Monday, July 10, 2006

யார் இவர்?



அன்பு நண்பர்களே தனிமையில் அமைதியாக உட்கார்ந்து கடிதம் படித்துக்கொண்டிருக்கும் இந்த நண்பர் யாரென்று தெரிவிப்பவர்களுக்கு அருமையான பரிசு காத்திருக்கிறது.
பலரும் கேட்டதற்கிணங்க இந்த புகைப்படத்துடன் இரண்டு புதிய போட்டிகளும் சேர்ந்துக்கொள்கின்றன. ஆக மொத்தம் மூன்று போட்டிகள். மூன்று பரிசுகள்.

மூன்றிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கிறது.


இப்பொழுது போட்டிகள் பற்றிய விவரம்:

இந்தப் படத்தில் இருப்பவர் யார்
இந்தப் படத்திற்கான அருமையான கவிதை
இந்தப் படத்திற்கான அருமையான சிறுகதை.

நிபந்தனைகள்:

1. கவிதை 15 வரிகளுக்கு மேல் போகக் கூடாது. மரபுக் கவிதை, வெண்பா, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்.

2. கதை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (நகைச்சுவை, சோகம், உணர்ச்சி ததும்ப என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்)

3.முக்கிய நிபந்தனை: ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தக்கூடாது. எழுத்துப்பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

4. ஒருவரே மூன்று போட்டிகளிலும் கலந்துக்கொள்ளலாம்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

ஆக்கங்களை அனுப்ப கடைசி தேதி 20.7.2006

அனுப்ப வேண்டிய முகவரி: muththamiz@gmail.com

2 Comments:

At 3:53 AM, Blogger மஞ்சூர் ராசா said...

அமைதியா கடிதம் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் இவரை எங்கேயோ பார்த்த மாதிரித்தான் இருக்கு. யோசிக்கிறேன்.

 
At 4:16 AM, Blogger நிலா said...

படம் நல்லாருக்குங்க

இப்படி மொட்டையா யாருன்னு கேட்டா ரொம்ப கஷ்டமாச்சே... ஏதாவது ஒரு சின்ன குறிப்பு தாங்களேன் - இவர் வலைப்பதிவாளரா பிரபலமா இப்படி ஏதாவது...


போட்டிக்கு பத்தே நாள் கொடுத்தா என்ன செய்யறது... சரி, பார்ப்போம் முடியுதான்னு... இந்த மாதிரிப் போட்டிகளுக்கெழுதியே புத்தகம் போட்டிறலாம் போலிருக்கே:-)

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4