Monday, May 22, 2006

இந்த பதிவில் உள்ள உள்குத்து என்ன?கண்டு பிடியுங்கள்


விருத்தாசலம் : ""தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங் கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்'' என எம்.எல்.ஏ., விஜயகாந்த் கூறினார்.

எம்.எல்.ஏ.,யாக பதவி ஏற்ற பின்னர் விருத்தாசலம் தொகுதிக்கு நேற்று முதல் முறையாக விஜயகாந்த் வந் தார். முதல் விசிட்டிலேயே தொகுதியை கலக்கினார்.

விருத்தாசலத்தில் முதலில் சட்டசபை தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் விஜயகாந்த், கடலுõர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார். அங்கு தலைமை ஆசிரியர் இல்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். "டி.இ.ஓ., ஆபிசுக்கு சென்றுள்ளார்' என கூறினர். தொடர்ந்து அங்குள்ள ஆசிரியர்களிடம் "எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். தேவையான கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா?' எனக்கேட்டார். அதற்குள் மின்னல் வேகத்தில் வந்த தலைமை ஆசிரியர் ஜவகர், விஜயகாந்திடம் விளக்கினார். தொடர்ந்து அவர் பள்ளியில் கட்டட வசதி குறைவாக உள்ளதால் மாணவர்களுக்கு அசவுகரியமாக உள்ளது எனக்கூறி பாழடைந்த "ப' வடிவ கட்டடத்திற்கு அழைத் துச்சென்றார். அங்கு 13 வகுப் புகள் மிகவும் சிதிலமடைந் துள்ளதை எம்.எல்.ஏ., விஜயகாந்திடம் தலைமை ஆசிரியர் காண்பித்தார். அனைத்து வகுப்பு மற்றும் கட்டடத்தை சுற்றிப்பார்த்த எம்.எல்.ஏ., விஜயகாந்த் இதுகுறித்து நான் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்துப்பேசி புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். எந்த பிரச்னைகளாக இருந்தாலும் உடனே என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறினார்.

அதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்ற விஜயகாந்த் அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து பள்ளிக்கட்டடம் ஏன் பராமரிக்கப்படவில்லை எனக்கேட்டார். அதற்கு அதிகாரிகள் அந்த வகுப்புகளை சீரமைக்க மொத்தம் ரூ.25 லட்சம் தேவைப்படும். அதற் கான எஸ்டிமேட் உடனடியாக தயார் செய்துவிடுகிறோம் என்றனர். உடனே தயார் செய்து நபார்டு வங்கி மூலம் கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என் றார்.

அடுத்து விஜயகாந்த் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். ஆர்.டி.ஓ., ஜான்லுõயிஸ் விஜயகாந்தை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது, விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் டாக்டர் வள்ளுவன் (பா.ம.க.,), விஜயகாந்திடம் நேரில் சென்று வாழ்த்து கூறி நகர வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மேலும் தொகுதிக் குட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் ஆர்.டி.ஓ., விஜயகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதிகாரிகளோ எம்.எல்.ஏ., என்பதை காட்டிலும் நடிகர் என்பதால் ஒருவித எதிர்பார்ப்போடு விஜயகாந்திடம் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., விஜயகாந்த் பேசியதாவது:

எனது முதல் அரசியல் அனுபவம் இதுதான். நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்று இந்த தொகுதிக்கு வந் துள்ளேன். இந்த தொகுதியை சீரமைக்க உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு உரிய மரியாதையை நான் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த மரியாதையில் இம்மியளவும் குறைவு இருக்காது. விஜயகாந்த் என்ற தனிமனிதன் நிறைய உதவிகள் செய்திருந்தாலும். உங்களை போன்ற அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தொகுதி மக்களுக்கு நிறைய பணிகள் செய்ய உள்ளேன். அதற்கு உங்களது பூரண ஒத்துழைப்பு தேவை. இன்னும் ஓரிரு மாதங்களில் விருத்தாசலத் தில் வீடு எடுத்து அடிக்கடி வந்து தங்குவதற்கு முயற்சி செய்வேன். அப்போது நீங்கள் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து என்னிடம் கருத்து தெரிவிக்கலாம் .

இவ்வாறு விஜயகாந்த் பேசினார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி பிரமுகர்கள் சென்றனர்.

"ஆண்டுக்கு 2 சினிமாவில் நடிப்பேன்'விருத்தாசலத்தில் விஜயகாந்த், நிருபர் களிடம் கூறியதாவது:

முதலில் இந்த தொகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர், மருத்துவம், மின்வசதி, உயர்கல்வி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தீர்க்க ஏற்பாடு செய்வேன். நான் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், நான் ஜெயித் தது மட்டுமல்லாமல் எனது கட்சி வேட் பாளர்களும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் மட்டுமே முடியும். தற்போது எனது தொகுதிக்குண்டான தேவைகளை மட்டும் அரசிடம் கேட்டும், தேவைப் பட்டால் போராடியும் பெற்றுத் தருவேன்.

எனக்கு ஓட்டு போட்டு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது மக்களிடம் திராவிடக் கட்சிகளின் மீதுள்ள எதிர்ப்பையே காட்டுகிறது. நான் எனது தொகுதிக்கு குறைந்தது மாதம் இரண்டு முறையாவது வருவேன். தொகுதி பிரச்னை குறித்து அரசிடம் எடுத்துக்கூறுவேன். இப்போதுதான் எம்.எல்.ஏ.,வாகி அரசியலுக்கு வந்துள்ளேன். போகப் போக இன்னும் நேரம் எடுத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு எனது கடமையை செய்வேன். நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங்கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதற்கு இப் போது அவசரம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருப் பேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த வருமானத்தை வைத்து இன்னும் தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன். தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவேன். கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்குப் பிறகு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் களை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறேன். கட்சி பிரச்னைகளை பற்றி நிருபர்கள் கேட்டபோது எங்கள் கட்சி பிரச்னை நீங்கள் தோண்டி தோண்டி கேட்காதீர்கள். தேர்தல் நேரத்தில் கட்சிப்பணி செய்யாதவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

6 Comments:

At 2:12 AM, Anonymous Anonymous said...

Enakkau en poshappu than mukkiyam. Arasiyal oru part time job.

 
At 10:48 AM, Blogger முத்தமிழ் said...

சரியான விடை நண்பரே.
அதனாலேயே இதை அரசியல் என்று வகைப்படுத்தாமல் சினிமா/பொழுதுபோக்கு என வகைப்படுத்தி ஸ்டன்ட் என உள்குத்து வைத்தோம்.


முத்தமிழ்

 
At 11:05 AM, Blogger VSK said...

Including Karunanidhi, everyoneis taking care of their 'pozhappu' only!

This man says it honestly, which is an admirable quality!

That's all!

It is not surprising that it's a joke for you!

 
At 11:51 AM, Blogger முத்தமிழ் said...

சகோதரர் எஸ்.கே,

உங்கள் நகைச்சுவை உணர்வு எங்கே?:-)))

இது ஒரு சின்ன நையாண்டி,கலாட்டா.அவ்வளவுதான்.

 
At 12:10 PM, Blogger VSK said...

மன்னிக்கவும்!
இப்போதெல்லாம் வி.க.வை நக்கலடிப்பது ஒரு கலையாக செய்யப்படுவதால், எழுதி விட்டேன்.

சந்திரபாபுவும், வடிவேலும் தங்களை வருத்திக் காமெடி செய்யும்போது அது நகைச்சுவை;
அதே சமயம், கவுண்டமணி செந்திலை உதைத்து, அடித்து பண்ணும் போது அது எரிச்சலை வரவழைப்பது Pஒல என வைத்துக் கொள்ளுங்களேன்!

தொகுதிக்கு உடனே சென்று, ஆவன செய்ய விழைகிறார்.
ஒரு 6 மாதம் பொறுங்களேன்!
விஷயம் இருந்தால் நானும் சேர்ந்து வருகிறேன், போட்டுத் தாக்க!!

நன்றி.

 
At 12:29 PM, Blogger முத்தமிழ் said...

இக்கட்டுரை சும்மா ஒரு நையாண்டிக்கு எழுதப்பட்டது தான் நண்பர் எஸ்.கே அவர்களே.
எங்கள் முத்தமிழ் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எழுதிய கட்டுரைகளை வலையேற்றம் செய்து வருகிறோம்.அப்படி எங்கள் குழுவில் இடப்பட்ட கட்டுரைதான் இது.இதற்கு முன் பல கட்சிகளை நையாண்டி செய்து எழுதியுள்ளோம்.
விஜய்காந்த் மீது எங்களுக்கு உயர்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4