மாகோ'வின் உளரல்
இது எப்படி இருக்கு (178)
ஞானம்
=============================
1. கீழ்நிலை: மாக்கள்
==================
இவற்றின் வாழ்க்கை,
ஒன்றிலிருந்து மற்றொன்று
மாறுபட்டிருப்பதில்லை.
எல்லாமே இயற்கையாக
பிறந்து, வளர்ந்து,
இறந்துபோகும் அல்லது மற்ற
உயிர்களுக்கு
உணவாகிவிடும்.
சில, மற்ற மாக்களையும்
உண்டு வாழும் - ஆனால்
இயற்கையின்
நியதிப்படிதான்.
2. இடைநிலை: மக்கள்
====================
ஒருவரிலிருந்து மற்றவர்
பலவகைகளிலும்
மாறுபட்டிருப்பர்.
நாடு, மொழி, மதம், இனம், சாதி
போன்ற பலவழிகளிலும்
பிரிந்து வாழ்வர்.
மீன், கோழி, ஆடு, மாடு, நாய்..
போன்ற மாக்களைக் கொன்று,
தின்று வாழ்வர்.
இவ்வளவுக்கும் இவர்கள்
காய், பழம், கீரை
போன்றவற்றை
உண்ணவேண்டியதுதான்
இயற்கையின் நியதி.
3. மேல்நிலை: நல்ல
மனித(ஆத்)மாக்கள்
===================================
இயற்கையின் உண்மையை
புரிந்துகொண்டவர்கள்.
உயிர்களை
துன்புறுத்தமாட்டார்கள்.
மக்கள் செய்யும்
'கோமலித்தனங்க'ளை
சிறுகுழந்தை செய்யும்
குறும்புகளாக எண்ணி
மன்னிப்பவர்கள்.
'அவனன்றி ஓரணுவும் அசையாது'
என்ற உண்மை புரிந்தவர்கள்.
4. அதுக்கும் மேலே: ஞானிகள்
=======================
மேற்குறிப்பிடப்பட்ட எந்த
நிலையைப் பற்றியும்
கவலைப்படாதவர்கள்.
பாசம், பற்று அனைத்தயும்
அறுத்தவர்கள்.
பேருக்கும் புகழுக்கும்
அப்பாற்பட்டவர்கள்.
எனக்குத்தெரிந்து ஒருவர்
இருந்திருக்கிறார், அவர்
தான் புத்தர்.
=================
மாகோ'வின் உளரல்
2004
2 Comments:
உளறல் என்றல்லவா இருக்கவேண்டும்?
ஹே.. ஹே..
'உளறல்' என்பது சரிதான்.
நான் தான் உளரிவிட்டேன்.
ஹே..ஹே..
======
மாகோ.
Post a Comment
<< Home