுவரொட்டிகளில்
செல்வியாகின்றாய்
சுற்றியுள்ளவர்களுக்கு
அம்மாவாகின்றாய்..?


செல்வி அம்மாவாகலாம்
அம்மா செல்வியாகமுடியுமா?

அம்மா கொஞ்சம் சொல்லம்மா?


என்னை எப்போதும்
எதிர்த்துக்கொண்டே இரு..

நான் புகழ்பெறவேண்டும்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய

இப்படிக்கு

மு.க.




-ரசிகவ் ஞானியார்

4 Comments:

At 6:57 AM, Blogger VSK said...

சரியான நேரத்தில் சிறந்த கற்பனை!

நன்றாக இருந்தது!

ஒரு இடம் மட்டும் மாறியிருக்கலாமோ என நினைக்கிறேன்!

"அம்மா செல்வி ஆகலாம் - ஆனால்
'செல்வி'[ராதிகா] அம்மா ஆக முடியுமோ?"

என இருந்திருந்தால் பொருள் சிறப்பாக வந்திருக்குமோ?!!

 
At 7:04 AM, Anonymous Anonymous said...

ஞானியார்,அன்னையர் தினத்தில் அரசியல் கலந்த கவிதை!! வித்தியாசமான சிந்தனை!!
வாழ்த்துக்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

 
At 11:43 AM, Blogger VSK said...

சரியான நேரத்தில் சிறந்த கற்பனை!

நன்றாக இருந்தது!

ஒரு இடம் மட்டும் மாறியிருக்கலாமோ என நினைக்கிறேன்!

அம்மா செல்வி ஆகலாம் - ஆனால்
'செல்வி'[ராதிகா] அம்மா ஆக முடியுமோ?

என இருந்திருந்தால் பொருள் சிறப்பாக வந்திருக்குமோ?!!

 
At 1:46 AM, Blogger மஞ்சூர் ராசா said...

எஸ்கே சொல்லுவது போல
"அம்மா செல்வி ஆகலாம் - ஆனால்
'செல்வி'[ராதிகா] அம்மா ஆக முடியுமோ?"

இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4